படித்ததில் பிடித்தது...🙏
தேவையில்லாமல் நாய் ஸ்பரிஷம் தோஷமாகும். பொதுவாக தர்ம சாஸ்திரப்படி நாய் , பூனை, ஆந்தை இவை மூன்றின் சப்தம் சுபமானவை அல்ல... இன்று கோவில்கள் வீடுகள் பல இடங்களில் நாய் சுதந்திரமாக உலவுகின்றது. நாய் வீட்டிற்க்கு வெளியே சிறிது தொலைவில் இருக்கவேண்டும். கோவில் யாகசாலை வீடு இவற்றில் நாய் பூனைக்கு அனுமதி இல்லை. நாய் பார்த்த பண்டம் யாக ஹவிஸ் அசுத்தமாகும். அதை கொண்டு தேவகாரியமோ பித்ரு காரியமோ செய்தால் பலன் இல்லை.
பித்ரு காரியங்களில் நாய் சப்தம் கேட்டால் அவர்கள் சபித்தே செல்கின்றனர். பொதுவாக ஸாரமேயம் / ஸ்வானம் என நாய் பிரிக்கப்படும். இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. இரண்டுக்கும் ஜோதிட காரகத்துவமும் மாறுபடும். இன்னைக்கு சனி ப்ரீதினுட்டு பல பேர் ரோட்டுல நாய்க்கு பிஸ்கட் போட்டுட்டு சுத்தறாங்க... கேட்டா அது பைரவர் பைரவின்னுட்டு வேற சொல்ல்றாங்க... நாய் வளர்ப்பது பைரவர் / சனி ப்ரீதின்னு வேற உருட்டு.... சுத்தற நாயெல்லாம் பைரவருக்கு வாகனம் இல்லை... ஸ்வானம்தான் வாகனம். கட்டு விரியன் பாம்புதான் இருக்கு ... அதுவா பகவானுக்கு படுக்கையா இருக்கு? ஆதிஷேஷந்தானே படுக்கையா இருக்கு!!!!!!.... எதை எதுக்கு லிங்க் பண்ணறதுன்னு தெரியாம கண்டதை பேஸ்புக்கிலேயும் யூ டியூபிலும் பார்த்துட்டு தோஷப்பட்டு நிக்கறது...
வேணா ஒன்னு சொல்லறேன் தினமும் ரோட்டு நாய்க்கு பைரவர்ன்னு சொல்லிட்டு அதை தடவி கொடுத்துட்டு ஒரு 10வருஷத்துக்கு பிஸ்கட் போட்டுட்டு வாங்க....உங்க நெலவரம் எந்த நிலைமைக்கு மாறும்ன்னு அனுபவப்பட்டுக்கோங்க!!!!... சொல்லி புரியாதவன் பட்டுதான் திருந்தனும்... எனக்கு இன்னொரு டவுட்டு.... நாய் வளர்த்து கொஞ்சி தினமும் படுக்கையில் போட்டு குளிப்பாட்டி சீராட்டுவாங்களாம்... ஆனா நாயேன்னு திட்டுனா மட்டும் கோபப்படுவாங்களாம்?....... நீங்க சிங்கம் மாதிரின்னு சொன்னா சந்தோசபடுற நாம , நீங்க நாய் மாதிரின்னு சொன்னா ஏன் கோபபடுறோம்ன்னு எனக்கும் புரியலை.... ஏன்னா அது உங்க பார்வையில் பைரவர்தானேங்கறேன்??????.....
இந்த லோகத்தில் விலக்கப்பட்ட அனைத்தும் எமனுக்கே சொந்தம் என்று சாஸ்திர வாக்கியம். அப்படி விலக்கப்பட்ட சில ப்ராணிகள் உண்டு. அதில் குறிப்பாக நாய், பூனை, இவற்றின் மயிர்கால்களில் ப்ரேத வாஸம் (இருப்பு) உண்டு. அதன் முடி எந்த க்ருஹத்தில் விழுகின்றதோ அங்கே யமகிங்கரர்கள் வாசம் செய்வார்கள் என்று அர்த்தம். நாய் மற்றும் பூனையால் அந்த க்ருஹத்தில் நடக்கும் சில விஷயங்கள் எமனுக்கு புலப்பட்டும்.... அந்த யமகிங்கர ஸ்வரூபம் இருப்பதை சில குறிப்பால் உணர முடியும்... நாயை தோட்டம் இருந்தால் கட்டி அதற்க்கு இரவில் மட்டும் நிலத்தில் உணவு இட்டு காவலுக்கு பயன்படுத்தலாமே ஒழிய வீட்டுக்குள் விட கூடாது. அது பெரிய தோஷத்தை விளைவிக்கும்....நாய் கண்ணை கூட நேராக பார்க்ககூடாது.....
அதை தேவை இல்லாமல் ஸ்பரிசிக்கவும் கூடாது. அப்படி செய்தால் ஸ்னானம் செய்யவேண்டும்... பூஜை அறை/ கோவில்/ சாமி கும்பறட மாதிரி நாய் வெச்சு reels வேணா போட்டுக்கலாம் ஆனா அதனால் அம்பஞ்சல்லிக்கு பிரயோஜனம் இல்லை...நாய் வந்ததா பைரவராமா? ஏன் ஒரு கட்டுவிரியன் வீட்டுக்குள்ள வந்தா நாராயணன் பகவான் படுக்கையே வீட்டுக்குள் வந்ததுன்னு கையெடுத்து கும்பிட்டு உங்க பெட்ரூமில் விட்டுக்கவேண்டியதுதானே!...
சரி... பராசக்தி சிங்கத்து மேலேதான் இருக்கா! ஆளாளுக்கு ஒரு சிங்கத்த வெச்சி ட்ரை பண்ணலாமா!.... இல்லைன்னா இருக்கற அரிசி பருப்பெல்லாம் எடுத்துட்டு எலி வளைக்குள் வெச்சிடலாம்... பிள்ளையார் சாப்புட்டுட்டு போகட்டும்.... அதுவும் பக்திதானே ப்ரூ!!!!.....
ஒவ்வொரு ஜீவனும் இறைவன் படைப்புதான் புழுவுக்கும் கூட அதன் வேலை உண்டு. அதே போலதான் நாயும் . அது அந்த வேலையை பார்க்க விட்டா நல்லது... நாய் நாயா இருக்கனும் மனுஷன் மனுஷனா இருக்கனும்.... யாகசாலை கோவில்களில் நாய் வந்தா துரத்தி விடனும் பைரவர்ன்னு சும்மா உதார் விட கூடாது.... இதே 6அடி பாம்பு வீட்டுக்குள்ள வந்தா ஆத்தா வந்துட்டான்னு வெச்சு வளர்ப்பீங்களா ?....பைரவர் கோவில் என்றாலும் நாய் அனுமதி இல்லை...
நாயா இருந்தாலும் அதை தேவையில்லாமல் காயபடுத்தவோ துன்புறுத்தவோ கூடாது. அதை தேவையில்லாமல் துன்புறுத்தினால் நமக்கு காரணமில்லாமல் துன்பம் விளையும்ன்னு புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. நாய் மட்டுமல்ல எந்த ப்ராணியையும் தேவையில்லாமல் இம்சிக்க கூடாது. அது பாட்டுக்கு அது வேலை செய்யட்டும் நாம பாட்டுக்கு நம்ம வேலையை செய்வோம்..
நாய் நாயாக இருக்கட்டும் நாம் நாமாக இருப்போம்...🙏
Comments
Post a Comment