ஒருவன் செய்த நன்மை தீமை மட்டுமே இறந்த பிறகு கூட வரும்....

 பட்டினத்தாரின் ஊசி..


*பல ஊர்களுக்கும் யாத்திரை சென்ற பட்டினத்தார்bஒரு ஊரில் தங்கினார்.*


*அவ்வூர் பணக்காரர் ஒருவர்*

*பட்டினத்தாரை தன் வீட்டிற்கு விருந்து சாப்பிட அழைத்தார்*


*இந்த ஊரிலேயே பெரிய பணக்காரன் நான் தான்*.


நினைத்ததை சாதிக்கும் பலம் என்னிடம் இருக்கிறது.


*உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் கேளுங்கள்,”*            *என்று பெருமையுடன் தன்னை அறிமுகப்படுத்தினார்


*சற்று யோசித்த பட்டினத்தார் “ரொம்ப நல்லது.*


*அப்படியானால் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டுமே!” என்று கேட்டார்.*


*என்ன சுவாமி.. எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள்.* 


*செய்ய காத்திருக்கிறேன்* *என்றார்*

*பணக்காரர்.*


*தன் பையில் இருந்து ஊசி ஒன்றை எடுத்த பட்டினத்தார், அதை பணக்காரரிடம் நீட்டினார்.*


*இந்த பழைய ஊசியைக் கொண்டு நான் என்ன செய்ய வேண்டும் சுவாமி” என்றார் பணக்காரர்.*


*இதைப் பத்திரமாக வைத்திருங்கள்*. 


*நாம் இருவரும் இறந்தபிறகு மேலுலகத்தில் சந்திக்கும் போது திருப்பிக் கொடுத்தால் போதும்,” என்றார் பட்டினத்தார்.*


*இறந்த பிறகு இந்த ஊசியை எப்படி கொண்டு வர முடியும் என்று கேட்டார் பணக்காரர்.*


*அவரைப் பார்த்து சிரித்த பட்டினத்தார் இந்த உலகை விட்டுப் போனால் சிறு ஊசியைக் கூட கொண்டு போக*

*முடியாது என்று நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள்.*


*ஆனால்* 


*நினைத்ததை சாதிக்கும் வலிமை இருப்பதாக தற்பெருமை பேசுகிறீர்களே….*


*ஒருவன் செய்த நன்மை தீமை மட்டுமே இறந்த பிறகு கூட வரும்.* 


*செல்வத்தால் யாரும் கர்வப்படத்*

*தேவையில்லை* 


*அதை இல்லாதவர்களுக்கு* *கொடுத்து*

*உதவுங்கள்.* 


*அதுதான் உண்மையான மகிழ்ச்சி தரும்*

*என்று அறிவுரை கூறினார்.*

           

*வாழும் போதும் வாழ்க்கைக்கு பிறகும் நம்முடன் வருவது, நமது நற்செயல்களால் கிடைத்த புண்ணியங்கள் மட்டுமே..* 

*எனவே இருப்பதை மற்றவருக்கு கொடுத்து வாழுவோம்..*

நன்றி வணக்கம் 🙏🏻

வாழ்க வளர்க 🤲

வாழ்க வையகம் 🙌

Comments