அன்பு தான் எனது பலவீனம் என்றால் என்னைவிட பலசாலி உலகில் யாருமில்லை....

 அன்பு தான் எனது பலவீனம் என்றால் என்னைவிட பலசாலி உலகில் யாருமில்லை.

எப்படி அணுகுமுறை பாருங்கள் 

👉முதுகில் குத்தப்பட்ட 

முதல் கத்தியை 

பிடுங்கி பார்த்தேன் 

'நட்பு' என்ற பெயரில்

நாடகமாடியவர்களின் 

பெயர் எழுதி இருந்தது.


👉இரண்டாம் கத்தியை 

பிடுங்கி பார்த்தேன் 

ஆபத்திலும் அவசரத்திலும்

யாருக்கெல்லாம் உதவினேனோ

அவர்களின் பெயர் 

அழகாய் எழுதி இருந்தது.


👉மூன்றாம் கத்தியை 

பிடுங்கி பார்த்தேன்

யாரையெல்லாம் உண்மையானவர்கள், நேர்மையானவர்கள் உற்ற உறவாய் மனதின் உயரத்திற்கு அழகு  பார்த்தேனோ (அப்பாவின் இரண்டாம் மனைவி) என்ற உறவிலும் ஆகா நடிப்பு 

அவர்களின் முகத்திரை கிழிந்து 

அப்படியே தொங்கியது.


👉நேர்மை, உண்மை, என்று இங்கு ஏதும் இல்லை நேர்மையானவர், உண்மையானவர்  என்று இங்கு எவரும் இல்லை என்று அறைந்தாற்போல் ஒவ்வொரு விசியமும் நமக்கு உணர்த்துகின்றது.


இனியும் நம்பிக்கை இருக்கிறது, என்னை ஏமாற்றிய ஒரு சிலரை முன்னின்று பார்த்தால் நகைப்பு தான் வரும்.


ஊருக்குத்தான் நியாயம், அவர்களுக்கு இல்லை போலும்.


இப்போதும் விழித்துக் கொள்ளவில்லை என் அறிவுக் கண்கள்..

இனியும் தொடர்ந்து அதே அன்போடு தான் இருப்பேன்...

ஏனென்றால் எனது அன்பு தான் எனது பலம் (பலவீனம்)

நன்றி வணக்கம் 

வாழ்க வளர்க வாழ்க வளமுடன் 


Comments