ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 12 ஆம் பாவத்தில் "சனி,செவ்வாய், புதன்" இந்த மூன்று கிரங்களில் ஏதேனும் ஒரு கிரகம் இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் எந்த மாதிரி

 🌹ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 12 ஆம் பாவத்தில் "சனி,செவ்வாய்,

புதன்" இந்த மூன்று கிரங்களில் ஏதேனும் ஒரு கிரகம் இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் எந்த மாதிரி பிரச்சனைகள்,பலன்கள், ஏமாற்றங்கள் கஷ்டங்கள் இருக்கும் என்பதை இந்த பதிவில் நாம் மிகத் தெளிவாக பார்க்கலாம்.


🌹ஏற்கனவே முந்தைய பதிவு எல்லாம் 12 ஆம் பாவத்தில் "சூரியன்,சுக்கிரன் குரு" இருப்பவர்களுக்கு எந்த மாதிரி பலன்கள் பிரச்சனைகள் ஏமாற்றங்கள் இருக்கும் என்பதை பார்த்தோம் இந்த பதிவில் 12-ஆம் பாவத்தில் "சனி செவ்வாய்,புதன்" இருப்பவர்களுக்கு எந்த மாதிரி பலன்கள் பிரச்சனைகள் இருக்கும் என்பதை பார்க்கலாம்.


🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷


1.♋(12ம் பாவத்தில் "சனி பகவான்")


♦யாருடைய ஜாதகத்தில் எல்லாம் லக்னத்தில் இருந்து 12 ஆம் பாவத்தில் சனிபகவான் இருக்கின்றதோ அவர்களுக்கு தொழில் சார்ந்த விஷயங்களின் மூலமாக தேவையில்லாத வெட்டிச் செலவுகள் வெட்டி விரயங்கள், பண செலவுகள், பணக்கஷ்டங்கள் என்பது இவர்களுக்கு வாழ்க்கையில் கண்டிப்பாக ஏற்படும்.


♦தொழில் மூலமாக அடிக்கடி இவர்களுக்கு வெட்டி செலவுகள் வெட்டி விரயங்கள் பண செலவுகள் என்பது இவர்களுக்கு ஏற்பட்டு கொண்டுதான் இருக்கும்.கடன் வாங்கி, சீட்டு எடுத்து,லோன் எடுத்து இவர்கள் தொழில் செய்து பிறகு தொழிலில் தேவையில்லாத பிரச்சனைகள் நஷ்டங்கள் ஏமாற்றங்கள் இவர்களுக்கு ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.


♦தொழில் மூலமாக இவர்களுக்கு கடன் பிரச்சனைகள் பண கஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.கடன் வாங்கி தொழில் செய்யக்கூடிய நிலைமைகள் தான் இவர்களுக்கு வாழ்க்கையில் ஏற்படும்.இவர்கள் எந்த தொழில் செய்தாலும் அந்த தொழில் மூலமாக இவர்களுக்கு வெட்டிச் செலவுகள் வெட்டி விரயங்கள் பண செலவுகள் பணக்கஷ்டங்கள் என்பது இவர்களுக்கு அடிக்கடி ஏற்பட்டு கொண்டே இருக்கும்.


♦இவர்கள் தொழில் ரீதியான விஷயங்களில் செய்யக்கூடிய மிகப்பெரிய தவறு என்னவென்றால் அளவுக்கு அதிகமாக பணத்தை முதலீடு செய்வதுதான் எவ்வாறு தொழிலில் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் எவ்வளவு செய்ய வேண்டும் என்பது இவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.


♦இதன் காரணமாகவே இவர்களுக்கு தொழில் ரீதியான விஷயங்களில் தேவையில்லாத விரைய செலவுகள் பண விரயங்கள் இவர்களுக்கு ஏற்பட்டு கொண்டே இருக்கின்றது.இவர்கள் சரியான தொழிலை தேர்ந்தெடுத்து தொழில் செய்ய மாட்டார்கள்.அதாவது ஜாதகத்திற்கு தகுந்தவாறு ஏற்றவாறு இவர்கள் சரியான தொழிலை தேர்ந்தெடுத்து தொழில் செய்ய வேண்டும்.அப்படி செய்தால் தான் இவர்களுக்கு தொழில் சார்ந்து இதுபோன்ற பிரச்சனைகள் வராமல் இருக்கும்.


🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷


2.♋(12ம் பாவத்தில் "செவ்வாய் பகவான்")


♦யாருடைய ஜாதகத்தில் எல்லாம் லக்னத்தில் இருந்து 12 ஆம் பாவத்தில் செவ்வாய் பகவான் இருக்கின்றதோ அவர்களுக்கு வீடு வண்டி வாகனங்கள் சொத்து நிலங்கள் இந்த விஷயங்கள் மூலமாக பணக்கஷ்டங்கள் பண செலவுகள் வெட்டி விரயச் செலவுகள் என்பது இவர்களுக்கு கண்டிப்பாக வாழ்க்கையில் ஏற்படும்.


♦அடிக்கடி வீடு,வண்டிகள்,

வாகனங்கள் சார்ந்து இவர்களுக்கு பண செலவுகள் வெட்டி விரயங்கள், வெட்டி செலவுகள் என்பது இவர்களுக்கு ஏற்பட்டு கொண்டே இருக்கும்.கடன் வாங்கி ,லோன் எடுத்து இவர்கள் வீடு வாகனங்கள் சொத்து நிலங்கள் வாங்கும் படியான சூழ்நிலையில் இவர்களுக்கு வாழ்க்கையில் கண்டிப்பாக வரும்.பிறகு இதனால் தேவையில்லாத பிரச்சினைகளிலும் ஏமாற்றங்களிலும் சிக்குவார்கள்.


♦வீடு வாகனங்கள் சொத்து நிலங்கள் வண்டிகள் சார்ந்த விஷியங்களில் இவர்களுக்கு வெட்டி செலவுகள் பணக்கஷ்டங்கள் கடன் பிரச்சனைகள் என்பது இவர்களுக்கு ஏற்படும்.தேவையில்லாமல் housing loan போட்டு இவர்கள் பிறகு கட்ட முடியாமல் அதனால் இழப்புகளை பிரச்சனைகளை சந்திப்பார்கள்.


♦மேலும் இவர்களுக்கு ஒரு வேளை இளைய சகோதரர்கள் சகோதரிகள் இருந்தார்கள் என்றால் அவர்கள் மூலமாகவும் நெருங்கிய நண்பர்கள் மூலமாகவும் அடிக்கடி இவர்களுக்கு விரைய செலவுகள், வெட்டி செலவுகள்,பண கஷ்டங்கள் வந்து கொண்டு இருக்கும்.


🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷


3.♋(12ம் பாவத்தில் "புதன் பகவான்")


♦யாருடைய ஜாதகத்தில் எல்லாம் லக்னத்திலிருந்து பன்னிரண்டாம் பாவத்தில் புதன் பகவான் இருக்கின்றதோ அவர்களுக்கு படிப்பு சார்ந்த விஷயங்களின் மூலமாக வெட்டி செலவுகள் கடன் பிரச்சினைகள் வெட்டி விரயங்கள் பணக்கஷ்டங்கள் என்பது இவர்களுக்கு கண்டிப்பாக வாழ்க்கையில் ஏற்படும்.


♦படிப்பு சார்ந்த விஷயங்களில் மூலமாக இவர்களுக்கு அடிக்கடி வெட்டிச் செலவுகள் பண விரயங்கள் வந்து கொண்டே இருக்கும் உயர் படிப்பிற்காக மேற்படிப்பிற்காக இவர்கள் பணத்தை கடன் வாங்கி படித்தார்கள் என்றால் பிறகு அந்த கடனை அடைக்க முடியாமல் தேவையில்லாத பிரச்சனைகளில் ஏமாற்றங்களில் கண்டிப்பாக இவர்கள் சிக்குவார்கள்.


♦மேலும் இவர்களுக்கு கடன் பிரச்சனைகள் ,சீட்டு,ஏலம், நகை அடமானங்கள், loan,credit card இது சார்ந்த விஷயங்கள் மூலமாக இவர்களுக்கு தேவையில்லாத பிரச்சனைகள் பணக்கஷ்டங்கள் வெட்டிச் செலவுகள் என்பது இவர்களுக்கு வாழ்க்கையில் கண்டிப்பாக ஏற்படும்.


♦இவர்கள் யாரிடத்திலாவது பணத்தைக் கடன் கொடுத்தார்கள் என்றால் அந்த பணம் இவர்களுக்கு திரும்ப வராது.கொடுத்த கடன் பணத்தை இவர்கள் வாங்குவதற்குள் வாழ்க்கையில் படாத பாடு பட்டு விடுவார்கள்.அதேபோன்று இவர்கள் பணத்தை கடன் வாங்கினார்கள் என்றால் இவர்களால் வாங்கிய கடனை அடைக்க முடியாது மிகவும் கஷ்டப்பட்டு விடுவார்கள்.


♦நகைகளை இவர்கள் அடமானம் வைத்தார்கள் என்றால் அடமானம் வைத்த நகைகளை மீட்பதற்கு இவர்கள் மிகவும் சிரமப்பட்டு விடுவார்கள்.அதேபோன்று இவர்கள் ஏதாவது loan எடுத்தார்கள் என்றால் எடுத்த loanஐ இவர்களால் அவ்வளவு எளிதாக அடைக்க முடியாது.

மேலும் credit cardஐ இவர்கள் வாங்கினார்கள் என்றால் மிகப்பெரிய பிரச்சினைகளில் சிக்கல்களில் கண்டிப்பாக இவர்கள் மாட்டிக்கொள்வார்கள்.


♦அதேபோன்று "Share market,Stock market,Trading, Glambling இது போன்றவற்றில் இவர்கள் பணத்தை முதலீடு போட்டார்கள் என்றால் நஷ்டங்கள் ஏமாற்றங்கள் தான் இவர்களுக்கு ஏற்படும். பிறகு இதனால் தேவையில்லாத பிரச்சினைகள் கஷ்டங்கள் இவர்களுக்கு வாழ்க்கையில் கண்டிப்பாக ஏற்படும்.


🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷


🌹மேற்கொண்டு யாருடைய ஜாதகத்தில் எல்லாம் லக்னத்தில் இருந்து 12 ஆம் பாவத்தில் "சனி,செவ்வாய்,புதன்" இந்த மூன்று கிரகங்களில் ஏதேனும் ஒரு கிரகம் இருக்கின்றதோ அவர்கள் இந்த பதிவில் நான் சொல்லியிருப்பதை உங்களுடைய நடைமுறை வாழ்க்கையில் பொருத்திப் பாருங்கள் எல்லாம் மிகச் சரியாக இருக்கும்.


🌹இந்த சூட்சமத்தை உங்களுடைய ஜாதகத்தில் பொருத்திப் பாருங்கள் எல்லாம் மிகச் சரியாக இருக்கும்.


🌹மேலும் இந்த சூட்சமத்தை லக்னத்தில் இருந்து 12 ஆம் பாவத்தோடு தான் பொருத்திப் பார்க்க வேண்டும் ராசியிலிருந்து 12 ஆம் பாவத்தோடு பொருத்திப் பார்க்கக் கூடாது லக்னத்தில் இருந்து தான் பார்க்க வேண்டும்.






Comments