தேவையற்ற வம்பு வழக்குகள், நிலம் சம்பந்தப்பட்ட சொத்து தகராறுகள், அடிதடிகள், வாகன விபத்துகள் போன்றவற்றால் அதிகப்படியான பாதிப்பை சந்திப்பவர்கள் கவனத்திற்கு..


தேவையற்ற வம்பு, வழக்குகள் சார்ந்த பிரச்சனைகள், அடிதடிகள் போன்றவற்றிற்கு காரகம் பெற்றவர் சுபர் தொடர்பில்லாத பாபர் தொடர்பு பெற்ற செவ்வாய் ஆவார். சுபர் தொடர்பில்லாத செவ்வாய், லக்னம், லக்னாதிபதி ராசியுடன் தொடர்பு கொள்ளுதல்,

ஜாதகத்தில் செவ்வாய் ராகுவுடன் அல்லது சனியின் தொடர்பு கொண்ட தசா புத்திகள்,செவ்வாயின் வீடுகளில் நின்ற சனி ராகு தசாபுத்திகள், சனியின் வீடுகளில் நின்ற செவ்வாய், ராகு தசாபுத்திகள் நடக்கும் பொழுது வம்பு, வழக்குகள், விபத்துகள் சார்ந்த பிரச்சனையால் ஜாதகர் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. 

இது போன்ற கால கட்டங்களில்தான் உணர்ச்சிவசப்பட்டு ஒரு தவறைச் செய்து விட்டு பின்பு அதனால் வருந்தத்கூடிய கூடிய சூழ்நிலை உண்டாகும். முடிந்தவரை பாபர் தொடர்பை பெற்ற செவ்வாய் தசா புத்தி காலகட்டங்களில் நிதானத்தையும் பொறுமையையும் கடைபிடிப்பது மட்டுமே ஜாதகருக்கு நல்லதாகும். செவ்வாய் பாதிப்பு தரக்கூடிய நிலையிலிருந்து தசாபுத்தி வரக்கூடிய பட்சத்தில் கந்த சஷ்டி கவசம் படிப்பது தினமும் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். #Iniyavan 

செவ்வாய்க்கிழமை அன்று, அதிகாலை செவ்வாய் ஓரையில் முருகனுக்கு அபிஷேகம் செய்து, நெய் தீபமேற்றி செவ்வரளி மாலை சாற்றி வழிபட்டு வருவது நல்லதாகும்.


வாழ்வியல் பரிகாரங்களாக எல்லா விஷயங்களிலும் நிதானம் மற்றும் பொறுமையை கடைபிடித்தல், பிறரிடம் பழகும் விதத்தில் சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ளுதல், #Iniyavan

தன்னிடமிருந்து வெளிப்படக்கூடிய வார்த்தைகளில் கவனமாக இருத்தல், பிறரை மனரீதியாக காயப்படுத்தக்கூடிய வார்த்தைகளை ஒரு பொழுதும் உபயோகப்படுத்தாமல் இருப்பது,

உடன்பிறந்தவர்களுக்கு தன்னால் பாதிப்பு ஏற்படாத வண்ணம் நடந்து கொள்ளல்,

வாகனங்களை இயக்கும்போது குறைவான வேகத்தில் இயக்குதல்,

வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிந்து செல்லுதல், உடல்நிலை ஒத்துழைத்தால் ரத்த தானம் செய்தல், ஆலயங்களுக்கு குங்குமம் மற்றும் அங்குள்ள விக்ரகங்களுக்கு சிவப்பு வஸ்திரம் வாங்கிக் கொடுத்தல் போன்றவை சிறந்தது ஆகும்.

நன்றி..

Astrologer

ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed,

 நன்றி வணக்கம்

வாழ்க வளர்க

வாழ்க வையகம்

Comments