*வாட்ஸ்அப்பில் தகவல் பகிரும் போது சட்டப் பிரிவுகள்: விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை 📢*
வாட்ஸ்அப்பில் தகவல்கள் பகிரும் முன், அவை சட்டப்படி சட்டத்திற்குட்பட்டவை மற்றும் சமூக நலனைக் காக்கும் வகையில் இருக்க வேண்டும். பொறுப்பற்ற தகவல்கள் பகிர்வது கடுமையான சட்டரீதியான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
சட்டங்கள் மற்றும் தண்டனைகள் ⚖️
1. தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 (IT Act, 2000) 🖥️
பிரிவு 66A: பொய்யான மற்றும் ஆதாரமற்ற தகவல்களை பகிர்வதை தடுக்க.
எடுத்துக்காட்டு: ஆதாரமற்ற பொய்யான வதந்தி பரப்புவது, இந்த பகுதியில் பூகம்பம் நடக்கப்போகிறது!
பிரிவு 67: ஆபாச தகவல்களை பகிர்வதை தடுக்க.
எடுத்துக்காட்டு: வாட்ஸ்அப்பில் ஆபாச வீடியோ பகிர்வது.
பிரிவு 69: தேச பாதுகாப்பு காரணமாக தகவல்களை கண்காணிக்க.
எடுத்துக்காட்டு: ராணுவ தகவல்களை அனுமதியின்றி பகிர்வது.
2. இந்தியக் குற்றச் சட்டம் (IPC) 🇮🇳
பிரிவு 505: பொது அமைதியை குலைக்கும் பொய்யான வதந்திகளை தகவல்களை தடுக்க.
எடுத்துக்காட்டு: பொய்யாக தகவல் பரப்புவது, இந்த பகுதியில் கலவரம் நடக்கிறது!
பிரிவு 153A: மதம், இனம் அல்லது மொழியை தூண்டும் தகவல்களை தடுக்க.
எடுத்துக்காட்டு: இந்த மதத்தினர் சமூக அமைதிக்கு கெடுதலாக இருக்கிறார்கள்!
பிரிவு 499 மற்றும் 500: தனிநபரின் பெயரை குலைக்கும் தகவல்களை தடுக்க.
எடுத்துக்காட்டு: ஆதாரமின்றி ஒருவரை குற்றவாளி என கூறுவது.
3. பிற சட்டங்கள் 📜
அதிகாரபூர்வ ரகசியங்கள் சட்டம், 1923:
எடுத்துக்காட்டு: இராணுவ முகாம்களின் புகைப்படங்களை பகிர்வது. ராணுவ ரகசியங்களை வெளியிடுவது.
அரசு அவமதிப்பு சட்டம், 1971:
எடுத்துக்காட்டு: நீதிமன்ற தீர்ப்புகளை அவமதிக்கும் கருத்துகளை பகிர்வது. சட்டத்தை பின்பற்றாதது.
பயங்கரவாத தடுப்பு சட்டம் (UAPA):
எடுத்துக்காட்டு: பயங்கரவாத குழுக்களை ஆதரிக்கும் தகவல்களை பகிர்வது.
விழிப்புணர்வு📢
பகிர்வதற்கு முன் மூன்று முறை சிந்தியுங்கள்: உண்மையா? தேவையா? பொறுப்புடன் தகவல் பகிருங்கள்! ⚖️
பொய்யான ஆதரமற்ற தகவல்களால் நீங்கள் மட்டுமல்ல, சமுதாயமும் பாதிக்கப்படும்! 🌍
*_சட்டங்களை மதித்து தகவல் பகிருங்கள் – சமூக நலனையும் உங்கள் நற்பெயரையும் காப்பாற்றுங்கள்._*
Comments
Post a Comment