ஜாதகத்தில் பணம் வரும் வழி

ஒரு ஜாதகத்தில்

பணம் வரும் வழியை குறிக்கக்கூடிய

தன ஸ்தானாதிபதி எனும் 

இரண்டாம் வீட்டு அதிபதி

உங்களுடைய லக்னத்தில்

ஆரம்பித்து...

12 பாவகங்கள் வரை..

எந்த வீட்டில் அமர்ந்திருந்தால்

எந்த ரூபத்தில் அல்லது எந்த விதத்தில்

தனம் எனும் பணம் வரும்.

என்பதை தோராயமாகவும்

சுருக்கமாகவும் பார்ப்போம்.


இரண்டுக்குடைய கிரகம்.........


1 வது வீட்டில் இருந்தால் : 

சுய உழைப்பு, சுயதொழில் அல்லது வியாபாரம் போன்ற வகைகளில்

சுயம்பு போல...

ஜாதகர்

சுயமாகவே பணம் சம்பாதிப்பார்.


2 வது வீட்டில் இருந்தால்: 

பரம்பரை சொத்துக்கள் மூலமாகவும்.

அசையும் அசையா சொத்துக்கள் மூலமாகவும்.

கொடுக்கல் வாங்கல் தொழில் மூலமாகவும்.

உணவகங்கள் உணவுப் பொருட்கள்

மூலமாகவும்.

மேலும்...

பாடுவதை, பேசுவதை தொழிலாக கொண்டவர்கள்

அதன் மூலம் பணம் சம்பாதிப்பார்கள்.


3 வது வீட்டில் இருந்தால்: 

உடன் பிறந்தவர்களாலும், 

வீர தீர விளையாட்டுக்களாலும்,

சிறு சிறு பயணம் என்று சொல்லக்கூடிய பஸ் போக்குவரத்து மூலமாகவும்.

தகவல் தொடர்பு என்று சொல்லக்கூடிய செய்தித்தாள்கள் ஊடகங்கள்

மற்றும் மார்க்கெட்டிங் துறை

போன்றவை மூலமாகவும் பணம் சம்பாதிப்பார்கள்.


4வது வீட்டில் இருந்தால்: 

தாயாரிடமிருந்து பண உதவி கிடைக்கும்

நிலம் & ரியல் எஸ்டேட், விவசாயம்

போன்றவற்றின் மூலமாக ...

வாகனம் விற்பனை செய்வது, 

வாகனங்கள் சரி செய்வது

வாகனங்கள் வாடகைக்கு விடுவது

போன்றவற்றின் மூலமாகவும்

பணம் சம்பாதிப்பார்கள்.


5 வது வீட்டில் இருந்தால்: 

ஆசிரியர் பணி

கல்வி நிறுவனம்

குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்கள், 

குரு ஸ்தானத்திலிருந்து ஆலோசனை கூறி மிகுந்த கௌரவத்துடன் பணம் சம்பாதிப்பது.

மந்திர உச்சாடனம் மந்திர உபதேசம் செய்தன் மூலமாகவும்.

புனித ஸ்தலங்களில் பணியாற்றி பணம் சம்பாதிப்பது

போன்ற வகைகளிலும் பணம் வரும்.


6 வது வீட்டில் இருந்தால்: 

வேலை செய்வதன் மூலமாகவும்

கடன் வாங்குவதன் மூலமாகவும்

செல்லப்பிராணிகளை விற்பதன் மூலமாகவும்

குறிப்பாக சேவை தொழில் எனப்படும் போலீஸ் தீயணைப்பு துறை மருத்துவத்துறை ஆதரவற்றோர் இல்லம்

போன்றவற்றின் மூலமாகவும்

இவர்களுக்கு பணம் வரும்.


7 வது வீட்டில் இருந்தால்: 

பொதுமக்களின் தொடர்பு பெற்று இருக்க கூடிய அத்தனை தொழில்களும் இவர்களுக்கு கைகூடி வரும்.

மேலும் ஏற்றுமதி இறக்குமதி செய்யக்கூடிய தொழில்கள் மூலமாகவும் இவர்களுக்கு பணம் வரும்.

தொழில் பங்குதாரர்கள் இவர்களுக்கு பணம் சம்பாதித்து கொடுப்பார்கள்.


8 வது வீட்டில் இருந்தால்: 

நீண்ட நாள் கிடைக்காத பரம்பரை சொத்து கைக்கு கிடைப்பது, 

இன்சூரன்ஸ் காப்பீடுகளின் மூலம் பணம் கிடைப்பது, அளவுக்கு அதிகமான வரதட்சணை மூலம் சொத்து சேர்வது , ஆழ்நிலை தியான வகுப்புகள் மூலமும், லாட்டரி மூலமும்

மனிதனின் மரணத்திற்குப் பிறகு தேவைப்படும் அத்தனை உபகரணங்கள் மூலமும்.

ஜீவனாம்சம் மூலமும்.

மான நஷ்ட வழக்கின் மூலமும்

ஆதாயங்கள், அற்புத

நிகழ்வின் மூலம் 

திடீரென பெரும் பணம் கிடைக்கும்.


9 வது வீட்டில் இருந்தால்: 

புனிதமானது கௌரவமானது என நினைக்கக் கூடிய அத்தனை விஷயங்களிலும் தொழில்களிலும்

பணம் வரும். 

உதாரணமாக:

மஞ்சள் குங்குமம்

சுத்தமான தேன்

பசும்பால் போன்றவற்றின் மூலமாகவும்

குரு தொழில்

ஆசிரியர் தொழில்

நீதித்துறை

சுற்றுலாத்துறை

வெளிநாட்டு வருமானம் 

போன்றவற்றின் மூலமாகவும் 

குறிப்பாக..

தந்தையின் சொத்துக்கள் கிடைப்பதன் மூலமாகவும் பணம் வரும்.


10 வது வீட்டில் இருந்தால்: 

சுயதொழில் செய்வதன் மூலமும், 

அரசுப் பணி, அரசியல், 

உயர் அதிகாரிகளாகவும், 

உயர் பதவிகளின் மூலமாகவும்

பண வருவாய் உண்டு.


11 வது வீட்டில் இருந்தால்: 

பெரும் லாபத்தையும் வெற்றியையும் கொடுக்கக்கூடிய அனைத்து தொழில்கள் மூலம் பணம் வரும் என்றாலும். குறிப்பாக

அதிகப்படியான பணம் புழங்கக்கூடிய 

பைனான்ஸ் தொழில்.

வங்கி அதிகாரி பணி.

தங்க ஆபரண வியாபாரம்.

நவரத்தின வியாபாரம்.

மேலும் 

பொழுதுபோக்கு சம்பந்தப்பட்ட அத்தனை துறைகளும்.

அனாவசிய தேவை என சொல்லக்கூடிய அத்தனை பொருட்களின் 

மூலம் பணம் வரும்.

ஒரு சிலர் மூத்த சகோதர/சகோதரிகளின் ஆதரவுடனும் பணம் சம்பாதிப்பார்.


12 வது வீட்டில் இருந்தால்: 

அன்றாடம் அழியக்கூடிய அத்தனை பொருட்களையும் விற்பனை செய்யக்கூடிய அனைத்து துறைகளிலும் பணம் சம்பாதிப்பார்.

மேலும்...வெளிநாடுகளின் மூலம் 

பணம் சம்பாதிப்பார்கள்.

குறிப்பாக..

இரவு நேர பணி 

உளவியல் பணி

மறைமுகத் தொழில்கள்

மறைமுக வருமானங்கள் மூலம்

பணம் சம்பாதிப்பார்கள்.

நன்றி வணக்கம் 

வாழ்க வளமுடன் 

வாழ்க வளர்க 

Comments