பெண்களிடம் பேசுவதால் நன்மைகள் உண்டு தெரியுமா?
தொழில்நுட்பங்கள் எல்லாம் வளர்ச்சி அடைந்த இந்த காலங்களிலும், பெண்களுடன் பேசத் தயங்கும் ஆண்களை நாம் பார்க்கிறோம். உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா! பெண்களிடம் ஐந்து நிமிடம் பேசுவதால் ஏற்படும் நன்மைகள் சில உண்டு. அவை என்னென்ன என்று உங்களுக்குத் தெரியுமா?
பெண்களிடம் பேசுவது என்பதற்கே எங்களுக்குப் பயமாக உள்ளது. இதில் அவர்களிடம் பேசுவதனால் ஏற்படும் நன்மைகள் எங்களுக்குத் தெரியவா போகிறது என்று எண்ணி கவலைப்படாதீர்கள்! மேற்கொண்டு இதை படியங்கள்...
ஒரு ஆண்களுக்கு எப்படிப்பட்டக் கவலைகள் இருந்தாலும் சரி, ஒரு ஐந்து நிமிடம் பெண்களுடன் பேசும்பொழுது அந்தக் கவலைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
பெண்களிடம் பேசுவது அது நம் மனதிற்கு ஒரு புது தைரியத்தை வரவழைக்கும். அதுமட்டுமின்றி, பெண்களிடம் பேசும் ஆண்களுக்கு மனநிலையானது மேம்படும்.
பெண்களுடன் பேசுவது ஆண்களின் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்கிறது. நீங்கள் நினைக்கலாம் பெண்களிடம் பேசுவதால்தான் மன அழுத்தமும் பதட்டமும் அதிகமாக வருகிறது என்று. ஆனால், அது உண்மை அல்ல. உங்களுக்கு இந்த அனுபவம் நிச்சயம் ஏதோ ஒரு தருணத்தில் நேர்ந்திருக்கலாம். ஏதாவது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது, உங்கள் சிநேகிதியிடம் பிடித்த நபரிடம் பேசி இருப்பீர்கள், அவர்களிடம் பேசி முடித்தபின்பு உங்களுக்கு அந்தப் பிரச்னை எல்லாம் தீர்ந்தது போன்று எண்ணம் வரும். ஆனால், அதற்காக அவர்கள் எந்த ஒரு தீர்வும் உங்களுக்குத் தந்திருக்க மாட்டார்கள். நீங்கள் பேசும்பொழுது உங்களிடம் பேசியிருப்பார்கள், அவ்வளவுதான் செய்திருப்பார்கள். இதனால் உங்கள் மன அழுத்தம் எல்லாம் குறைந்து இருக்கும்.
பெண்களிடம் பேசுவதால் ஆண்களின் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும், மற்றும் மருத்துவம் சார்ந்த பிரச்னைகள் தீரும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு ஐந்து நிமிடம் பெண்களிடம் பேசுவதால் ஆண்களுக்கு இத்தனை நன்மைகள் ஏற்படுகிறது. அதனால், ஆண்களே பெண்களிடம் பேசுவதற்குத் தயக்கம் காட்டுவதைத் தவிர்த்து, அவர்களிடம் நட்பின் அடிப்படையில் பேசி தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
யாரும் தவறாக அணுகினால் நன்மைகள் இல்லை என்றும் புரிந்து கொள்ளுங்கள்
நன்றி வணக்கம்
வாழ்க வளமுடன்
Comments
Post a Comment