ஜோதிட தகவல்கள் .....
1.நான்காம் இடம் வலுப்பெற்றிருக்கும் பட்சத்தில் ஜாதகரிடம் நுணுக்கமான வேலைத்திறன்,நல்ல புத்தி சாலித்தனம், சமயோசித புத்தி இருக்கும்.
2.நான்காம் இடம், நான்காம் வீட்டு அதிபதி எந்த அளவுக்கு சுப கிரகங்களின் தொடர்பில் இருக்கிறதோ அந்த அளவிற்கு ஜாதகருக்கு உறவினர்களால் ஆதரவு உண்டு.
3.ஏழாம் இடம், 7-ஆம் வீட்டு அதிபதி, நண்பர்களைக் குறிக்கும் புதன் போன்றவை சுபக்கிரகங்களின் தொடர்பில் இருக்கும் போது ஜாதகருக்கு நண்பர்களால் நன்மை உண்டு.
4.9-ஆம் இடம் ஒன்பதாம் வீட்டு அதிபதி சுபக்கிரகத்தின் தொடர்பில் இருக்கும் ஜாதகர்களுக்கு சமுதாயத்தில் மதிப்பு மரியாதைக்கு என்றும் குறைவிருக்காது.
5.பத்தாம் வீட்டிற்கு இயற்கைச் சுபர்களின் தொடர்பு இருக்கும் போது ஜாதகரின் இரக்க சிந்தனை தொழிலை பாதிக்க வாய்ப்புண்டு.
6.சனி மேஷத்தில் நீசம் ஆகவோ அல்லது துலாத்தில் உச்ச வக்கிரமாகவே இருந்து சுபக் கிரகங்களின் தொடர்பில் நின்று தசா புக்தி நடக்கும்போது ஜாதகருக்கு வருமானம் அதிகரிக்கும்.
7 .மீன லக்னத்திற்கு சுக்கிரன் பாக்கியாதிபதி செவ்வாய் தொடர்பை பெறுவது நல்ல துணையை பெறுவதற்கு வழிவகுக்கும்.
8.ஐந்தாம் இடம், 5-ஆம் அதிபதி சனி செவ்வாய், இராகு, கேது போன்ற பாவிகள் தொடர்பில் இருப்பது குலதெய்வ வழிபாட்டில் குறை இருப்பதை உணர்த்தும். இவர்கள் குலதெய்வ வழிபாட்டினை மேற்கொள்வது வாழ்வினில் முன்னேற்றத்தை தரும்.
9.குலதெய்வம் இன்னதென்று தெரியாதவர்கள் திருப்பதி ஏழுமலையானையும், திருச்சிஸ்ரீ ரங்கநாயகி அன்னையையும் வழிபட்டு வருதல் சிறப்பு.
10.நீசமான கிரகம் சந்திர கேந்திரத்தில் இருப்பது சிறப்பு.
11.இலக்னத்தில் புதன் திக்பலம் அடைவார். அந்த வகையில் லக்னத்தில் புதன் நின்றவர்கள் நல்ல புத்தி சாலித்தனம், எதையும் விரைவாகப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அதுமட்டுமின்றி புதன் மனதை இளமையாக வைத்துக் கொள்ளக் கூடிய கிரகம். எவ்வளவு வயதானாலும் தங்கள் வயதானதாக இவர்கள் உணர மாட்டார்கள்.
நன்றி வணக்கம்🙏🏻
வாழ்க வளர்க🙌
வாழ்க வையகம் 🙌
Comments
Post a Comment