புதன் சந்திரன் பலன்

 புதனுக்கு மதிமகன் என்ற பெயருண்டு. சந்திரனுக்கு புதன் பகையில்லை. புதனுக்கே சந்திரன் பகை. உங்களின் மனத்திலிருந்தே, புத்தி பிறக்கிறது. சாந்தமில்லா மனதில், சரியான புத்தியும் தோன்றுவதில்லை. 


ஜாதகத்தில் சந்திரன் பலமாக இருப்பின், புதனும் பலமானதாகவே செயல்படும். ஆகவே ஜாதகத்தில் புதனின் பலத்தை அறிய சந்திரனின் பலமும் ஆராய்வது அவசியம். 


சந்திரன் பலமானவராக இருந்து புதனும் ஆட்சி உச்சம் பெற்றால் ஜாதகருக்கு கல்வி அல்லது கேள்வி அல்லது நுண்ணறிவு அல்லது சமயோஜித புத்தி சிறப்பாக இருக்கும். 


மிக முக்கியமாக, புதன் அஸ்தங்கம் அல்லது வக்ர அஸ்தங்கம் பெற்று, சந்திரன் பலமானால், ஜாதகரின் கிரகிக்கும் ஆற்றல், சிந்திக்கும் ஆற்றல் அளப்பரியதாக இருக்கும். 


சந்திரன் பலமிழந்து புதன் பலமானால், ஜாதகரின் Overthinking, loose talking, unnecessary argument மூலம் அவரது மனதின் அமைதியை அவரே சிதைத்து கொள்வார். இவர்களுக்கு தியானம் செய்தலே மிக சிறந்த பரிகாரம்.

Comments