நிர்வாகி ஆளுநரா... முதலமைச்சரா?!


நிர்வாகி ஆளுநரா... முதலமைச்சரா?!

👑👑👑👑👑

அரசு நிர்வாகத்தைப் பற்றிப் பேசும்போது, எதற்கெடுத் தாலும், "முதல்வர் உத்தரவிட்டார், அமைச்சர் உத்தரவிட்டார்" என்ற செய்தி ஊடகங்களால், பூடகங்களாகப் பரப்பப்படுகின்றன. இதற்கேற்ப அவ்வுத்தரவில், அவர்கள் கையெழுத்திடுவது போலவும் தொல்லைக்காட்சிகளில் காட்டப்படுகின்றன. இதுபோலவே, அமைச்சர்கள் திடீரென எங்கெல்லாம் ஆய்வுக்குச் செல்கிறார்களோ, அங்கெல்லாம் ஊழியங்களில் கடமை தவறிய ஊழியர்களை  இடைநீக்கம் செய்து உத்தரவிட்டதாகவும் செய்திகளில் சொல்கிறார்கள்.

ஆனால், இப்படிப்பட்ட செய்திகள் அடிப்படையிலேயே முற்றிலும் தவறு!


உண்மையில் இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 154 இன்படி, ஒரு மாநிலத்தை நிர்வாகம் செய்யும் அதிகாரங்கள் அனைத்தும், ஆளுநரிடம் மட்டுமே உள்ளன. மற்றபடி, 

இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 163 இன்படி, ஆளுநருக்கு அதிகாரமுள்ள விடயங்களைத் தவிர, அவருக்கு உதவி செய்யவும், ஆலோசனை கூறவும், பரிந்துரை செய்யவுமே முதலமைச்சர் உட்பட எந்தவோர் அமைச்சருக்குமே உரிமையுள்ளதே தவிர, தன்னிச்சையாக உத்தரவிடும் அதிகாரம் எதுவுமே கிடையாது. 


உடனே, இதற்கான ஆதாரத்தைக் கொடுங்கன்னு, என்னிடம் கேட்கப்பிடாது என்று நான் சொல்லல. 

இந்திய அரசியல் சாசன கோட்பாடு 163(3) இல், ஆளுநரிடம் நி(நீ)திபதிகள் உட்பட யாருமே கேட்கப்பிடாதுன்னு தடை விதிக்கப்பட்டிருக்கு.


முதல்வன் திரைப்படத்தில், ஒருநாள் முதல்வரான கதாநாயகன் கடமைதவறும் ஊழியர்களை ஊழியநீக்கம் செய்வதைப் பார்த்து, ஒரு மாநிலத்தின் முதல்வர் இப்படியும்கூடச் செய்ய முடியும் என நினைத்து, மக்கள் மாக்களாகவே மாறிவிட்டார்கள். நடிகர், நடிகைகளின் வேலையே, கவர்ச்சியைக்காட்டி மக்களை மடையர்களாக்குவதுதானே!


இன்னுங் கொஞ்சம் வெளிப்படையாகச் சொல்லப்போனால், அரசின் கடைநிலை ஊழியராக இருக்கும் பியூனைக்கூடத் தற்காலிக ஊழிய நீக்கஞ்செய்யும் உரிமை, அரசியல் கட்சி வழியாகத் தேர்ந்தெடுக்கப்படும் மாநில முதலமைச்சர்கள், பிரதமர் உட்பட எந்தவொரு அமைச்சருக்குமே கிடையாது.


இப்போ புரிஞ்சதா..?

இனிமேல் கவுன்சிலர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சர்னு மனு கொடுத்து அலையாதிங்கோ...

சினாமாவில் காட்டுற சட்டம், உத்தரவுபோலவே, உண்மையா சட்டம் இருக்கறதா நினைக்காதிங்கோ..


அரசு ஊழியர்களை கோர்த்துவிடுமாறு சட்டப்பிரிவை குறிப்பிட்டு மனு கொடுங்கோ..

குறைந்த பட்சம் அந்த மனுவில் இரண்டு ஊழியர்களை கோர்த்துவிடுங்கோ..

அப்புறம் நடப்பதை மட்டும் பாருங்கோ....

ஆனா, ஒன்னுங்கோ..!

மீடியால வர்ற எல்லாத்தையும் முழுசா நம்பாதீங்கோ..!

மக்களை கண்ட்ரோல் பண்ணி அடிமையா வக்கிறதே  இந்த மீடியா தாங்கோ..

இந்த சட்ட சங்கதியெல்லாம் அரசு ஊழியருக்கே தெரியாதுங்கோ......

அதனாலதானுங்கோ அரசூழியரெல்லாம் அரசியல்வியாதிய பாத்தா பயந்து நடுங்குறாங்கங்கோ...


நமது நூல்களைப்படித்த அரசூழியர்கள் , மேற்கண்ட இந்த விதியையும், அரசு ஊழியர் நடத்தை விதி 20ஐயும் தெளிவாக தெ(பு)ரிந்து மூளையை கசக்கி முறையாக செயல்படுத்தினால், மேல்நிலை ஊழியர்களின் எந்த விதமான சட்ட விரோத உத்தரவுக்கும் அடிபணியாமல் பாதுகாப்பாக சுந்தரமாக வேலை செய்யலாம். இந்த விதியை பயன்படுத்தி தான் மேல்நிலை ஊழியர்களின் சட்ட விரோத செயல்பாடுகளிலிருந்து பலர் மிக எளிதாக தப்பி விடுகின்றனர். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் இந்த விதியை பயன்படுத்திதான் மேல்நிலை ஊழியர்களின் சட்ட விரோத தொந்தரவுகளில் இருந்து தப்பித்தோம் என்று அவர்களுக்கே தெரியவில்லை.


இன்னும் சட்டப்படியான சங்கதிகள் நிறையவே இருக்குங்கோ...

எல்லாத்தையும் ஒரே மெசேஜ்ல சொல்லமுடியாது பாருங்கோ...


எந்த அரசியல்வியாதியாவது

உத்தரவிட்டார்..!

கட்டளையிட்டார்..!

ஊளையிட்டார்..!

என்ற செய்தி வந்தால் எங்களுக்கு சிரிப்பு சிரிப்பா வருமுங்கோ..

உங்களுக்கு எப்படிங்கோ..!

🙊🙊🙊🙊🙊🙊🙊

நியாயம்தானுங்கோ சட்டம்கோ, அதற்குத் தேவையில்லைங்கோ வக்கீல் பட்டம்கோ..

சரிதானுங்களே...


Comments