அதிர்ஷ்டமில்லாத கார் என்று ஒரு கோடி மதிப்புள்ள பிரான்டட் காரை 10 லட்சம் ரூபாய்க்கு விற்பதாய் சிங்கு ஒருத்தர் சொல்லவும், அதைத் தான் வாங்கிக் கொள்வதாய்ச் சொல்லி ஐந்து லட்சம் ரூபாயை அட்வான்ஸ் தொகையாக கொடுத்தார் நம்ம ஊரு ராமசாமி.
ஆனால், காரை மறுநாள் டெலிவரி செய்வதாய் சொல்லியிருந்த சிங்கு , டிரைவர் காரைக் கொண்டுவரும் வழியில் ஆக்சிடென்டில் மாட்டி கார் சேதமாகிவிட்டதால், 'இப்போது கார் பழைய நிலையில் இல்லை என்பதால் தரமுடியாது' என்றார்.
"சரி.. பணத்தையாவது திருப்பிக் கொடுங்கள்.!" என்று ராமசாமி கேட்க, "என்னால் அது முடியாது. நான் ஏற்கனவே பணத்தை டிரைவரைக் காப்பாற்ற செலவழித்துவிட்டேன்…. நான்தான் சொன்னேனே... இந்தக் கார் ஒரு அதிர்ஷ்டம் கெட்டது என்று.." என்றார் சிங்கு.
கடைசியாய், "சரி.. உடைந்த காரையாவது என்னிடம் தாருங்கள். அதிர்ஷ்டமில்லாத அந்தக் காரை வைத்து ஒரு அதிர்ஷ்டப் போட்டி நடத்திக் கொள்கிறேன்.!" என்றார் ராமசாமி.
"உடைந்த காரை வைத்து எப்படி அதிர்ஷ்டப் போட்டி நடத்துவீர்கள்.?" என்று சிங்கு கேட்க, "அதெல்லாம் முடியும். நீங்கள் அனுப்பிய ஃபோட்டோ இருக்கிறது . அது மட்டும் போதும் என்றார் ராமசாமி. இதை அடுத்து உடைந்த காரை ராமசாமியிடம் ஒப்படைத்தார் சிங்கு.
இதெல்லாம் முடிந்து, ஓரிரு மாதங்கள் கழித்து ஒரு விழாவில் சிங்கு, ராமசாமியை பார்த்தார். என்ன ராமசாமி "அப்புறம் என்ன நடந்தது.? அந்தக் காரை வைத்து என்னதான் செய்தீர்கள் என்று கேட்க,
"உண்மையில் அது மிக அதிர்ஷ்டமான கார். நான் அதை வைத்து ஒரு கோடி ரூபாய் சம்பாதித்தேன். சரியாய்ச் சொன்னால் தொண்ணூறு லட்சம் என்று சிரித்த ராமசாமியை ஆச்சரியத்துடன் பார்த்த சிங்கு, எப்படி என்றார்.
"பத்தாயிரம் ரூபாய் சீட்டு வாங்கினால் அதிர்ஷ்டசாலிக்கு ஒரு கோடி ரூபாய் கார் பரிசு என்று நீங்கள் அனுப்பிய கார் ஃபோட்டோவை காட்டி 1000 பேர் கொண்ட ஒரு குலுக்கல் போட்டி நடத்தினேன்.
பரிசு கொடுக்கலியா? "யாரும் கண்டுபிடிக்கவில்லையா.?" என்று கேட்டார் சிங்கு.
வெற்றி பெற்றவன் மட்டும் வந்து கார் கேட்டான்... அவனிடம் 'உனக்கு டெலிவரி செய்ய வரும்போது ஆக்சிடென்ட் ஆகிவிட்டது' என்று உடைந்த காரைக் காட்டி எனக்கும் நஷ்டம் என்று கூறினேன். அவனது பத்தாயிரத்துக்கு பதிலாக பத்து லட்சம் தருகிறேன் என்று சொன்னேன். சத்தமில்லாமல் வாங்கிக் கொண்டு போய்விட்டான்.!" என்று சிரித்தார் ராமசாமி.
கெட்டிக்காரன் யார்
நன்றி வணக்கம்
Comments
Post a Comment