மாரியம்மனும் கல்உப்பு பரிகாரம்...
மாரி என்றால் மழைத்துளி. ஆத்ரா அல்லது திருவாதிரை நட்சத்திர வடிவம் மழைத்துளி அல்லது மனிததலை அல்லது மண்டை ஒடு. அதனால்தான் திருவாதிரையில் சூரியன் செல்லும் ஆனி மாத காலம் மழை வரும்.
கல் உப்பு என்பதும் வெண்ணமை நிற மழைத்துளி வடிவமே ஆகும். இது திருவாதிரை வடிவான மனித தலையை தன் காலடியில் கொண்ட மாரியம்மனுக்கு படைப்பது தாரை ரகசியம்.
கீழ்க்கண்ட நட்சத்திர நபர்கள் உப்பை படைத்து மாரியம்மனை வழிபட செழிப்பான வளமான வாழ்க்கை பிரபஞ்சம் அருளும்:
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - சர்வ சம்பத்து பெறலாம்
திருவாதிரை, சுவாதி, சதயம் - உடல்நலம் மேம்படும்
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - வழிகாட்டுதல் பெறலாம்
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - காரிய சித்தி பெறலாம்
உத்திரட்டாதி, பூசம், அனுசம் - நேர்மறை ஆற்றல் பெறலாம்
அஸ்வினி, மகம், மூலம் - எதிரி பயம் விலகும்
நன்றி வணக்கம்
வாழ்க வளமுடன்
வ
Comments
Post a Comment