பரிகாரம் பலிக்க....

 எனது ஆசான் தெய்வத்திரு ரவிசங்கரன் ஐயாவின் கூற்றுப்படி, ஒன்பதாம் வீடு பரிகாரம் பலிதம் பெறுவதற்கான பாவகம் ஆகும். யார் ஒருவர் பூர்வ புண்ணிய பாக்கியத்தை பெற்றிருக்கிறாரோ, அந்த ஜோதிடரின் பரிகார வார்த்தைகள் பலிதம் ஆகும் என்பதே இதன் அர்த்தம். 


ஆகவே லக்னமோ/லக்கனாதிபதியோ மற்றும் ஒன்பதாம் இடம் என்று அழைக்கப்படக்கூடிய பாக்கியஸ்தானமும்/ பாக்கியாதிபதியும், ஒன்றுக்கொன்று தொடர்பு பெறும் பொழுது, அந்த ஜாதகர் சொல்லும் பரிகாரங்கள் அனைத்தும் மிக சரியாக பலிதமாகும்.


அந்த கிரக அமைப்புகள் பின்வருமாறு: 


1. லக்னத்திற்கு 9ஆம் இடத்தில் லக்னாதிபதி அமர்வது


2. லக்கினத்தில் ஒன்பதாம் அதிபதி அமர்வது


3. லக்னாதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் ஒன்று கூடி லக்னத்திற்கு மறையாமல் இருப்பது


4. ஒன்பதாம் அதிபதி லக்னாதிபதியின் சாரத்தில் அமர்வது


5. லக்னாதிபதி ஒன்பதாம் அதிபதியின் சாரத்தில் அமர்வது.


6. லக்னாதிபதி ஒன்பதாம் வீட்டை பார்ப்பது.


7. ஒன்பதாம் அதிபதி லக்னத்தை பார்வை செய்வது.


8. ஒன்பதாம் அதிபதி லக்னாதிபதியை பார்வை செய்வது.


9. லக்கினாதிபதி ஒன்பதாம் அதிபதியே பார்வை செய்வது.


10. லக்கினாதிபதியும் ஒன்பதாம் வீட்டு அதிபதியும் இணைந்து லக்னத்தையோ அல்லது ஒன்பதாம் வீட்டையோ பார்ப்பது.


இந்தப் பதிவை படிக்கும் ஜோதிடர்கள் மேற்கண்ட கிரக அமைப்பு தங்கள் ஜாதகத்தில் இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும்.

நன்றி 

பாரதிதாசன் 

Comments