நம்மை விட வசதியாக இருப்பவரைப் பார்த்து ஆசைப்படுவதை விட...
நம்மை விட வசதியற்றவரைப் பார்த்து நமக்கான வாழ்க்கையை இன்பமாக்கிக் கொண்டு வாழ்வதே சிறந்தது.....!
உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே
தாழ்வு மனப்பான்மை வரும்.....
உனக்குக் கீழே உள்ளவனை ஏளனமாய்ப் பார்க்காதே தலைக்கனம் வரும்....
உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு தன் நம்பிக்கை வரும்.....!!
இந்த உலகில் நேர்மையாக வாழ்பவர்கள் தான் அதிகம் சோதிக்கப்படுகிறார்கள்..!
அதற்காக ஒருபோதும் நேர்மையை விட்டுக் கொடுக்கக் கூடாது....
இந்த உலகமே சோதனைக் களம் தான்...!!
இதற்கெல்லாம் கூலி இறைவனிடத்தில் பல மடங்காக கிடைக்கும் போது அத்தனை வலிகளும் மறந்து
போய் விடும்....!!
வாழ வேண்டும் என்ற வைராக்கியமும்....
வாழ்ந்திடுவேன் என்ற தன்னம்பிக்கையும் போதும் வெற்றி நிச்சயம் நம்மை தேடி வரும்......!!!
அவமானங்களை விலக்கித் தள்ளுங்கள்,
நிராகரிப்புகளை தாங்கிக்கொண்டு முன்னேறுவோம்...!
நமக்கான அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும்...!
விதி ஆயிரங்கதவுகளை மூடினாலும், முயற்சி ஒரு ஜன்னலையாவது திறக்கும்....!!
தொடர்ந்து முயற்சி செய்ய....
நல்லதையே நினைப்போம்.....
நல்லதே நடக்கும்......!!!
நன்றி வணக்கம்
வாழ்க வளமுடன்
Comments
Post a Comment