செவ்வாயும் பண பிரச்சனை பண கஷ்டம்

 ஜாதகத்தில் செவ்வாய் பகவான் மூலம் யாருக்கெல்லாம் "பணக்கஷ்டங்கள் பண பிரச்சினைகள், பணம் சேமிப்பு சார்ந்த பிரச்சினைகள்,வருமானம் சார்ந்த தொழில் சார்ந்த விஷயங்களில் பிரச்சனைகள் ஏமாற்றங்கள் தர்ம சங்கடங்கள் ஏற்படுவது இதுபோன்ற பிரச்சனைகள் யாருக்கெல்லாம் ஏற்படும் என்பதை இந்த பதிவில் நாம் மிகத் தெளிவாக பார்க்கலாம்.


அதாவது நமது லக்னத்தில் இருந்து செவ்வாய் பகவான் எந்த எந்த பாவத்தில் எல்லாம் இருக்கின்றதோ அந்த பாவம் சார்ந்த விஷயங்களில் நமக்கு பணக்கஷ்டங்கள், பண பிரச்சனைகள், பண இழப்புக்கள்,

கடன் பிரச்சனைகள், போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

இது குறிப்பிட்டு (2,4,10) இந்த மூன்று பாவங்களில் ஏதேனும் ஒரு பாவத்தில் செவ்வாய் பகவான் இருப்பவர்கள் மட்டும் எந்த மாதிரி பிரச்சினைகள் ஏமாற்றங்கள் இருக்கும் என்பதை பார்க்கலாம்.




1.(2ம் பாவத்தில் "செவ்வாய் பகவான்")


யாருடைய ஜாதகத்தை எல்லாம் லக்னத்தில் இருந்து 2ம் பாவத்தில் 

செவ்வாய் பகவான் இருக்கின்றதோ அவர்களுக்கு பணம் சேமிப்பு சார்ந்த பிரச்சனைகள்(Money Saving Problem)என்பது இருக்கும்.

இவர்கள் சம்பாதிக்கும் பணத்தை இவர்களால் சேமித்து வைக்க முடியாது இவர்கள் கையில் பணம் தாங்காது நிற்காது.


மேலும் இவர்களின் வருமானத்திற்கு அதிகமான இவர்களின் சக்திக்கு அதிகமான பணத் தேவைகள்,பண செலவுகள்,வெட்டிச் செலவுகள்,

விரைய செலவுகள் என்பது இவர்களுக்கு இருக்கும்.


அதாவது இவர்கள் 30  ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கின்றார்கள் என்றால் இவர்களுக்கு 35 ஆயிரம் ரூபாய் 40 ஆயிரம் ரூபாய் செலவுகள் தேவைகள் விரைய செலவுகள் என்பது இவர்களுக்கு இருக்கும்.

இவர்கள் சம்பாதிக்கும் பணம் என்றைக்குமே அவர்களுக்கு போதாமல் இருக்கும்.


இவர்களின் வருமானத்திற்கு அதிகமான செலவுகள் தேவைகள் என்பது இவர்களுக்கு வாழ்க்கையில் இருந்து கொண்டே இருக்கும் இவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அந்த பணத்தை இவர்களால் சேமித்து வைக்கவே முடியாது பண கஷ்டங்கள் பண விரையங்கள் என்பது இவர்களுக்கு வாழ்க்கையில் எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும்.



2.(4ம் பாவத்தில் "செவ்வாய் பகவான்")


யாருடைய ஜாதகத்தை எல்லாம் லக்னத்தில் இருந்து 4ம் பாவத்தில் 

செவ்வாய் பகவான் இருக்கின்றதோ அவர்களுக்கு"வீடு ,வண்டி,

வாகனங்கள், சொத்து,நிலங்கள்"

இது சார்ந்த விஷயங்களின் மூலமாக பணக்கஷ்டங்கள், பண இழப்புகள், பண செலவுகள் ,விரைய செலவுகள் இவர்களுக்கு கண்டிப்பாக ஏற்படும்.


அதாவது கடன் வாங்கி, சீட்டு எடுத்து, loan எடுத்து இவர்கள் "வீடு,வண்டி வாகனங்கள், சொத்து, நிலங்கள், வாங்கும் படியான நிலைமைகள் இவர்களுக்கு வாழ்க்கையில் கண்டிப்பாக ஏற்படும்.


இவர்கள் கடன் வாங்கி, சீட்டு எடுத்து Loan எடுத்து வீடு வண்டி வாகனங்கள் சொத்து நிலங்கள் வாங்கினார்கள் என்றால் பிறகு அந்த கடனை அடைக்க இவர்களால் முடியாது.பிறகு இதன் மூலமாக இவர்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகள் ஏமாற்றங்கள் பண இழப்புகள் கடன் பிரச்சனைகள் இவர்களுக்கு கண்டிப்பாக ஏற்படும்.


மேலும் அம்மா மூலமாகவும் அம்மாவுடைய சொந்தங்கள் உறவுகள் மூலமாகவும் பணக்கஷ்டங்கள்,பண இழப்புகள், கடன் பிரச்சினைகள்,வெட்டி விரயச் செலவுகள் இவர்களுக்கு கண்டிப்பாக ஏற்படும்.




3.(10ம் பாவத்தில் "செவ்வாய் பகவான்")


யாருடைய ஜாதகத்தை எல்லாம் லக்னத்தில் இருந்து 10ம் பாவத்தில் செவ்வாய் இருக்கின்றதோ அவர்களுக்கு தொழில் சார்ந்த விஷயங்களில் பிரச்சனைகள் பணக்கஷ்டங்கள், நஷ்டங்கள், ஏமாற்றங்கள் என்பது கண்டிப்பாக இருக்கும்.


கடன் வாங்கி, சீட்டு எடுத்து,loan எடுத்து தான் இவர்கள் சொந்தமாக தொழில் செய்யக்கூடிய நிலைமைகள் இவர்களுக்கு வாழ்க்கையில் ஏற்படும்.இவர்கள் கடன் வாங்கி தொழில் செய்தார்கள் என்றால் கண்டிப்பாக தொழிலில் இவர்களுக்கு நஷ்டங்கள் பிரச்சனைகள் என்பது கண்டிப்பாக ஏற்படும்.


தொழில் சார்ந்த விஷயங்களில் கடன் பிரச்சனைகள் பண கஷ்டங்கள் பண இழப்புகள் தேவையில்லாத வெட்டிச் செலவுகள் வெட்டி விரயங்கள் என்பது இவர்களுக்கு கண்டிப்பாக ஏற்படும்.


மேலும் இவர்களுக்கு தொழில் சார்ந்து யாருமே உதவி செய்ய வர மாட்டார்கள்.யாருடைய உதவிகளும் ஆலோசனைகளும் இவர்களுக்கு தொழில் சார்ந்த விஷயங்களில் வராது. இவர்கள்தான் காலத்திற்கும் தொழில் சார்ந்த அத்தனை விஷயங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும்.


மேற்கொண்டு யாருடைய ஜாதகத்தில் எல்லாம் இந்த (2,4,10) இந்த மூன்று பாவங்களில் ஏதேனும் ஒரு பாவத்தில் செவ்வாய் பகவான் இருக்கின்றதோ அவர்கள் இந்த பதிவில் நான் சொல்லியிருப்பதை உங்களுடைய வாழ்க்கையில் பொருத்திப் பாருங்கள் எல்லாம் சரியாக இருக்கும்.


நன்றி வணக்கம் 

வாழ்க வளர்க



Comments