நெருப்பு நிலம் காற்று நீர் ராசிக்காரர்கள்..
மேஷம் ,சிம்மம் ,தனுசு இவை அனைத்தும் நெருப்பு ராசிகள், நெருப்பு என்றாலே துடிப்பு என்று அர்த்தம் இது ஒவ்வொரு ராசிக்கும் மாறுபடும் மேஷம் சிம்மம் தனுசு 3 இராசிகளுக்கும் துடிப்பு என்பது வெவ்வேறு விதமாக செயல்படும். இந்த நெருப்பு ராசிகளான மேஷம். சிம்மம் ,தனுசு ஆகிய மூன்று ராசிகள் அவருடைய சுய ஜாதகத்தில் வலிமை பெற்று இருந்தால் ஜாதகர் வீரியம் மிக்கவராகவும் வேக மிக்கவராகவும் இருந்து செயல்பட்டு அதன் வழியில் பல நன்மைகளை பெறுவார்.
மேலும் மேஷம்,சிம்மம், தனுசு ஆகிய நெருப்பு ராசிகள் சுயஜாதகத்தில் பாதிக்கப்பட்டால் தனது செயல்பாடுகள் மூலமாக அதிக இன்னல்களை தமக்குத்தாமே தேடி கொள்வார்.
ரிஷபம் கன்னி மகரம் ஆகிய மூன்று ராசிகள் நில ராசிகளாகும். நில ராசிகள் என்றாலே ஒருவரின் உடல் நலத்தையும். பொறுமை குணத்தையும், சகிப்புத் தன்மை குணத்தையும் குறிப்பதாகும், ஒருவருடைய சுய ஜாதகத்தில் நில ராசிகளான ரிஷபம், கன்னி மகரம், ஆகிய ராசிகள் மிகவும் வலிமை பெற்றிருந்தால் நல்ல உடல் நலத்தையும் . , நல்ல உடல் அமைப்பையும். நல்ல சொத்து சுகங்களையும். நல்ல நிலம் புலன்களையும். சிறந்த பொறுமைசாலியாகவும். அனைவரையும் அரவணைத்து கொள்ளக்கூடிய சகிப்புத் தன்மை கொண்டவராக இருப்பார்.
ஒருவருடைய ஜாதகத்தில் நில ராசிகளான ரிஷபம். கன்னி ,மகரம் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர் உடல்நலத்தில் நிச்சயம் உடல்நலக் கோளாறுகளையும்,பொறுமை அற்றவராகவும், சகிப்புத்தன்மை இல்லாதவராகவும் இருந்து அதன் வழியில் அதிக இன்னல்களை சந்திப்பார்.
மிதுனம், துலாம், கும்பம் காற்று ராசிகளாகும் காற்று என்றால் ஒருவரின் அறிவுத்திறனை குறிக்கும், ஒருவருடைய சுயஜாதகத்தில் மிதுனம், துலாம் ,கும்பம், ஆகிய ராசிகள் காற்று ராசிகள் வலிமை பெற்றிருந்தால் தனது அறிவுத் திறனால் உலகில் சாதிக்க முடியாத பல சாதனைகளை ஜாதகர் செய்வார், அவருடைய சுய ஜாதகத்தில் காற்று ராசியான மிதுனம் ,துலாம் ,மகரம், ஏதோ ஒரு வழியில் பாதிக்கப்பட்டிருந்தால் ஜாதக செய்யக்கூடிய செயல்கள் அனைத்தும் மிகவும் முட்டாள் தனமாகவே இருந்து அதன் வழியிலேயே ஜாதகர் அதிக இன்னல்களை சந்திப்பார்.
கடகம் ,விருச்சிகம். மீனம் .ஆகிய ராசிகள் நீர் ராசிகள் நீர் ராசிகள் வென்றால் ஒவ்வொருவரின் மனதை குறிக்கும், ஒருவரின் சுய ஜாதகத்தில் நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகள் மிகவும் வலிமை பெற்றிருந்தால் மனதில் குழப்பம் இல்லாத மனிதராகவும், மனவலிமை கொண்டவராகவும் தனது மன வலிமையால் பல சாதனைகளை செய்யக் கூடியவராகவும் இருப்பார்.
ஒருவருடைய சுய ஜாதகத்தில் நீர் ராசிகளான கடகம் ,விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகள் பாதிக்கப்பட்டு இருந்தால் எப்போதும் குழப்பமான மனத்துடனும் ,மற்றவர்களை சார்ந்து இருக்கக் கூடிய சூழ்நிலையும் ,நிம்மதியான தூக்கத்தை பெற முடியாதவராகவும், கற்பனை உலகில் வாழ கூடியவராகவும் இருப்பார், அதன் வழியில் ஜாதகர் பல இன்னல்களை சந்திக்க கூடிய சூழ்நிலை வரும்,
ஒருவர் திருமண பொருத்தம் பார்க்கும் போதும், அல்லது புதிய தொழில் தொடங்கும் போதும் ஒருடைய சுய ஜாதகத்தில் 8, 12 ஆகிய வீடுகள் நீர் ராசியாக வந்து அவை பாதிக்கப்பட்டிருந்தால் ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில், அல்லது தனது நண்பர்கள் வழியிலும் எதிர்பாராத வீண் விரயங்களையும்,மன வேதனைகளையும் சந்திப்பது நிச்சயமாகும். மேலும் புதிதாக தொழில் தொடங்குபவின் சுய ஜாதகத்தில் 8, 12 வீடுகள் நீர் ராசியாக இருந்து பாதிக்கப்பட்டு இருந்தால் மற்றவர்களை நம்பி செய்யக்கூடிய தொழில்கள் படுபாதாளத்தில் அவரை கொண்டு சேர்த்துவிடும்,
ஒருவரின் சுய ஜாதகத்தில் மேற்சொன்ன நெருப்பு, நிலம் ,காற்று ,நீர் ராசிகள் பாதிக்கப்பட்டு இருந்தால் அவற்றிலிருந்து ஜாதகர் மீண்டுவர சிறந்த ஆலய வழிபாடுகளையும் ,சிறு வகையில் செய்யக்கூடிய பரிகாரங்களும் நமது முன்னோர்கள் ஜோதிடக் கலைக்கு மிக அருமையாக எடுத்து சொல்லிக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
நன்றி வணக்கம் 🙏🏻
வாழ்க வளர்க 🤲
வாழ்க வையகம் 🙌
Comments
Post a Comment