அன்றைக்கு வேலை முடிஞ்சு கம்பெனி வெளிய வந்து பசங்களோட பேசிட்டு இருந்தேன். பொள்ளாச்சி மெயின்ரோடு ஒட்டிய கம்பெனி அது.
ரோட்டு ஓரமாதான் எங்க கம்பெனி வண்டி எல்லாம் நிற்கும்.
அதை ஒட்டிய தொலைவில் அதாவது "ரோட்டுல இருந்து பத்து இன்ச் பக்கத்துல நின்னு பந்தா காட்டிட்டுருக்கேன்…"
தாறுமாறா ஒரு லாரி வருது…
எல்லாரும் ஒதுங்கிட்டாங்க. ஆனா நான் கவனிக்கல (சோலி முடிய……..)
அழுக்கு சட்டை, ஜடா முடி, சூரியப் பார்வை கொண்ட ஒரு முதியவர் என்னை இழுத்துப் பற்றிக்கொண்டார்…! லாரி "விர்ரென்று" தாறுமாறா மூஞ்சிய ஒரசாத குறையா பாயுது…! குடலு நடுங்கிப்போச்சு…மூச்சிறைத்தது… கால் உரசி இலேசாக இரத்தம் கசிந்தது.
கையெடுத்து கும்பிட்டேன் அவரை, அவர் பேசவேயில்லை… கொஞ்ச தூரம் போனதும் தீப்பொறி பறக்கும் பார்வையுடன் பாத்தாரு, நடுங்கி வழியும் நான் பேயரைஞ்ச பார்வையுடன் பார்த்தேன்… அவர் புன்னகை பரிசாக வந்தது! எனக்கு புல்லரித்துப்போனது!
அவர் கடவுள்…!
அம்மா சாரதா தேவியிடம் யாரோ ஒருத்தரு இப்படி கேட்டாரு,"அம்மா கர்மவினையின் பலனை அனுபவித்தே ஆக வேண்டுமா?"
அதுக்கு அம்மாவோட பதில் இது"ஒருத்தருக்கு கால் துண்டா போகனும்னு கர்மவினை பதிவு இருந்தா அவன் இறைவனின் நாமத்தை தினமும் உச்சரிப்பவனாக இருந்தால் அவன் காலில் ஒரு முள் குத்துவதோடு அவன் பிழைத்துக்கொள்ளலாம் "!
இதை பின்நாளில் படித்து ஆடிப்போய்விட்டேன்…!
அன்னை ஸ்ரீ சாரதா தேவியே மறுபிறவியாக ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவியாக கேரள அமிர்தபுரியில் வீற்றிருக்கிறார்!
Comments
Post a Comment