ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை மிகவும் மகத்துவம் பெறுவது ஏன்?


                    


ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை மிகவும் மகத்துவம் பெறுவது ஏன்?



                  ஆவணி மாத வளர்பிறை முக்கியத்துவம்


 ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறதே ஏன்? 


 ஆடி போய் ஆவணி வந்தால் நன்மை கூடி வரும் என்பது போல், ஆவணி மாதம் மிகச்சிறந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடியில் சில நிகழ்ச்சிகள் செய்ய மாட்டார்கள். ஆவணி தொடங்கியதும், உடனே அந்த நிகழ்ச்சியினை வைத்துவிடுவார்கள். இத்தகைய சிறப்புகள் நிறைந்த ஆவணி மாதத்தில் வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது, ஏன் தெரியுமா? 


 ஆவணி மாதம் ஸ்திர மாதம்.  வைகாசி, கார்த்திகை, மாசி ஆகியவையும் ஸ்திர மாதங்களே. ஆனால் ஆவணியில்  சூரியன் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று வலுவாக அமர்கிறார்.


 சூரியனே ஆத்மகாரகன் என்றும், பிதுர்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அரசியல், பெரும் பதவி பெறுவதற்கான தகுதியை தர வல்லவர். இதன் காரணமாக சூரியன் வலுப்பெறும் போது எந்த காரியத்தை செய்தாலும் சிறப்பான பலனைத் தரும் என முன்னோர்கள் அறிந்திருந்தனர். 


 எனவே தான் ஆவணி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்தால் அந்த வீட்டில் நீண்ட நாட்கள் தங்கலாம்,  திருமணம் செய்தால் வாழ்க்கைத் துணை சிறப்பாக அமையும்.


 விவசாயத்திலும் ஆவணி மாதம் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது.  ஆடிப் பட்டம் தேடி விதைக்கும் விவசாயிகள்,  ஆவணி மாதத்தில் சற்றே ஓய்வு எடுத்துக் கொள்வதுடன், ஒட்டுமொத்த வேளாண் மக்களும் தங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களை, விழாக்களை நடத்தி மகிழ்வார்கள். 

ஆவணி மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகள் மிகவும் மகத்துவம் நிறைந்ததாக காணப்படுவதற்கு முக்கியமான காரணம் என்ன தெரியுமா? 


 ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம வீட்டில் ஆட்சி செய்கிறார்.  சூரியனுக்கு சிம்ம வீடு பலமான வீடு.  நமக்கு ஆத்மபலத்தை தருபவர் சூரியனே. எனவே தான்,  ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணர் அவதாரம் ஆகியன நிகழ்ந்ததாக பெரியோர்கள் சொல்வார்கள்.


அர்ஜுனனுக்கு ஆத்மபலத்தை அளிக்க கீதையை உபதேசம் செய்ய கிருஷ்ணர் இம்மாதம் பிறந்தார். இதனால் தான் ஆவணி மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை முக்கியத்துவம் பெற்றது. ஞாயிறு என்றாலே சூரியன். 


 ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவை புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர். சிலருக்கு இயற்கையாகவே ஆன்மிக அறிவு அமையும்.  தேகநலனுக்காக சூரிய நமஸ்கார பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷமானது. 


 கிரக தோஷங்கள் நீங்கவும், ஆரோக்கியம் மேம்படவும், செல்வ வளம் அதிகரிக்கவும், பித்ருக்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கவும் இந்த ஆவணி ஞாயிறு விரதத்தை அனுஷ்டிக்கலாம்.  ஆவணி ஞாயிறு விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் 👀 கண் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து முழுமையாக விடுபடலாம் என்பது ஐதீகம்.


 ஆவணியில் பயிர்கள் வளர ஆரம்பிக்கும். பூச்சிகள், பாம்புகள் தொல்லை அதிகரிக்கும். இவற்றால் விவசாய பணிகளுக்கு செல்லும் தங்கள் கணவருக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக,  ஆவணி ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் விரதத்தை அனுஷ்டித்து வந்தனர். 


இதன் காரணமாக ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.  ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நாகருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் மேலும் நன்மை உண்டாகும். 



Comments