புரிதலை புரிந்து கொள்ள முடியவில்லையே. ....

 

ஒரு தவறு செயகிறோம் அது தவறு என்று தெரிந்திருந்தும் வாழ்க்கையை கெட்டு போயிவிடும் என்று தெரிந்திருந்தும் அந்த தவறு மீண்டும் மீண்டும் செய்ய காரணம் என்ன? அதை எப்படி கட்டுப்படுத்துவது? கட்டுப்படுத்த முடியுமா? 

மனமும் மனமறியா, நிலையே இன்பம். ஏனென்றால் அது உணர்வு, அந்த உணர்வு உள்ளிருப்பவைக்கு தேவை. உள்ளிருப்பவைக்கு, அது தெரியாது.

எங்கு எதை கடக்க வேண்டுமோ அங்கு அதுவாகவே இருங்கள். எதனோடும் கலக்காமல், அதனோடு அதுவாகவே இருங்கள்.

ஏனென்றால் எங்கு எதை கடக்க வேண்டுமோ. அங்கு அதுவாக இருந்தால் மட்டுமே, அதை நீங்கள் கடக்க முடியும். எனவே உள்ளிருப்பவை அதை, உணர்ந்தால் மட்டுமே வெளியில் இருப்பவைக்கு அது புரியும்.

அதுவரையிலும், நீங்கள் உள்ளும்-வெளியுமாக ஒரு நிலையற்று. பலவாறாக இருக்கும் மனநிலை உண்டாகிவிடும்.

புரிதலற்ற கற்பனையே, பயத்தின் ஆரம்பம்.

அதாவது புரிதலற்ற கற்பனை முதலில் குழப்பத்தை உண்டு பண்ணும் அந்த குழப்பம் நீடிக்கும் பொழுது அது பதட்டமாக மாறும் ஒன்றில் குழப்பமும் பதட்டமும் தொடர்ந்து நிகழ்வது ஆனால் அதுவே உங்களுக்கு பயத்தை விட்டு செல்லும்.

ஒரு மனிதரால், இங்கு அனைத்தையும் உணர்ந்து விட இயலாது.

ஒருவருக்கு எது தேவை, எப்பொழுது தேவை எப்படி தேவை' அதை எப்பொழுது எப்படி அனுபவிக்க வேண்டும் என்பது முதல் கொண்டு எழுதப்பட்டது. எனவே அதை அனுபவிப்பது மட்டுமே நம் கையில் உள்ளது. எனவே ஒவ்வொரு வினாடியையும் அனுபவியுங்கள் நாளைய பற்றிய, தன்மை இன்றின் இடம் மட்டுமே உள்ளது.

எனவே நீங்கள் நாளைய பற்றி இன்று சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்று இந்த வினாடியில் இருந்தீர்கள் என்றால், அது நாளை பற்றிய பயமும் கற்பனையும் தானாகவே புரிதலுற்று மறைந்துவிடும்.

அதாவது ஒருமைப்பாடு, அதுதான் ஒன்றின் நோக்கம், ஒன்றின் தேவை. அது மனதின் ஒரு நிலையில் மட்டுமே உள்ளது. அதன் பெயர் தான் ஆத்மசாந்தியும் கூட…

எனவே இந்த உலகத்தில் எது ஒன்றும் உண்மையைச் சார்ந்தது இல்லை. ஒவ்வொன்றும் அது அதனின் தேவையைச் சார்ந்தது. அதாவது எது இங்கு தேவையோ' அதுதான் இங்கு தோன்றுகிறது. எது எதுவாக தோன்றுகிறதோ!, அது அதுவாகவே தான்' இங்கு இருக்கின்றது-இயங்குகின்றது.

ஏனென்றால் உண்மை என்பது.0

அதாவது உங்களில் எது இருக்கிறது,. அதுதான் உங்களுடைய உண்மை. என்னுள் எது இருக்கிறதோ, அதுதான் என்னுடைய உண்மை. உண்மையில் உண்மை என்பது, எது என்றால்? எது ஒன்றினுள், எதுவும் இல்லாமல் இருக்கிறதோ' அதுதான் உண்மையில் உண்மை. அதாவது அதுதான், இந்த பிரபஞ்சம். சூனியத்தை கடந்த நிலை.

எனவே இங்கு சரி என்றும் தவறு என்றும் தனித்து கிடையாது.

உங்களுக்கு எது நலத்தை இன்பத்தை கொடுக்கிறது அது உங்களின் சரியாக இருக்கிறது அதைத்தான் உங்களுள் இருப்பது இருப்பாக இருக்க உயிராக இருக்க இயக்க நிலையை தோற்றுவிக்கிறது.

அதாவது எது உங்களின் இன்ப துன்பமாக இருக்கிறது. அதுதான் உங்களின் நன்மையும்-தீமையும் ஆக இருக்கிறது.

எனவே இங்கு ஒவ்வொரு, உயிரும் ஒவ்வொரு பொருளும், ஒவ்வொரு காலத்திலும்-பரிமாணத்திலும் நீட்ச்சியம்' ஆகிக்கொண்டிருக்கிறது.

அதாவது இன்ப துன்பம் இருப்பவருக்கே நன்மை தீமை இருக்கிறது. நன்மை தீமை இருப்பவருக்கே, ஒளியும் இருளும் இருக்கிறது அதாவது கடவுளும்-சாத்தானும் இருக்கிறார்.

அதை தவிர்த்து கர்மாவின் கணிதத்தில் நன்மை தீமை என்பது கிடையாது. ஒழுங்கும் தர்மமும் மட்டுமே உள்ளது.

அதாவது அகமும்-புறமும் ஒன்றே. உங்களுள் எது இருக்கிறதோ, அதுவாகவே நீங்கள் இருக்க வேண்டும். அதுதான் ஒழுங்கு சமநிலை. அது எதைச் செய்கிறது அது எதை நோக்கி இருக்கிறது அதற்கான ஒன்றை அதற்கு நிகழ வேண்டும், அதுதான் தர்மம், இயற்க்கை,. அதற்கான உயிர் சக்தியும்-வலிமையும் தான் இந்த கர்மா.

ஏனென்றால் உங்களைத் தான்,. நீங்கள், தேடிக் கொண்டிருக்கிறீர்கள். இங்கு, ஒவ்வொன்றிலும். ஆனால் இங்கு இருக்கும், ஒவ்வொன்றும், தான் உங்களுள் இருக்கிறது. ஏனென்றால் இது ஒரு சூனியம். அனைத்தின் அங்கம் தான், நீங்கள். அனைத்தின் பிரதிபலிப்பு தான், நீங்கள். இது இப்பொழுது புரிவது கடினமே இது புரியும் பொழுது நிறைவாகிவிடும் நீங்கள் நிறைவாகும் பொழுது இது புரிந்வுறும்-முடிவுறும் இந்த பயணம்…

Comments