தகாத வார்த்தைகளுக்கு பூட்டுபோடுவோம்.......
கோபம் வந்தால் எல்லா மனிதர்களும் தன்னிலை
மறந்து போகிறார்கள். இதுவே வாய்மொழி வன்முறை
என்பதாகும். வாய்மொழி வன்முறையும் பலருக்கு மிகப்
பெரிய மனக் காயத்தை ஏற்படுத்தும். மற்றவர் முன்னி
லையில்கேலிசெய்வது;மட்டம் தட்டிப் பேசுவது;அவர்
பேச விரும்பாத விஷயத்தைப் பேசுவது; குத்திக்காட்டிப்
பேசுவது; அவமானப்படுத்தும் நோக்கில் பேசுவது;
அபாண்டமான குற்றச்சாட்டைச் சுமத்துவது ஆகிய
அனைத்தும் வன்முறையே. ஒருவருடைய இனம், நிறம்,
வயது, தோற்றம், இயலாமை, மொழி, மதம், நம்பிக்கை,
பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில்இழிவாகப் பேசி
னால் அது குற்றம்.
வார்த்தை என்பது ஒலிகளின் ஓசை மட்டுமா? அது
எழுத்துகளின் சேர்க்கை. வார்த்தைகள் என்பது சொற்களின் கோர்வை.ஆகவே,சொற்களைகோக்கும்போது நம்
சொற்களில் கவனம் இருக்க வேண்டும். மனிதர்களின்
நாக்கு கத்தியைவிடக் கூர்மையானது. மோசமான நாக்கு
ஒருவரின் நம்பிக்கையை சிதைக்கும்; பெருமையைப்
பொசுக்கும்;உள்ளத்தில்ஆறாத ரணத்தை உண்டாக்கும்;
பழியைச் சுமத்தும்; புகழைக் கெடுக்கும்; ஊரையே அவருக்கு எதிராகத் திருப்பி, புழுதிவாரி தூற்ற வைக்கும்.
சிதறாத வார்த்தைகள் சீரான வாழ்க்கையைத் தரும். வாய்தவறி விழும் பேச்சுகள், கைதவறி விழும்
கண்ணாடியைவிடக் கூர்மையானவை. ஒருவரிடம் நாம்
பேசும்போது நாம் என்ன அர்த்தத்தில் பேசுகிறோம் என்பதைவிட, நாம் கூறுவதைக் கேட்பவர் எந்த அர்த்தத்தில்
அதைப் புரிந்துகொள்வார் என்பதைக் கவனித்துப் பேச
வேண்டும். ஒரே வார்த்தையில் அதிகபட்ச மகிழ்ச்சியையும், ஒரே வார்த்தையில் கடும் வேதனையையும் தரும்
வல்லமை படைத்தது நம் நாக்கு.
மவுனமும், புன்னகையும்தான் இந்த உலகில் மிகவும்
சக்தி வாய்ந்த ஆயுதங்கள். புன்னகை பிரச்சினைகளைத்
தீர்க்கும்; மவுனமோ பிரச்சினைகளே வரவிடாமல் தடுக்கும். நம் மவுனத்தைக் கண்டு பயப்படுவார்கள். நாம் ஆழமாகக் காயப்பட்டு இருக்கிறோம் என்பதையும் நம் மவுனம் உணர்த்தும். யோசிக்காமல் சட்டென ஒரு
வார்த்தையைப் பேசிவிட்டதால் முறிந்து போன உறவுகளும், நட்பும் ஏராளமாக இருக்கக்கூடும். அந்த
விநாடியில்அந்த வார்த்தை தவிர்க்கப்பட்டிருந்தால், பல
இன்னல்கள் காணாமல் போயிருக்கும். வீட்டு சண்டையின்போதும் சட்டென பேச்சு கடுமையாகிப் போய்விடுகிறது.வாய் வார்த்தை வளர்ந்துசர்ச்சைக்குவித்திடுகிறது.
கணவன்-மனைவி,மாமியார்-மருமகள்
,மருமகன்-மாமனார், சகோதர, -சகோதரிகள் இடையே சண்டை வரும்-
போது அதை கவனிக்கும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
இதுஅவர்களின் மனநிலையைப் பாதித்து,
படிப்பில் இருக்கும் நாட்டத்தையும் குறைத்துவிடுகிறது.
வீட்டில் அமைதியான, இனிமையான சூழல் இருந்தால்
மட்டுமே குழந்தைகளின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும்.
அனைவரும் எதிராளிக்கு சமமாக நின்று பேச முடியாது;
பேசத் தெரியாது. சண்டை போடப் பிடிக்காத அவர்கள்
சகித்துக் கொண்டு மவுனமாக இருந்துவிடுவார்கள். யார்
பக்கம் சரி,யார் பக்கம் உண்மை உள்ளதுஎன்பதுஅபாண்டமாகப் பேசுபவருக்கும், அந்த ஆண்டவனுக்கும் தெரியும். அதுவே போதும். அவர்கள் ஓரளவுக்கு அடங்கிப்
போகிறார்கள். ஒருகட்டத்தில் அவர்களும் பொங்கி எழு
கிறார்கள். மிதிக்க மிதிக்க, நசுங்கிச் சாவதற்கு ஒருவரும்
புழு அல்லவே.
சொல்லுக்குச் சொல் சிங்காரம் எதற்கு? என்பார்கள்.
அதுபோல பதிலுக்கு தடித்த வார்த்தைகளை
விட்டுவிடுகிறார்கள். அந்த நபர் இவர் சொன்னதை மட்டுமே அனைவரிடமும் சொல்லிச் சொல்லி பழிசுமத்துகிறார். சில சமயம் வாயடைத்துத்தான் போய்விடுகிறது.
என்ன செய்ய? பேசவார்த்தைகளற்றுஇருப்பது,அமைதி
வார்த்தைகள் இருந்தும் பேசாமல் இருப்பது மவுனம்.
தற்கொலைவய நிர்ணயிப்பது சாலைகள் மட்டுமல்ல;
வார்த்தைகளும்தான். கூடுமானவரை அவர்களை மன்னித்து விடுவோம். மன்னிக்காத மனம் அமிலத்தைப்
போன்றது. மனதை அரித்துவிடும்.
ஒரு நாள்ஒருகுதிரைக்காரன் ஒரு தோட்டம் வழியாகக்
கடந்துசெல்லநேர்ந்தது.அவனதுகுதிரைக்குத் தண்ணீர்
தரும்படி விவசாயியிடம் கேட்டான். விவசாயி மகிழ்ச்சி
யோடு தண்ணீர் எடுப்பதற்கு பெர்ஷியன் சக்கரத்தைச்
சுழலவிட்டான். ஆனால், குதிரை அந்த சத்தத்தைக்
கேட்டு பயந்து, கிணற்றின் அருகே நெருங்கி வரவே
இல்லை. குதிரைக்காரன் கேட்டான்: “என் குதிரை தண்ணீர்குடிப்பதற்காக இந்தச்சத்தத்தை நிறுத்த முடியுமா?’’
“முடியாது ஐயா. உமது குதிரை தண்ணீர் குடிக்க விரும்பினால் இந்தச்சத்தத்துடன்தான் குடிக்க வேண்டும்.இங்கே
சத்தத்துடன்தான் தண்ணீர் வரும்’’ என்றான் விவசாயி.
நட்புகூட குறைபாடுகளுடன்தான் இருக்கிறது. வாழ்வு
கூட மன்னிக்கும் மனநிலையில் இருந்துதான் ஊற்றெடுக்கிறது. மன நிம்மதியுடனும், மனநிறைவுடனும் வாழ-
வேண்டுமானால், கோபம் வரும்போது நம்
வார்த்தைகளுக்குக் கடிவாளம் போட வேண்டும்.
Comments
Post a Comment