அரசு அலுவலகங்களுக்கு அனுப்பவும் புகார் மனு/ கோரிக்கை மனு மீது நடவடிக்கை இல்லை எனில் இந்த த.அ.உ.ச மனுவை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வைக்கலாம்...
*அரசு அலுவலகங்களுக்கு அனுப்பவும் புகார் மனு/ கோரிக்கை மனு மீது நடவடிக்கை இல்லை எனில் இந்த த.அ.உ.ச மனுவை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வைக்கலாம்...*
*தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6(1) இன் கீழ் மனு.*
*மனுதாரர்:*
மாவட்டம்
Ph
*பெறுநர்:*
பொது தகவல் அலுவலர் அவர்கள்,
------------------ அலுவலகம்,
----------------- மாவட்டம் .
பார்வை:
1. ஆம் தேதி அனுப்பிய புகார் மனு.
2. ஆம் தேதி மனுவைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் அட்டையின் நகல்.
*மதிப்பிற்குரிய அலுவலர் அவர்களுக்கு,*
தேவைப்படும் விவரங்கள் /ஆவணங்களின் ஒளி நகல்கள் பின்வருமாறு,
1. பார்வையில் காணும் -------------மனுவிற்கு மனுதாரருக்கு அனுப்பபட்ட அழைப்பானையின் ஒளி நகல் வழங்க வேண்டுகிறேன்.
2. மேற்காணும் ---------------மனுவி்ற்காக ------------ அலுவலகத்தில் மனுதாரரை அழைத்து விசாரணை செய்த விசாரணை ஆலுவலரின் பெயர், அவரது பதவியின் பெயர் தர வேண்டுகிறேன்.
3. மேற்சொன்ன ---------------மனுவின் மீது எவ்வகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றிய, “தினசரி முன்னேற்ற அறிக்கை" விவரங்கள் /ஆவணங்களின் ஒளிநகல்களை வழங்க வேண்டுகிறேன்.
(ஆதாரம் - Petitions - Petitions presented to Government Officers. Procedures for dealing with grievance Petitions - Instructions Issued. G. 0. Ms. No. 114, Dated, 02.08.2006. Personal and Administrative Reforms (A) Department. Chief Secretary to Government).
4. மேற்காணும் ---------------மனுவிற்காக மனுதாரரிடம் விசாரணை செய்து, விசாரணை அலுவலர் அவர்கள் இறுதியில் சமர்ப்பித்த இறுதி அறிக்கையின் ஒளிநகல்களை தர வேண்டுகிறேன்.
5. மனுதாரரை விசாரணை செய்து பெறப்பட்ட வாக்கு மூலங்களின் ஒளி நகல்கள் தர வேண்டுகிறேன்.
6. மேற்சொன்ன -----------------மனு, எந்தெந்த அதிகாரிகள் / அலுவலர்கள் வசம் இருந்தது, அவர்களின் பெயர்கள் & பதவிகள், ஒவ்வொருவரிடமும் எவ்வளவு காலம் இருந்தது, அதன் மீது ஒவ்வொருவரும் என்ன மேல் நடவடிக்கை எடுத்துள்ளார்கள் பற்றிய விவரங்கள் /ஆவணங்களின் ஒளிநகல்களை வழங்க வேண்டுகிறேன். .
(ஆதாரம் - From the Government of India, Ministry of Personal, Public Grievance and Pensions, New Delhi, D, O. No. G-13013 / 1 / 2006-PG Dt, 05.05.2006, TN GO Ms. No. 114, Dt. 02.08.2006).
7. மேற்சொன்ன ------------மனுவை பெற்றுக் கொண்ட தங்கள் ------------------- அலுவலகம் / அலுவலர்கள், ஒவ்வொருவரிடமும் மேற்படி மனு பெறப்பட்டதற்கும், அதன் பின்னர், வேறு பிரிவுகளுக்கு மாற்றி அனுப்பபட்டதற்கும் உரிய விவரங்கள் /ஆவணங்களின் ஒளிநகல்களை வழங்க வேண்டுகிறேன்.
(ஆதாரம் - 6. 0. Ms. No. 89, P & AR (A), Dept. Pt.13.05.1999).
8. மேற்சொன்ன ------------------ மனுவை பெற்றுக் கொண்ட தங்கள் ----------------- அலுவலகம் / அலுவலர்கள், மேற்சொன்ன ஆதாரங்களின் படி, குறிப்பிட்ட கால வரையறைக்குள் செயல்பட்டார்களா / இல்லையா என்பது பற்றியும், அவ்வாறு குறிப்பிட்ட கால வரையறைக்குள் செயல்படவில்லை எனில், அந்த அதிகாரிகள், நடத்தை விதிகளை (Conduct Rules) மீறிய குற்றத்திற்கு உள்ளாகிறார்களா / இல்லையா என்பது பற்றியும், அதற்கான நடத்தை விதிகள் (Conduct Rules) என்னென்ன என்பது பற்றிய விவரங்கள் /ஆவணங்களின் ஒளிநகல்களை வழங்க வேண்டுகிறேன்.
(ஆதாரம் - Para 167 (1) The Tamil Nadu Government Business rules and Secretariat Instructions) G. O. Ms. No. 66, P & AR (A) Dept, Dated 23.02.1993).
*குறிப்பு:*
கீழ்க்கண்ட வாதங்கள்/தீர்ப்புகளின் படி, இம்மனுவினை பரிசீலனை செய்ய வேண்டுகிறேன்.
மேற்படி அனைத்து ஒளி நகல்களையும் சட்டப்பிரிவு 4 (1) (b)க்கு உட்பட்டு வழங்க வேண்டுகிறேன்.
மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் பொதுநல நோக்கத்துடன் த. அ. உ ச. 2005 பிரிவு 4 (1)(b) இன்படி கேட்கப்படுவதால், அனைத்து தகவல்களுக்கும் மறைக்காமல், மறுக்காமல் அனைத்து பக்கங்களிலும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வழங்கப்பட்டது என்று குறிப்பிட்டு அலுவலக முத்திரையுடன் வழங்குமாறு தங்களை தாழ்ந்து கேட்டுக்கொள்கிறேன்.
நாடாளுமன்றத்திற்கு அல்லது மாநிலசட்டமன்றத்திற்கு மறுக்கப் படமுடியாத தகவல்களை ஓர் நபருக்கு மறுக்கப்பட கூடாது என்பதால் மேலே கோரிய அணைத்துதகவல்களும் சட்டங்களுக்கு உட்பட்டதே. (பிரிவு 8(1)) மேற்படிதகவல் வழங்க தகவல் சட்டத்தில் வழங்க வழிவகை இல்லையெனில் அரசாணை நிலை எண் 1365 நாள் 21.11.2016 ன் படி விளக்கம் மற்றும் தெளிவுரையாக வழங்கவும்.
Comments
Post a Comment