மிகப் பெரிய கோபக்காரங்களை பார்த்துருக்கீங்களா...
அவங்களை நல்லா கவனிச்சுப் பாருங்களேன்...
எதுக்கெடுத்தாலும் காட்டுக் கத்தலா கத்துவாங்க,
எல்லோரையும் எடுத்தெறிஞ்சு பேசுவாங்க,என்ன பேசறோம் னு கூட தெரியாத அளவுக்கு வார்த்தைகளை விடுவாங்க,
அழுவாங்க. சீக்கிரம் உடைஞ்சும் போவாங்க, தனியாக பேசுவாங்க, அவசரப்படுவாங்க. தன் பக்கத்து நியாயத்தை எப்படி வெளிப் படுத்தனும் னு தெரியாமல், தான் பேச வந்ததைக் கோபத்தால் மாத்தி கெட்ட பேரு வாங்கிட்டுப் போவாங்க... 😑✨
ரொம்ப நல்லவங்களா இருப்பாங்க. முக்கியமா நடிக்க மாட்டாங்க... 🖤🦋
யாருக்கும் ஒரு உதவி னா கூட உடனே ஓடிப் போய் உதவுவாங்க... 😍💙
அடுத்தவர்களுக்கு துரோகம் செய்ய மாட்டாங்க எப்போதும் யார் முதுகிலும் குத்தவே மாட்டாங்க உயிரே போனாலும் கூட இது தான் உண்மை...💛🧡
ஆனால் இப்படிப்பட்ட ஆட்களைச் சுற்றி எந்த உறவுமே இருக்காது இருக்கவும் மாட்டார்கள். ஏனென்றால் ஏமாற்றுபவர்களுக்கும், நம்பிக்கை துரோகிகளுக்கும் தான் இது காலம்... 😔🚶♀️√
Comments
Post a Comment