காலத்தின்
விதி 12 கட்டத்துக்குள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
கர்மம்
மட்டுமே
நமக்கு விதிக்கப்பட்டுள்ளது அழுவதற்கும் சிரிப்பதற்கும் தசாவாக வழங்கப்பட்டுள்ளது அவரவர்களின் நேரத்தின்
படி
அவைகள் வந்தே தீரும்
காலச்சக்கரத்தில் பிறந்தவன் சுற்றி சுற்றி
(தசா வழியாக)
ஒரு
இடத்தில்
தான் வந்து நிற்க வேண்டும்..
ஆற்றங்கரையோரத்தில் இருக்கும் மரங்கள் அத்தனையும்
நீர் வரத்தில் நெஞ்சார்ந்த இசை மீட்டி தென்றலாக வருடுகிறது...
காலப்போக்கில் நீர் வற்றி நிற்கும் பொழுது வானத்தைப் பார்த்து.. கை கூப்பி தன் கதறலை விழி நீரில் நனைகிறது இதுவே காலத்தின் சுழற்சி
நாமும்
நம் தசாவும் அதுபோலவே...
எந்த தசாவில் எத்தனை ஆண்டுகள் சிறப்பாக இருப்போம் எத்தனை
அழுது கொண்டிருப்போம்
காலக்
கணிதன்
(அம்சம்) கணிக்க வேண்டும்..
இப்படி
கணிக்க அம்சம் பழக வேண்டும்
நோயில் மாண்டவர்கள் எத்தனை பேர்
வயிற்றுப் பசிக்கு
உணவு இல்லாதவர் இறந்தவர்கள் எத்தனை பேர்
மனம் தெளிவில்லாமல் தற்கொலை செய்து கொண்டவர்கள் எத்தனை பேர்
ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்ய முடியாமல்
முதிர் கன்னிகளாக முதிர் காளைகளாக வாழா வெட்டியாக வைத்திருந்த பெற்றோர்கள் எத்தனை பேர்..
கடல் நீரில் கலந்து விட்ட நதி தாகத்திற்காக அழ முடியாது..
உதிர்ந்து விட்ட சருகு களுக்காக மரம் அழ முடியாது.
கனிந்து விட்ட கனிகளுக்கு கொடி
கொடி அசைத்து வழி அனுப்ப வேண்டுமே தவிர
அனுப்ப மாட்டேன் என்று அடம் பிடிக்க முடியாது
அது
போலத்தான் ஒவ்வொரு தசாவும் ஒவ்வொரு இயக்கங்களை பரிசீலனை செய்து கொண்டே வரும்..
ஒரு
தசா
குதிரைகள் போல் ஓடிக்கொண்டே இருக்கும்
அதில்
போர் குதிரைகளாகவும் இருக்கும்
சில
குதிரைகள் வண்டிகளை இழுக்கும் குதிரைகளாகவும் இருக்கும்
சில குதிரைகள் சாகச குதிரைகளாக மிளிரும்
சில குதிரைகள் தெருவில் அலைந்து திரிந்து கொண்டிருக்கும்..
அத்தனையும் அந்த தசாவில் அந்த ஜாதகன் அனுபவிக்க வேண்டும் இங்கு
குதிரை என்பது ஜாதகனே
ஆக
எங்கும் தர்மம் எதிலும் தர்மம் எல்லாம் தர்மத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட
விதி...
உன்னுடைய கர்மம்
எது என்று
நீ உணர் அதன்படி
நட சர்வம் கிருஷ்ணார்ப்பணம் என்று முடி ..
நல்ல குரு வேண்டுமென்று நினை
நீ நல்ல மாணவனாக உன்னை உருவாக்கிக் கொள்
குரு உன்னை தேடி வருவார் அதை உள்வாங்கிக் கொள் உயரத்திற்கு செல்வாய் உனது
தசா
உன்னை உலகிற்கு
நீ யார் என உணர்த்தும்
அது
எப்போது
என்று தான் அம்சம் கூறும்...
நன்றி வணக்கம்
வாழ்க வளர்க வாழ்க நலமுடன்
Comments
Post a Comment