மக்கள் பலருக்கு எப்போது ஜாதகம் பார்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லை. எப்போதெல்லாம் ஜோதிடரிடம் ஜாதகம் பார்க்கலாம்:
1. பல முயற்சிகள் எடுத்து ஒரு காரியம் தோல்வியுறும் போது ஜாதகத்தை ஆய்வு செய்ய ஜோதிடரை அணுகலாம்.
2. தன்னம்பிக்கை இழக்கும் தருணம் ஜாதகத்தை ஆய்வு செய்ய ஜோதிடரை அணுகலாம்.
3. சில சம்பவங்களால் மனகுழப்பம் அதிகமாக இருக்கும் போது ஜாதகத்தை ஆய்வு செய்ய ஜோதிடரை அணுகலாம்.
4. பெண்ணாக இருப்பின், ருதுவான சில மாதங்களில் திருமண அமைப்பு பற்றியும் இன்னபிற தோசங்கள் பற்றி தெரிந்து கொள்ள, பெண்ணின் ஜாதகத்தை ஆய்வு செய்ய ஜோதிடரை அணுகலாம்.
5. குழந்தை பிறந்து சில மாதங்களில், ஜாதகம் எழுதும் போதே பாலரிஷ்ட தோசம் இருக்கிறதா என அறிந்து கொள்ள, ஜாதகத்தை ஆய்வு செய்ய ஜோதிடரை அணுகலாம்.
6. குழந்தைகளோ அல்லது பெரியவர்களோ உடல்நல குறைபாடு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் சமயம், நோய்க்கான வீரியம், நோயின் கால அளவு அறிய, அந்த நபரின் ஜாதகத்தை ஆய்வு செய்ய ஜோதிடரை அணுகலாம்.
7. சுயதொழில் செய்ய துவங்கும் முன், கண்டிப்பாக ஜாதகத்தை ஆய்வு செய்ய ஜோதிடரை அணுக வேண்டும்.
8. மிக பெரிய பணபரிவர்த்தனை அல்லது பணம் கொடுக்கல் வாங்கலில் இருக்கும் சாதக பாதகங்களை அறிய ஜோதிடரை அணுகலாம்.
9. குழந்தை பிறப்பு தடையோ அல்லது நீண்ட தாமதத்திற்கோ ஜோதிடரை அணுகலாம்.
10. பூர்வீக சொத்து அல்லது வீடு அல்லது மனை சம்மந்தபட்ட சிக்கல் அல்லது வழக்கு நீண்ட நாட்களாக தீர்க்க முடியாமல் இருப்பின் அப்போது, ஜாதகத்தை ஆய்வு செய்ய ஜோதிடரை அணுகலாம்.
11. குல தெய்வம் தெரியவில்லை எனில் ஜோதிடரை அணுகி அதற்கான உபாயம் அறியலாம்.
12. நீண்ட கால திருமண வாழக்கை சிக்கல் எனில் அதன் வீரியத்தன்மை அறிய ஜோதிடரை அணுகலாம்.
13. நீண்ட கால திருமண தாமதம் எனில் ஜோதிடரை அணுகலாம்.
14. மேற்படிப்பு பற்றியும், கல்வியில் தொய்வு என இருப்பின், ஜோதிடரை அணுகலாம்.
15. விவாகரத்தோ அல்லது வாழ்க்கை துணை இழந்தவர்கள், தன் இரண்டாம் திருமணம் பற்றி அறிய ஜோதிடரை அணுகலாம்.
ஜோதிடர்கள் வலிய சென்று, ஒருவரின் ஜாதக ஆய்வு செய்து பலன் கூறுவது ஜோதிட தர்மம் அல்ல. அதுபோல எந்த பெரிய மன உளைச்சலுமின்றி இயல்பாக இருப்பவர், வருங்காலம் அறியவேணும் என வரும் நபர்களுக்காக ஜோதிடம் கண்டறியப்படவில்லை. தன் வருங்கால திசாபுத்தி பலன் வேணும் என நினைத்து ஜாதகம் பார்ப்பது அவசியமற்றது.
ஜாதகத்தை கொண்டு வருங்காலம் அறிந்து, அதற்கேற்ப வருங்காலம் அமைத்து கொள்கிறேன் என நினைக்கும் சுயநலவாதிகளுக்கு ஜோதிடம் மூலம் பலன் நிச்சயம் கிடைக்காது.
ஜோதிடரின் வார்த்தைகளை செவி சாய்ப்பதே மிக சிறந்த பரிகாரம். ஜாதகத்தில் இல்லாத யோகத்தை அல்லது அமைப்பை, பரிகாரம் செய்து பெற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணம் இருப்பவர்கள், பல பிறவிகள் பிறந்து தன் கர்மபலனை அனுபவித்தே கடக்க நேரிடும்.
குறிப்பு - அடிக்கடி (சில வார இடைவெளியில்) ஒரே ஜாதகத்தை எடுத்து கொண்டு பலமுறை பலன் கேட்கபவர்களுக்கு, மனநல கோளாறு ஏற்படும்.
Comments
Post a Comment