சுக்ரனின் சிறப்பாம்சம்
===================
1. சுக்கிரன் பெண்ணின் கருப்பை குறிப்பவர்.
2. சுக்கிரனே வீடு மற்றும் வாகனத்தை குறிப்பவர்.
3. கலை தொழில் நீடிக்க சுக்கிர பலம் அவசியமானது.
4. சனி நட்சத்திரத்தில் அமரும் சுக்கிரன் பலவான்.
5. சுக்கிரன் வானில் எதிர் கடிக்கார சுழற்சியில் சுற்றுகிறது.
6. வக்கிரமான சுக்கிரன் ராகுவிற்கு சமம்.
7. உபய ராசிகள் சுக்கிரனுக்கு பிடித்தமானவை. அதில் கன்னி மட்டுமே விதிவிலக்கு.
8. சுக்கிரன் மகளை குறிக்கும் கிரகம். ஆகவே சுக்கிரன் அஸ்தங்கம் நல்லதல்ல.
9. சுக்கிரனை சந்திரன் பலமாக பார்ப்பது தாம்பத்ய குறைபாடுகள் தருகிறது.
10. சுக்கிரன் உள்ளவட்ட கிரகம் என்பதால், அது அடிக்கடி வக்ரமாவதில்லை.
11. சுக்கிரன் அமர்ந்த நட்சத்திர அதிபதி உங்கள் மனைவி பற்றி கூறிவிடும்.
12. உயர்கல்வி கொடுப்பதும் சுக்கிரனே.
13. சுக்ரன் சிவபக்தன் ஆகவே அவருக்கு சஞ்சீவினி மந்திரம் அருளினார் சிவபெருமான். இது நோய்போக்கும் வல்லமை கொண்டது. ஆகவே சுக்கிரன் அசுப கிரகங்களான செவ்வாய் அல்லது சனி மீது விழ, அசுப தன்மை குறையும்.
14. பிரம்மஹத்தி எனப்படும் சனி செவ்வாய் இணைவில் சுக்கிரன் இருக்க அல்லது பார்க்க, பிரம்மஹத்தி தோசத்திற்கான அசுப பலன்கள் குறையும்.
15. சுக்ரனுக்கு பிருகு என்ற பெயருண்டு. சுக்கிரன் செவ்வாயுடன் சேர அல்லது பார்க்க, அது பொன் பொருள் சேர்க்கை தரும்.
16. தென்கிழக்கு எனும் அக்னிமூலை குறிப்பது சுக்கிரன். ஆகவே தென்கிழக்கு மூலை கெட்டால் சுக்கிர காரகத்துவ குறைபாடுகள் உண்டாகும்.
17. வாஸ்துப்படி வீடு அமைத்து அங்கு அக்னிமூலையில் அடுப்பெரியாத வீட்டில் சுக்ர காடாக்ஷம் இல்லை.
18. சுக்கிரன் பலமானவர்களுடன் நாய்கள் நெருங்கி பழகும். நாய்களால் அவர்களுக்கு தொல்லை இல்லை. சனி + ராகு இணைவு நாய் என்பதால், அது சுக்கிரனுக்கு அதிநட்பாகவே இருக்கும்.
19. சுக்கிரன் நீர் கிரகம் ஆதலால், சுக்கிர பலம் பெற்றவர்கள் நீர்நிலைகளில் அதிகம் விளையாட விரும்புவார்கள்.
20 விந்தணு நீர்த்தவனுக்கு சுக்ர பலம் குறைவு
Comments
Post a Comment