🛑ஏமாற்றம் அடையும் நபர்கள் யார்?
🔯ஏமாற்றம்:
யாரையும் சுலபத்தில் ஏமாற்றிவிட முடியாது.ஆனால் ஒரு சிலர் தொடர்ந்து பலரிடம் பணத்தையோ/பொருளையோ/சொத்தையோ ஒன்றை இழந்து கொண்டே இருப்பார்கள்.
அப்படி பட்ட தொடர் ஏமாளிகளை பற்றி இப்பதிவில் காண்போம்
💥புதன் கிரகம்:
புத்திசாலிதனத்தை ஒரு மனிதனுக்கு வழங்கும் கிரகம் புதன் கிரகம் ஆகும்.
💥சனி கிரகம்:
தடைகளை தாமதத்தையும் தரக்கூடிய கிரகம்.சனியின் பார்வை ஓரு கிரகத்தின் மீது விழுந்தாலோ அல்லது சனியுடன் ஓரு கிரகம் சேர்ந்தாலோ அந்த கிரகத்தின் காரகத்துவத்தில் தடை ஏற்படும்.
ஒருவருடைய பிறந்த கால ஜாதகத்தில் ஏதோ ஓருவகையில் புதன் சனி தொடர்பு இருந்தால் அவர் ஏமாற்றம் அடைகிறார்.
ஓருவருடைய புத்திசாலி தனத்தை சனி தடை செய்வதால் பிறரிடம் ஏமாற்றுவதோ அல்லது ஏதோ ஓரு வகையில் ஏமாற்றம் அடைவதோ ஏற்படுகிறது.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🛑ஜோதிட விதிகள்:
🌹சனி +புதன் சேர்க்கை
🌹சனியின் பார்வை புதனின் மீது விழுவது
🌹சனியின் நேர் எதிரில் புதன் அமைவது
🌹சனியின் நட்சத்திரமான பூசம்,அனுசம்,
உத்திரட்டாதியில் புதன் நிற்பது.
🌹புதனின் நட்சத்திரமான ஆயில்யம் கேட்டை ரேவதியில் சனி நிற்பது
🌹புதனின் திரிகோணத்தில் சனி நிற்பது
என்ற அமைப்பு ஒருவருடைய பிறந்த கால ஜாதகத்தில் இருந்தால் அந்த நபர் பிறரிடம் தன் பொருளையே பணத்தையோ சொத்தையோ இழந்துவிடுவார்கள்
அல்லது ஷேர் மார்க்கெட் அல்லது ஏதோ ஓரு வருமானத்துக்கு உத்திரவாதம் இல்லாத கவர்ச்சி திட்டத்தில் இணைந்து ஏமாற்றம் அடைகிறார்கள்.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
💢எப்படி தப்பிக்கலாம்?
🌹பிறருக்கு கடன் கொடுக்க கூடாது.
🌹பிறருக்கு நகை/கார்/விலை உயர்ந்த பொருட்களை இரவல் கொடுக்க கூடாது.
🌹பிறருக்கு ஜாமீன் போடக்கூடாது
🌹பங்கு சந்தையில் முதலீடு செய்ய கூடாது
🌹சிட்பண்ட் ,மாதாந்திர தவணை திட்டம் நகை சீட்டு,தீபாவளி சீட்டு ஆகியவற்றில் இணையக்கூடாது.
🌹கூட்டு தொழில் செய்யக்கூடாது
இத்தகைய அமைப்பு இருந்த பலர் பலவிதங்களில் முழு சொத்தையும் ஆயுள் கால சேமிப்புகளையும் இழந்து உள்ளார்கள்.
ஆகவே இந்த அமைப்பு ஜாதகத்தில் கொண்டவர் தன்னுடைய இளம் வயதில் இருந்தே பிரச்சனை வரும் முறையை மனதில் பதித்து அதன்படி விழிப்புடன் செயல்பட்டால் அவர் ஏமாற மாட்டார் .
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
ஒருவருக்கு நன்மை சுபிட்ஷம் ஏற்படுகிறதோ இல்லையோ ஆனால் கெடுபலன் எப்படி ஏற்படும் என்பதை அவரவர் ஜாதகத்தை பார்த்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
இந்த ஏமாற்றப்பலன் அந்த கிரகங்களுக்கு உரிய தசாவிலோ புத்தியிலோ அந்தரத்திலோ நடைற்றே தீரும் என்பதால் முன்கூட்டியே கட்டுப்பாட்டுடன் வாழ்ந்
Comments
Post a Comment