சுக்கிரன் எந்த எந்த பாவத்தில் இருந்தால் எந்த மாதிரிபிரச்சனைகள்,

 ஜாதகத்தில் "சுக்கிர பகவான்"

 எந்த எந்த பாவத்தில் இருந்தால் எந்த மாதிரிபிரச்சனைகள்,தர்ம

சங்கடங்கள்,ஏற்படும் என்பதையும்

இதை நாம் முன்கூட்டியே ஜாதகத்தை வைத்து தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தவாறு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் இந்த பதிவில் நாம் மிக மிகத் தெளிவாக பார்க்கலாம்.


★பாரம்பரிய ஜோதிடத்திலும் வேத ஜோதிடத்தில் சுக்கிர பகவானை பற்றிய முரண்பட்ட தகவல்களும் மாறுபட்ட கருத்துக்களும் இருக்கின்றன உண்மையில் சுக்கிர பகவான் இருக்கும் பாவம் நம்முடைய ஜாதகத்தில் எவ்வாறு செயல்படும் என்பதை இந்த பதிவில் நாம் மிகத் தெளிவாக பார்க்கலாம்.


★சுக்கிர பகவான் ஜாதகத்தில் எங்கிருந்தாலும் நன்மை மட்டும் தான் செய்வார் சுக்கிர பகவான் ஒரு முழுச் சுபர்.சுக்கிர பகவான் ஒரு ஜாதகத்தில் நன்றாக இருந்தால் அந்த ஜாதகர் சுகவாசியாக இருப்பார் ஆடம்பரமாக செலவு செய்வார் ரசனையாக இருப்பார்,சொகுசு வாழ்க்கை வாழ்பவர்,அதிகமான காம சுகத்தை அனுபவிக்க இருப்பார்.

என்று சொல்வார்கள் ஆனால் அது அனைத்தும் முற்றிலும் தவறு சுக்கிர 

பகவான் ஜாதகத்தில் செயல்படும் விதமே வேறு விதமாக இருக்கும்.


★இப்பொழுது ஒவ்வொரு பாவத்திலும் சுக்கிரன் இருந்தால் எப்படி செயல்படும் என்பதை ஒவ்வொரு பாவமாக பார்க்கலாம்.


★1.(லக்னத்தில் "சுக்கிரன்")


★யாருக்கெல்லாம் லக்னத்தில் சுக்கிரன் இருக்கிறதோ யாருக்கு எல்லாம் லக்னாதிபதியுடன் சுக்கிரன் சேர்ந்திருக்கிறதோ கண்டிப்பாக இவர்கள் பிறப்பதற்கு முன்னால் இவர்கள் பரம்பரையில் குலதெய்வத்தை வணங்குவது விட்டுப் போயிருக்கிறது என்று அர்த்தம் அப்படியில்லை என்றால் இவர்களுக்கு லக்னத்தில் சுக்கிரன் இருக்காது மற்றும் லக்னாதிபதியுடன் சுக்கிரன் சேர்ந்து இருக்காது.


★இதற்கு என்ன ஆதாரம் என்றால் யாருடைய ஜாதகத்தில் லக்னத்தில் சுக்கிரன் மற்றும் லக்னாதிபதியுடன் சுக்கிரன் சேர்ந்து இருக்கிறதோ அவர்களுக்கு உறவுகள் மூலமாகவும் சொந்தங்கள் மூலமாகவும் எந்த ஒரு உதவியும் எந்த ஒரு பயனும் எந்த ஒரு ஆதாயம் இருக்கவே இருக்காது எல்லா உறவினர்களும் சொந்தக்காரர்களும் இருந்தும் அவர்களால் இவர்களுக்கு எந்த பயனும் இருக்காது.


★லக்னத்தில் சுக்கிரன் இருப்பவர்களும் மற்றும் லக்னாதிபதியுடன் சுக்கிரன் சேர்ந்து இருப்பவர்களும் இவர்களை போன்று இந்த உலகத்தில் அதிகமான மன உளைச்சலுக்கு  ஆளானபவர்களும் மற்றும் அதிகமான மன காயத்தை தன்னுடைய வாழ்க்கையில் ஏற்படுத்தி கொண்டவர்களும் எப்போதுமே மன உளைச்சலில் இருப்பது,அல்லது மன அழுத்தத்தில் இருப்பது,எப்போதுமே மன உளவியல் சார்ந்த பிரச்சனையிலேயே இருப்பது எப்போதுமே எதையாவது ஒன்றை யோசித்துக் கொண்டே இருப்பது.இதுபோன்ற பிரச்சனைகளை தினமும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் லக்னத்தில் சுக்கிரன் மற்றும் லக்னாதிபதியுடன் சுக்கிரன் சேர்ந்து இருப்பார்கள்.


★லக்னத்தில் சுக்கிரன் இருப்பவர்கள் மற்றும் லக்னாதிபதியுடன் சுக்கிரன் சேர்ந்து இருப்பவர்கள் என்றைக்குமே இந்த சமுதாயத்திற்கும் இந்த மக்களுக்கும் அடிமையானவர்கள் அவர்கள் அதாவது நான்கு பேர் நம்மை தவறாக பேசிடக்கூடாது நான்கு பேர் மத்தியில் நம்முடைய பெயர் தவறாக சித்தரிக்க கூடாது இந்த சமுதாயத்திலும் இந்த மக்களிடத்திலும் என்றைக்குமே நம்முடைய பெயரும் நம்முடைய அந்தஸ்தும் கெட்டுப் போகக் கூடாது என்ற ஒரு மன எண்ணத்திலேயே  தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இந்த சமுதாயத்திற்கு அடிமையாக வாழ்பவர்கள் இவர்கள் தான்.


★மேலும் லக்னத்தில் சுக்கிரன் இருப்பவர்கள் மற்றும் லக்னாதிபதியுடன் சுக்கிரன் இருப்பவர்கள் என்றைக்குமே தன்னுடைய தாயின் மீது அதிகமான பாசத்தை வைத்துக்கொள்ளக்கூடாது மேலும் தன்னுடைய தாய் இவர்களின் வாழ்க்கையில் என்றைக்குமே தலையிடக் கூடாது ஏனென்றால் இவர்களின் தாய் எடுக்கும் முடிவு என்றைக்குமே இந்த ஜாதகருக்கு சாதகமாக இருக்காது பாதகமாக தான் போய் முடியும்.


★share market,stock market, trading இது சார்ந்த விஷயங்களில் முதலீடு செய்யக் கூடாது அப்படி செய்தார்கள் என்றால் மிகப்பெரிய நஷ்டத்தை கண்டிப்பாக சந்திப்பார்கள்.


★(2ம் பாவத்தில் "சுக்கிரன்")


★இரண்டாம் பாவத்தில் சுக்கிரன் இருப்பவர்கள் என்றைக்குமே இவர்கள் பேசும் விதமே வேறு விதமாக இருக்கும் காலையில் மதியம் ஒன்று பேசுவார்கள்  மற்றும் இரவில் ஒன்று பேசுவார்கள்.


★அதாவது அடுத்தவர்களுக்கு கஷ்டம் என்று ஒன்று வந்தால் இவர்களை போன்று அவர்களுக்கு அறிவுரை சொல்பவர்கள் யாருமே கிடையாது இவர்கள் சொல்லும் அறிவுரையில் எப்படிப்பட்ட மன அழுத்தத்தில் மற்றும் பிரச்சனையில் இருப்பவர்களும் சரியான நிலைக்கு மாறி விடுவார்கள்.ஆனால் அதே பிரச்சினை இவர்களுக்கு வந்தால் இவர்கள் தன்னுடைய மனதை போட்டுக் குழப்பிக் கொள்வார்கள் இவர்களால் அந்த மன உளைச்சலில் இருந்து வெளியே வர முடியாது.


★(4ம் பாவத்தில் "சுக்கிரன்")


★யாருக்கெல்லாம் சுக்கிரன் நான்காம் பாவத்தில் இருக்கிறதோ இவர்கள் என்றைக்குமே தன்னுடைய தாயின் அறிவுரையின்படி அல்லது தன்னுடைய தாயின் வழிகாட்டுதல்படி எந்த ஒரு செயலும் செய்யக் கூடாது அப்படி செய்தார்கள் என்றால் அது பிரச்சனையில் போய் தான் முடியும்.


★ஏனென்றால் இவர்களின் தாய் இவர்களின் வாழ்க்கையில் எடுக்கும் முடிவு என்றைக்குமே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சாதகமாக இருக்காது பாதகமாக தான் முடியும் மீறி இவர்களின் வாழ்க்கையில் இவர்களின் தாய் தலையீடு செய்தார்கள் என்றால் அதன் மூலமாகவே இவர்களின் வாழ்க்கை வீணாகிவிடும்.


★(5ம் பாவத்தில் "சுக்கிரன்")


★சுக்கிரன் ஐந்தாம் பாவத்தில் இருப்பவர்கள் என்றைக்குமே மனம் சார்ந்த விஷயங்களிலும் மன உளைச்சல் சார்ந்த விஷயங்களிலும் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.(psychology problem)மன உளவியல் சார்ந்த பிரச்சனைகள் அதிகமாக சிக்குபவர்கள் இந்த ஐந்தாம் பத்தில் சுக்கிரன் இருப்பவர்கள் தான்.


★ஐந்தாம் பாவத்தில் சுக்கிரன் இருப்பவர்கள் என்றைக்குமே தனிமையில் இருப்பது தவிர்த்துக் கொள்ள வேண்டும்.இல்லை என்றால் மன உளைச்சளிலும் ,மனநலம் பாதிப்பு,மன உளவியல் சார்ந்த பிரச்சினைகளிலும் இவர்கள் கண்டிப்பாக சிக்கி தன்னுடைய வாழ்க்கையை வீணாக்குவார்கள்.


★மேலும் ஐந்தாம் பத்தில் சுக்கிரன் இருப்பவர்களுக்கு இவர்கள் தாத்தா பிறப்பதற்கு முன்பாகவே குலதெய்வத்தை வணங்குவது விட்டுப் போகிறது என்று அர்த்தம் அதாவது மூன்று தலைமுறைகளுக்கு முன்பாகவே  இவர்கள் ஒழுங்காக குலதெய்வத்தை வணங்கவில்லை என்று அர்த்தம்.


★மேலும் இவர்கள் share market,stock market, trading இது சார்ந்த விஷயங்களில் முதலீடு செய்யக் கூடாது அப்படி செய்தார்கள் என்றால் மிகப்பெரிய நஷ்டத்தை கண்டிப்பாக சந்திப்பார்கள்.


★(6ம் பாவத்தில் "சுக்கிரன்")


★சுக்ரன் யாருக்கெல்லாம் ஆறாம் பாவத்தில் இருக்கிறதோ இவர்கள்

ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடு,அஜீரணக் கோளாறு, ஜீரணக்கோளாறு ,மனநல வளர்ச்சி குறைபாடு ,food poison,blood circulation problem,Periods problem,மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்,உணவு செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினை,உடலில் ரத்தம் குறைவாக இருத்தல் ,நீர் சம்பந்தப்பட்ட பிரச்சனை, ரத்தம் வடிதல்,psychology effect.ரத்த ஓட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்,அல்சர்problems.

வயிற்றுப்போக்கு,தூக்கமின்மை,

மன அழுத்தம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் நோய்கள்,ரத்தத் துடிப்பு, உடலில் கழிவு சார்ந்த பிரச்சனைகள்

வயிற்று வலி, உடலில் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்,

நினைவாற்றல் குறைபாடு, இரைப்பை புண், குடல் புண்"

இது சார்ந்த நோய்களில் இவர்கள் மற்றவர்களை காட்டிலும் முன்கூட்டியே மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.


★மேலும் சுக்கிரன் ஆறாம் பாவத்தில் இருந்தால் காதல் மற்றும் திருமண வாழ்க்கை மூலம் கடன் பிரச்சனை வம்பு வழக்கு கோர்ட் கேசு விவாகரத்து அடிதடி சண்டை போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.


★(7ம் பாவத்தில் "சுக்கிரன்")


★சுக்கிரன் ஏழாம் பாவத்தில் யாருக்கெல்லாம் இருக்கிறதோ கண்டிப்பாக இவர்கள் பரம்பரையில் உண்மையான குலதெய்வத்தை ஒழுங்காக வணங்குவது விட்டுப் போயிருக்கிறது என்று அர்த்தம் அப்படி இருந்தால் மட்டும் தான் இவர்களுக்கு ஏழாம் பாவத்தில் சுக்கிரன் இருக்கும்.


★இவர்களுக்கும் உறவுகள் மூலமாகவும் சொந்தங்கள் மூலமாகவும் எந்த ஒரு உதவியும் பயனும் ஆதாயமும் அனுசரிப்பும் இருக்காது எல்லா உறவினர்கள் சொந்தக்காரர்கள் இருந்தும் இல்லாதது போன்று இவர்கள் இருப்பார்கள்.


★மேலும் ஒரு ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் ஏழாம் பாவத்தில் இருந்தால் வரக்கூடிய மனைவி குடும்பத்தில் கண்டிப்பாக ஒழுங்காக குலதெய்வத்தை வணங்குவது விட்டுப் போயிருக்கும்.இது பெண்ணின் ஜாதகத்தில் ஏழாம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் குலதெய்வம் விட்டுப்போன குடும்பத்தில் இருந்துதான் இவருக்கு கணவரே வருவார்கள்.


★(8ம் பாவத்தில் "சுக்கிரன்")


★சுக்கிரன் எட்டாம் பாவத்தில் இருப்பவர்கள் என்றைக்குமே தண்ணீர் சார்ந்த விஷயத்தில் மிக கவனமாக இருக்கவேண்டும் அதாவது கடலில் குளிக்கும் போதும் ஆற்றில் குளிக்கும் போதும் இவர்கள் மிக மிக கவனமாக இருக்கவேண்டும் எட்டில் சுக்கிரன் இருந்தால் தண்ணீர் மூலம் கண்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.


★எனவே இவர்கள் ஆற்றில் குளிக்கும் போதும் கடலில் குளிக்கும் போதும் மற்றவர்களைக் காட்டிலும் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.


★(9ம் பாவத்தில் "சுக்கிரன்")


★சுக்கிரன் யாருக்கெல்லாம் ஒன்பதாம் பாவத்தில் இருக்கிறதோ கண்டிப்பாக இவர்களின் தந்தை பிறப்பதற்கு முன்பாகவே ஒழுங்காக குலதெய்வத்தை வணங்குவது விட்டுப் போகிறது என்று அர்த்தம் அப்படி இருந்தால் மட்டும் தான் இவர்களுக்கு ஒன்பதாம் பாவத்தில் சுக்கிரன் இருக்கும்.


★ இதற்கு என்ன ஆதாரம் என்றால் யாருக்கெல்லாம் ஒன்பதாம் பாவத்தில்  சுக்கிரன் இருக்கிறதோ 

அவர்களின் தந்தைக்கு உறவினர்கள் மூலமாகவும் சொந்தங்கள் மூலமாகவும் எந்தவித பயனும் எந்தவித ஆதாயமும் எந்தவித உதவியும் இருக்கவில்லை என்று அர்த்தம்.


★மேலும் தந்தையே பரம்பரையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்,

அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆளாகுபவர்கள் மன உளவியல் சார்ந்த பிரச்சினையில் சிக்குபவர்கள் இருப்பார்கள் என்று அர்த்தம்.


★(10ம் பாவத்தில் "சுக்கிரன்")


★யாருக்கெல்லாம் பத்தாம் பாவத்தில் சுக்கிரன் இருக்கிறதோ இவர்கள் என்றைக்குமே Liquid products,Bio agriculture,Milk products,பால் ,தயிர் தொழில்கள்,Water business, Food business, Hotel management, Catering, Fast food, restaurant, Fishing ,Harbour ,Agriculture, rice store, Departmental Store, hydraulic engineering ,Marine jobs,Sea food, Provision stores,food products,

விவசாயம் ,ஆட்டுப்பண்ணை, மாட்டுப் பண்ணை கோழிப் பண்ணைகள்,மீன் கடை,கறிக்கடை,

ஓட்டல்,உணவு பதப்படுத்துதல் தொழில்,காய்கறி கடைகள், மளிகை கடைகள்,டீ கடைகள்,Tea Shops,

உணவு சம்பந்தப்பட்ட தொழில்கள்.

பழக்கடைகள்,Fruit Shops,Bakery.

சார்ந்த தொழில்களில் மிகப் பெரிய முதலீடு செய்யக்கூடாது அதிகமான முதலீடு செய்து இது சார்ந்த தொழிலில் இவர்கள் ஈடுபட்டார்கள் என்றால் மிகப்பெரிய நஷ்டத்தை கண்டிப்பாக சந்திப்பார்கள்.


★இது போன்ற அமைப்பு உள்ளவர்கள் இது சார்ந்த தொழில் குறைந்த முதலீடு செய்து தொழில் செய்தார்கள் என்றால் நல்ல வருமானம் வரும்.


★(12ம் பாவத்தில் "சுக்கிரன்")


★சுக்கிரன் 12 ஆம் பாவத்தில் இருந்தால் காதல் ,திருமண வாழ்க்கை, மனைவி மூலமாக இவர்களுக்கு விரயச் செலவுகள் மிக அதிகமாக இருக்கும்.


★எனவே சுக்கிரன் 12 ஆம் பாவத்தில் இருப்பவர்கள் முன்கூட்டியே இது சார்ந்த விஷயங்களில் மிக கவனமாக இருங்கள் .


★(3 மற்றும் 11ம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் அதற்கு இந்த சூட்சமம் அவ்வளவாக வேலை செய்யாது எனவே  3 மற்றும் 11ம் பாவத்தில் சுக்கிரன் இருப்பவர்கள் கேள்வி கேட்க வேண்டாம்)


★மேற்கொண்ட இந்த  சூட்சுமத்தை அவரவர்கள் தங்களுடைய ஜாதகத்தில் பொருத்திப் பாருங்கள் நான் சொல்வது சரியாக இருக்கும்.


★ஜோதிடம் சார்ந்த ஏதாவது கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்

நன்றி வணக்கம் 🙏🏻

வாழ்க வளர்க 🤲

வாழ்க வையகம் 🙌

★மேலும் ஜோதிடம் சார்ந்த Online வகுப்புகள்("பாரம்பரிய ஜோதிடம், வாஸ்து சாஸ்திரங்கள்,மரபணு ஜோதிடம், எண் கணிதம்")போன்ற 4 முறைகள் சார்ந்த ஜோதிட வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஜோதிடம் கற்க ஆசைப்படுபவர்கள் விருப்பம் உள்ளவர்கள் என்னுடைய WhatsApp  numberக்கு Message செய்யவும்.அல்லது என்னுடைய mobile Number க்கு Call செய்யவும்.

Comments