♋துலாம் ராசி,துலாம் லக்கினமும் குலதெய்வ சாபமும்,குலதெய்வ குற்றமும்
🌹குல தெய்வ தோசை குல தெய்வ சாபத்தால் பாதிக்கப்படக்கூடிய இந்த துலாம் ராசி துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு எந்த மாதிரி பிரச்சனைகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.
🌹துலாம் ராசி,துலாம் லக்னம் ஏன் குல தெய்வ குற்றத்தை கொடுக்கக்கூடிய பாவம் என்றால்.நம்முடைய பாரம்பரிய ஜோதிடப்படி கால புருஷ தத்துவத்திற்கு அடிப்படையில் துலாம் என்ற பாவம் 7-ஆம் பாவமாக வரும்.
🌹என் கணித ஜோதிட அடிப்படையில் 7ம் என் என்பது கேதுவை குறிக்கக்கூடிய என்னாகும்.கேது பகவான் ஆன்மீகம் சார்ந்த விஷயங்களுக்கு காரகத்துவமான கிரகமாகும் அதேபோன்று கேதுவின் நட்சத்திரம் தான் குலதெய்வ தோஷத்தை கொடுக்கக்கூடிய நட்சத்திரங்களாகும்.
🌹அதேபோன்றுதான் கேதுவிற்கு சொந்தமான ஏழாவது என்னும் குலதெய்வ தோசத்தை குற்றத்தை கொடுக்கும் அந்த ஏழாவது என் கால புருஷனின் அடிப்படையில் பார்க்க வேண்டும்.அப்படிப் பார்த்தால் ஏழாவது எண் காலபுருஷ அடிப்படையில் துலாம் என்ற பாவமாக வரும்.அதனால்தான் துலாம் பாவம் துலாம் ராசி குலதெய்வ தோசத்தை கொடுக்கக்கூடிய ராசி பாவமாகும்.
🌹அந்தவகையில் யாரெல்லாம் இந்த துலாம் ராசி துலாம் லக்னத்தில் பிறக்கிறார்கள் அவர்களுக்கு குல தேவனுடைய ஆசீர்வாதம் இல்லை என்று அர்த்தம்.அதேபோன்று லக்ன அதிபதி சென்று துலாம் என்ற பாவத்தில் இருந்தாலும் அவர்களுக்கு குலதெய்வதோஷம் குற்றம் இருக்கின்றது என்று அர்த்தம்.
🌹உதாரணமாக ஒருவர் கன்னி லக்னத்தில் பிறந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் லக்னாதிபதி புதன் சென்று துலாம் என்ற பாவத்தில் இருந்தாலும் இவர்களுக்கு குலதெய்வ தோஷம் இருக்கும்.
உதாரணமாக ஒருவர் கன்னி லக்னத்தில் பிறந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் லக்னாதிபதி புதன் சென்று துலாம் என்ற பாவத்தில் இருந்தாலும் இவர்களுக்கு குலதெய்வ தோஷம் இருக்கும்.
🌹அதே சமயம் ஒருவர் கடக லக்னத்தில் பிறந்து இருந்து லக்னாதிபதி சந்திரன் சென்று துலாம் என்ற பாவத்தில் இருந்தாலும் அவர்களுக்கு குலதெய்வ தோஷம் இருக்கின்றது என்று அர்த்தம்.துலாம் ராசி துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குலதெய்வ தோஷம் குற்றம் இருக்கின்றது என்று அர்த்தம்.
🌹கண்டிப்பாக இவர்கள் பிறப்பதற்கு முன்பு இவர்களின் தந்தை அல்லது இவர்கள் பரம்பரையில் இருந்தவர்கள் உண்மையான குல தெய்வத்தை வணங்கும் வழக்கத்தை விட்டிருப்பார்கள்.
🌹இவர்கள் குலதெய்வம் என்று நினைத்துக் கொண்டு ஏற்றுக்கொண்டு ஒரு தெய்வத்தை வணங்கி கொண்டிருப்பார்கள்.
ஆனால் அது இவர்களின் உண்மையான குலதெய்வமாக இருக்காது இவர்கள் முன்னோர்களின் உண்மையான பூர்வீகம் வேறு ஒரு ஊராக இருக்கலாம்.இவர்கள் பூர்வீகத்தை விட்டு விட்டு வேறொரு ஊருக்கு இடம்பெயர்ந்து இருக்கலாம்.
🌹இல்லையென்றால் இவர்கள் வெறும் 2,3,4 தலைமுறைகள் மட்டுமே ஒரு தெய்வத்தை குலதெய்வமாக வணங்கி கொண்டிருப்பார்கள் ஆனால் அது இவர்களுக்கு குலதெய்வமாக வராது குலதெய்வம் என்பது ஏழு தலைமுறைகளுக்கு முன்பு இவர்கள் முன்னோர்கள் வணங்கிய கடவுள் தான் இவர்களுக்கு குலதெய்வமாக வரும்.
🌹இதற்கு என்ன ஆதாரம் என்றால் யாரெல்லாம் இந்த துலாம் ராசி துலாம் லக்னத்தில் பிறக்கின்றார்கள் அதேபோன்று லக்னாதிபதி சென்று துலாம் என்ற பாவத்தில் யாருக்கெல்லாம் இருக்கின்றதோ இவர்கள் வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்பு வரை உறவினர்கள் மூலமாகவும் சொந்தங்கள் மூலமாகவும் சமூகத்தின் மூலமாகவும் எந்த ஒரு உதவிகளும் பயன்களும் அனுசரிப்பும் நன்மைகளும் ஆதாயங்களும் பயன்களும் இவர்களுக்கு இருக்காது.
🌹உறவினர்களால் சொந்தங்களால் இவர்கள் வாழ்க்கையில் எந்த ஒரு பிரயோஜனமும் இருக்காது.
இவர்களுக்கு ஒரு பிரச்சனை கஷ்டம் என்று வந்தால் இவர்களுக்கு உதவி செய்ய உறவுகள் சொந்தங்கள் யாருமே முன்வர மாட்டார்கள்
🌹எல்லா உறவினர்கள் சொந்தங்கள் இருந்தும் இவர்கள் இல்லாதது போன்று இருப்பார்கள்.உறவினர்கள் சொந்தங்களுடன் இவர்கள் ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள்.
பேச்சுவார்த்தை இல்லாமல் தனித் தனியாகத்தான் இருப்பார்கள்.
🌹அதேபோன்று குலதெய்வ ஆசிர்வாதம் விட்டுப்போனவர்களுக்கு மன உளைச்சல்கள் மன வேதனைகள் மன குழப்பங்கள் மனஸ்தாபங்கள் இதுபோன்ற பிரச்சனைகள் மிக மிக அதிகமாக இருக்கும்.
🌹இவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் வளர்ச்சி என்பது இவர்களுக்கு அவ்வளவாக இருக்காது தொழில் சார்ந்த பிரச்சனைகள் இவர்களுக்கு கண்டிப்பாக இருக்கும் தொழிலில் நஷ்டங்கள் ஏமாற்றங்கள் இவர்களுக்கு வரும்.
🌹அதேபோன்று இவர்களுக்குப் தொழிலில் நிலையான வருமானம் இல்லாமல் போய்விடும் 6 மாதம் தொழில் நன்றாக இருக்கும் 6 மாதம் இவர்களுக்கு தொழில் நன்றாக இருக்காது அதாவது 3 மாதம் தொழிலில் வருமானம் வரும் அதே போன்று 3 மாதம் இவர்களுக்கு தொழிலில் வருமானம் வராது.
தொழிலில் நிலையான வருமானம் இல்லாமல் இவர்கள் மிகவும் கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்படும்.
🌹மேலும் இவர்கள் உத்தியோகத்தில் இருந்தால் கூட உத்தியோகத்தில் இவர்கள் வாங்கும் அந்த சம்பளப் பணத்தைக் கூட இவர்களுக்காக விருப்பத்திற்காக அந்த பணத்தை அனுபவிக்க முடியாது அதேபோன்று அந்த பணத்தை சேமித்து வைக்க முடியாது.
🌹மருத்துவம் சார்ந்த விஷயங்களுக்காக கடன் பிரச்சினைகள் விரயச் செலவுகள் இவர்களுக்கு எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும்.
🌹சம்பாதிக்கக்கூடிய பணத்தை இவர்கள் அவ்வளவாக சேமித்து வைக்க முடியாது இவர்கள் கையில் பணம் தங்காது நிற்காது.குடும்ப வாழ்க்கையில் இவர்களுக்கு சந்தோசம் நிம்மதி அவ்வளவாக இருக்காது.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
♦குலதெய்வத்திற்கு தகுந்தவாறு ஏதாவது பரிகாரங்கள் இருக்கின்றதா
🌹பரிகாரத்தை பொறுத்தவரைக்கும் இரண்டு விதமான பரிகாரங்கள் இருக்கின்றன ஒன்று ஆண்மிக பரிகாரம் மற்றொன்று வாழ்வியல் பரிகாரம்.ஆனால் குல தெய்வ சாபத்திற்கு வாழ்வில் பரிகாரங்கள் தான் வேலை செய்யும் ஆண்மிக பரிகாரம் அவ்வளவாக வேலை செய்யாது.
🌹வாழ்வியல் பரிகாரங்கள் என்பது நம்முடைய ஜாதகப்படி எந்த மாதிரி செயல்கள் நாம் செய்கின்றோமோ அதன் மூலம் வரக்கூடிய நன்மைகளால் வரக்கூடிய பரிகாரமாகும்.அது தொழில் பரிகாரமாக இருக்கலாம் அல்லது நாம் செய்யக்கூடிய செயல் மூலம் வரக்கூடிய பரிகாரமாக இருக்கலாம்.
🌹நம்முடைய ஜாதகப்படி நாம் எந்த மாதிரி நல்ல விஷயங்கள் செய்ய வேண்டுமோ அதனை செய்து அதன் மூலம் வரக்கூடிய நன்மைகள் தான் வாழ்வில் பரிகாரமாகும்.
🌹எல்லோருக்கும் ஒரே விதமான வாழ்வியல் பரிகாரங்கள் வராது ஒவ்வொரு ஜாதகத்துக்கு தகுந்தவாறு அவர்களுக்கு இந்த பரிகாரங்கள் மாறுபடும் வேறுபடும்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌹யாரெல்லாம் இந்த துலாம் ராசி துலாம் லக்னத்தில் பிறந்திருக்கிறீர்களோ அல்லது லக்னாதிபதி யாருக்கெல்லாம் துலாம் என்ற பாவத்தில் இருக்கின்றதோ அவர்கள் இந்த பதிவில் நான் சொல்லி இருப்பதை உங்களுடைய வாழ்க்கையில் பொருத்திப் பாருங்கள் சரியாக இருக்கும்.
நான் சொல்லி இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் உங்களுக்கு கண்டிப்பாக இருக்கும்.
🌹ஜாதகத்தில் இந்த சூட்சமத்தை நீங்கள் பொருத்திப் பாருங்கள் நான் சொல்வது உங்களுக்குப் புரியும்.
🌹உங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும் நல்ல வழிகாட்டுதல்களையும் உங்களுடைய எதிர்கால பலன்களையும் தெரிந்து கொள்ளவும்.
Comments
Post a Comment