ஜனன கால ஜாதகத்தில்
சர ராசிகளில் மூன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே வீட்டில் இருந்து
உபய ராசிகளில் சந்திரன் அமர்ந்த
சந்திரன் திரிகோணபார்வையாக சுக்கிரனை பார்த்தாலும் மற்றவர்
களிடம் எளிதாக வேலை வாங்கி விடுவார்கள்
உபய ராசியில் சுக்கிரன் வக்கிரம்
பெற்று இருந்தாலும்
குருவீட்டில் சுக்கிரன் இருந்தாலும் சுக்கிரன் வீட்டில் குரு இருந்தாலும்
எப்போதும் தனது காரியத்தில் மட்டுமே கண்ணும் கருத்துமாக
இருப்பார்கள்.
அம்மாஞ்சல்லிக்கு கூட மற்றவர்களை பற்றி யோசிக்க மாட்டார்கள்.
உங்க கைகளை வைத்து உங்கள் கண்களை குத்த வைப்பதில் ஜகஜால கில்லாடிகள்.
இந்த அமைப்பை ஜோதிடமே தெரியாதவர்கள் எப்படி
கண்டுபிடிப்பது என்று ஒரு சிறிய
யூகம் செய்தால் கண்டுபிடித்து
விடலாம்.
நிரந்தரமான நண்பர்கள் இருக்க மாட்டார்கள்.
நண்பர்களை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பார்கள்
பகலில் வீட்டின் உள்ளே இருந்தாலும்
காம்பவுண்ட் கேட்டை பூட்டி வைத்திருப்பார்கள்.
நோகாம நோம்பு கும்பிடுவது எப்படி
என்று சர்வசாதரணமா சிந்திப்பார்கள்.
எப்போதும் மற்றவர்கள் உழைப்பின்
மூலம் தனது வருவாயை ஈட்டித் கொள்வார்கள்.
கேட்காமல் கேட்டு இலவசமாக வாங்கிக் கொள்வார்கள்.
சாப்பிடும் போது கோழி பறைப்பது
போல் பறைத்து சாப்பிடுவார்கள்.
இவர்கள் காலனி உள் புரமாக அதாவது பெருவிரல் இருக்கும் பின் புர பகுதியில் தேய்ந்து இருக்கும்
உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்
என்றே சோளிய முடிச்சுருவாங்க
நன்றி வணக்கம்
வாழ்க வளமுடன்
Comments
Post a Comment