உலக மதங்கள் பற்று பற்றியது

 உலகின் மதப் பிரிவுகளெல்லாவற்றிலும் மனிதனுக்குத் தேவையான அறிவுகள் நிரம்பியே உள்ளது.. இவற்றைக் கடைபிடிக்காத போதுதான் அவற்றின் பெயராலேயே மதக் கலவரங்களும்  ஏற்படுகிறது.. 


  உண்மையில் எம்மதமும் இக் கலவரங்களைச் செய்துதான் தத்தம் மதங்களை நிலை நிறுத்திக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தவில்லை. 


 இது மதங்களிலுள்ள ஆளுமைகளைப் பெற்ற தலைமைகளின் சுயநலங்கள் சார்ந்த சொந்த ஏற்பாடுகள்தான் இதை விளைவிக்கிறது. 


  ஒருபக்கம் பற்றினால் உலகிலுள்ள எல்லாப்பக்கமும் இக்கலவர நெருப்பு 

பற்றிக் கொள்கிறது. 


  பகவான் கிருஷ்ணர் கூறியது போல் எதிலும் தொடர்பில் இருக்கலாம். ஆனால் அதைப் பற்றியே பற்றிக்கொண்டிருக்கும் பற்று என்பதை அதில் வைக்கலாகாது.. இது வதைத்து அலைக்கழிக்கும் ஆற்றல்களை இறுகப் பற்றியுள்ளது.

இப்பற்றென்பது யுகம் யுகமாகக் கூடத் தொடரும் வல்லமையைப் பெற்றிருக்கிறது. 


  தன்னுடையது மட்டுமே என்பதை யார் உரிமையாகக் கொண்டாடினாலும், அதில் பற்று உண்டாவதைத் தடுக்க முடிவதில்லை. 


  எதிலும் தொடர்பே அற்றுப் போய்விட்டால், காலப்போக்கிலது மறதியின் கணக்கிற்குச் சென்றுவிடுகிறது. ஆனால் பற்று ஏற்பட்டு விட்டால் அது எத்தனை காலமாகிவிட்டாலும் நினைவிலேயே தங்கிவிடுகிறது. 


  இதை மதங்களுக்கும் சேர்த்துத்தான் கிருஷ்ணர் அருளியது. அதாவது மதப்பற்றும் கூடாதென்கிறார் அவர். அவரவருக்குரிய மதத் தொடர்பிலிருந்து கொள்ளலாம் ஆனால், அதைப்பற்றியே பற்றாக இருக்கக் கூடாது.


  சர்ப்ப கிரகங்களான ராகு கேதுவின் ஆதிக்கத்தில்தான் இப்பற்றும், பற்றின்மையும் வருகிறதென்பதை கவனியுங்கள்.

Comments