*நாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்?

 *நாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்?* 


வெவ்வேறு காலகட்டங்களில் இப்ப்பூமியின் வெவ்வேறு பாகங்களுக்கு வந்து சென்ற அனைத்து இறைத்தூதர்களும் ஒரே இறைவனால் ஒரே கொள்கையைப் போதிப்பதற்காக அனுப்பப்பட்ட செம்மல்களே! அவர்கள் அனைவரையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். யாரையும் நிராகரிக்கக் கூடாது. அவர்கள் வேற்று நாட்டவர் அல்லது வேற்று மொழியினர் வேற்று காலத்தவர்கள் என்று கூறி புறக்கணிக்கவோ தரம்  தாழ்த்தவோ இறைவிசுவாசிகளுக்கு அனுமதியில்லை, ஏனெனில் நம் மனிதகுலம் என்பது ஒரே தாய் மற்றும் ஒரே தந்தையில் இருந்து உருவாகி உலகெங்கும் பல்கிப் பெருகியவர்களால் ஆனதே. அனைத்து இறைத்தூதர்களும்  நம்மவரே, அனைவரும் நமது மனித குடும்பத்துக்காக, நமது சகோதர சகோதரிகளை நேர்வழிப் படுத்த நமது இறைவனால் அனுப்பப்பட்ட சான்றோர் பெருமக்களே என்ற மனப்பாங்கோடு அவர்கள் அனைவரையும் மதிக்க வேண்டும்.


ஆனால் யாரை நாம் பின்பற்ற வேண்டும் என்பதை எப்படி தீர்மானிப்பது?

இறைத்தூதர்களின் வரிசையில் நம் மூதாதையருக்கு அனுப்பப் பட்டவர்களும் அடங்குவர், நம் நாட்டினருக்கு, நம் மொழியினருக்கு அனுப்பப்பட்டவர்களும் அடங்குவர். வேற்று நாட்டினருக்கு, வேற்று மொழியினருக்கு அனுப்பப்பட்டவர்களும் அடங்குவர்.  ஒரே கொள்கையையே அவர்கள் போதித்து இருந்தாலும் அந்தந்த காலகட்டங்களில் மக்களின் மனமுதிர்ச்சிக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு நடைமுறைச் சட்டங்களும் வணக்க வழிபாட்டு முறைகளும் அந்தந்த இறைத்தூதர்களால் போதிக்கப் பட்டன. இன்று வாழும் நாம் மறுமையில் வெற்றி அடைய வேண்டுமானால் அல்லது மோட்சம் பெற வேண்டுமானால் இறைவன் யாரை நமக்காக அனுப்பியிருக்கிறானோ அவரையே நாம் பின்பற்றியாக வேண்டும். அதை விடுத்து நாம் நம் இனத்துக்கு அல்லது நம் நாட்டுக்கு அல்லது நம் மொழிக்கு அனுப்பப்பட்ட தூதரையோ அல்லது வேதத்தையோ மட்டுமே பின்பற்றுவோம் என்று பிரிவினை வாதம் பேசினால் நஷ்டம் நமக்குத்தான். அதுவும் சாதாரண நஷ்டம் அல்ல – நிரந்தர நரகம் அது!


இன்று நமக்காக அனுப்பப்பட்ட இறைத்தூதர் முஹம்மது நபி அவர்கள் தான் என்பதற்கு ஆதாரமாக ஒரு சில தகவல்களை முன் உங்கள் பகுத்தறிவு கொண்டு ஆராய்வதற்காக முன்வைக்கிறோம்:


Comments