ஒருவர் ஜாதகத்தில் கர்மாவை எப்படி அறிந்து கொள்வது?
இதற்கெல்லாம் ஜாதகத்தை வைத்து கணித்து அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இல்லை.\
நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒவ்வொரு கணமும் நிகழும் ஒவ்வொரு சம்பவமும் கர்மாவின் பாற்பட்டதே ஆகும்…
இந்த நிமிடம் இந்த பதிலை நான் கோராவில் எழுதிக் கொண்டிருப்பதும் என் முன் வினைப்பயன் தான்… அதாவது கர்மா தான்.
ஆனால் இதை நம்ப மனம் மறுக்கும்… அதுவும் கர்மா தான்….
அதாவது இது எல்லாம் மூட நம்பிக்கை என்று நம் ஆழ் மனதில் ஒரு பிரமை தோன்றி நம்மை நம் வாழ்வில் சரியாக பயணிக்க விடாது….
அந்த தவறான பயணத்தின் விளைவாக நாம் சில பல தவறுகள் செய்ய நேரிடும்… அதுவும் கர்மா தான்….
ஆக…..
கர்மாவை மீறி ஒருவர் எந்த ஒரு செயலையும் மனதில் எண்ணவோ அல்லது செய்யவோ இயலாது என்பது தான் அக்மார்க் உண்மை…
அப்படியானால்…..
கர்மாவின் படி தான் எல்லாம் நடக்கும் எனில் நாம் வாழ்வில் முன்னேற எந்த வித முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் இருக்கலாமே என்று ஒரு சில பிரஹஸ்பதிகள் இங்கு சந்தேகம் எனும் பெயரில் கேட்கலாம்…. தவறில்லை…
ஆனால் அது அவர்களின் மனதில் ஏற்படும் ஒரு வித மாயையால் ஏற்படும் சந்தேகம்….
அவர் தம் வாழ்வில் ஏற்படும் சில பல அனுபவங்கள் இவ்வகையான சந்தேகங்களை நிவர்த்தி செய்யும்…
அதாவது…..
நமக்கான கடமைகளை அது முயற்சிகளாகட்டும், செயல்களாகட்டும் அல்லது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்… எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் அவைகளை செய்து கொண்டு வரும் பட்சத்தில்
அதற்கான நற்பலன்களை நிச்சயம் கர்மா அளிக்கும் என்பது தான் இங்கு அக்மார்க் உண்மை.
ஆக சுலபமாக சொல்வதானால்…..
எந்த ஒரு மனிதனின் ஜாதகத்தையும் மீறி கர்மா தான் செயல்படுகிறது….அவனது வாழ்வின் எல்லா நிலைகளிலும்…
ஒரு சிலர் அதை சுலபமாக புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுகின்றனர்….
மேலும் ஒரு சிலரோ அதை புரிந்து கொள்ள தங்கள் பணத்தையும், மதிப்பு வாய்ந்த ஒரு சில உறவுகளையும், விஷயங்களையும் இழந்து தவிக்கின்றனர்… இது தான் கர்மா என்பது தெ(பு)ரியாமலே… அறியாமலே….
ஆனால் என்றாவது ஒரு நாள் அவர்களுக்கும் …. கர்மா… தான் யார் என்பதை புரிய வைக்கும் என்பதில் மட்டும் எள்ளளவும் சந்தேகம் இல்லை…..
வாழ்க வளமுடன் நலமுடன்… என்றென்றும்….
Comments
Post a Comment