கடனை அடைப்பது எப்படி ஔவையார் கூறினார்

 

எனக்கு 50 லட்சம் கடன் உண்டு 

இதற்கு பதிலை நாம் சிறுபிள்ளைகளாக இருக்கும் போதே படித்துள்ளோம்.மீண்டும் நினைவுகூருகிறேன்.

ஆன முதலில் அதிகம் செலவானால்
மானமழிந்து மதிகெட்டு போன திசை
எல்லார்க்கும் கள்ளனாய் எழுபிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு

"நல்வழி" என்னும் நூளில் ஔவையார் எழுதிய பாடல் இது...

விளக்கம்:
ஈட்டும் பொருளினைவிட அதிகமாக செலவு செய்பவர்கள் பிற்காலத்தில் தங்கள் மானத்தையும், அறிவினையும், உணர்வையும் இழப்பார்கள்... அவர்கள் எவ்வழி நடந்தாலும் திருடர்கள் போல நடத்தப்படுவர்... எத்துனை பிறப்பு பிறந்தாலும் எவ்வித மரியாதையும் கொடுக்கப்படாமல் தீயவர் போல நடத்தப்படுவர்...


அனைவரும் புரிந்துகொள்ள  வேண்டும் 


நன்றி வணக்கம் 

வாழ்க வளமுடன் 

Comments