முதியோர் இல்லங்களின் தேவை அதிகரிக்க என்ன காரணம்?

 முதியோர் இல்லங்களின் தேவை அதிகரிக்க என்ன காரணம்?


கால மாற்றம்.

குடும்பம் பற்றிய கண்ணோட்ட மாற்றம்.

எல்லா வயதினருக்கும் அவரவர் வயதிற்கு ஏற்ற அளவிலான பொறுமை, சகிப்புத்தன்மை இழந்து வரும் சமூக மாற்றம்.

,,,பொருளாதார நிலமை ஏற்படுத்தும் ",,,யாரையும் நம்பி இல்லை,,உன் சுதந்திரம் உன்னோடு, என்னை கட்டுப்படுத்த இவர்கள் யார்! " என்ற மனோபாவம்.

,,,எனது அபிப்பிராயத்தில் தற்கால பொருளாதார தற்சார்பு உள்ள முதியோர்களின் பிடிவாத குணம் , சகிப்புத்தன்மை அற்ற , இருப்பதை கொண்டு தேவைகளை பகிர்ந்து கொள்ள விரும்பாத மனோபாவம், சமூக ஊடகங்களில் இருப்பதை தொலைத்து இல்லாததை தேடும் போக்கு அதிகரிப்பு,,,,இவை பெற்றோருக்கும் மகன்/மகளுக்கும் இடைவெளி அதிகரிக்க காரணங்களாக இருக்கின்றன.

,,,இன்னமும்கூட பெற்றோர்களின் முதுமை கால வாழ்க்கையில் அக்கரை கொண்ட இளைய தலைமுறைகள் தான் அதிகம்.

,,,பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுடைய உடல் ஆரோக்கியமாகவும், திடமாகவும் இருக்கும் காலங்களில் பிடிவாதமாக "சுதந்திர வாழ்க்கை" என்ற போர்வையில், இளைய தலைமுறைக்கான சுதந்திர வாழ்க்கையில் அளவுக்கதிகமாக தலையிட்டு அவர்களுடைய அதிருப்தியை தொடர்ந்து பெற காரண கர்த்தாவாக மாறி விடுவது,,,,

,,,,,எல்லாம் அடங்கி தனது அடிப்படை உடல் சார்ந்த (பாத்ரூம், டாய்லெட்) செயல்களுக்கும் அடுத்தவர் சரீர உதவியை எதிர்பார்த்த நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பிறகு,,ஆயிரக்கணக்கில் பணத்திற்காக "சேவை " வழங்கிய முதியோர் இல்லங்களும் கை கழுவிய நிலையில்,,மகன்/மகள்/உறவுகள் கதி என்ற " மனப்பக்குவம் ".

,,,,சுருக்கமாக முதியோர் இல்லங்களின் தேவை அதிகரிக்க முதியோர்கள் தான் முக்கியமான, முதன்மையான காரண கர்த்தாக்கள்.

,,,வசதி இல்லாத ஆதரவற்றோருக்கான முதியோர் இல்லங்களோடு, பணத்தை வாங்கிக்கொண்டு "சேவை" அளிக்கும் முதியோர் இல்லங்களை ஒப்பிட வேண்டாம்.

,,,,,பணிவான வேண்டுகோள்: இந்த பதிவை விரும்பாதவர்கள் தயவு செய்து எதிர்வாக்கு அளிக்காமல், பொறுமையோடு கடந்து சென்று விடவும்.

   முதியோர் எண்ணிக்கை அதிகமாக வளர்ச்சி பெற்று வருகின்றனர் 


அரசாங்கம்  ஏதாவது  திட்டம் போட்டு  அவர்களை பேனிகாக்க வேண்டும் 


இல்லை என்றால்  அவர்களின் கதி


என்னாகும்........

Comments