பெண்கள் விவாகரத்துக்கு .....

 

ஏன் சில பெண்கள் விவாகரத்துக்கு பின் கணவரையும் அவர் குடும்பத்தையும் பழிவாங்கும் நோக்கத்துடன் இருக்கிறார்கள்?

விவாகரத்து அப்டினு ஒரு பேப்பர்ல எழுதி அத படிக்குற மாதிரி அது ரொம்ப எளிதான விசயமில்ல.



விவாகரத்துக்கு பிறகும் கூட, ஒரு ஆணை இந்த சமுதாயம் எந்தவித வேறுபாடும் இல்லாமல் தான் பார்க்கும்.

ஆனால் ஒரு விவாகரத்து ஆன பெண்ணை இந்த சமுதாயம் பார்க்கும் பார்வை என்பதே வேறு.

ஒரு பேப்பர்ல பெண் அப்படி எழுதுனாலே, அத கற்பழித்து விட்டு, அந்த பேப்பர்ல துணி கொண்டு மூடாமல் இருந்துச்சு, அதனால தவறு என்மேல இல்லனு சொல்ற ஆளுங்க இருக்கக்கூடிய சமுதாயம் இது.

அப்படி செய்தவனும் கூட, 18 வயது நிரம்பாத காரணத்தால், சிறுவன்னு சொல்லி தப்பிச்சிக்கிறான்.

இந்த அளவுக்கு பெண்களுக்கு எதிரான வன்முறை இருக்கும் போது, ஒரு விவாகரத்து ஆன பெண்ணுக்கு வாழ்க்கை எவ்வளவு கொடூரமா இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.

ஒரு விவாகரத்து ஆன பெண், தனது பெற்றோர், சுற்றம், நட்பு, சமுதாயம் என அனைவராலும் வேறொரு கண்ணோட்டத்தால் பார்க்கப்படும் போது, அவளுக்கு மன அழுத்தம் ஏற்படுவது என்பது இயற்கையே.

இதனால் இந்த மன அழுத்தம் காரணமாக, இதற்கு காரணமான தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தை பழிவாங்க நினைக்கிறாள்.

இங்கே யாரேனும் இவ்வாறு பழிவாங்குவது தவறு என்று கூற விரும்பினால், நீங்கள் விவாகரத்து செய்ததே தவறு என்று நான் கூறுகிறேன்.

தனது தந்தைக்கு கூட தனது உடலை பார்க்க அனுமதிக்காத ஒரு பெண்தான், தனது கணவனுக்காக தன்னை முழுவதும் கையளிக்கிறாள்.

தனது கணவனின் கனவுக்காக, நிஜத்தில் ஏற்படும் பிரசவ வலியை ஏற்றுக்கொள்ள அவள் தன்னை தயார் படுத்தி கொள்கிறாள்.

இப்படி பட்டவளை ஏதோ ஒரு காரணத்தால், விவாகரத்து செய்ய ஒரு பெண்ணின் மகனான ஒரு ஆணுக்கு துணிச்சல் இருக்கும் போது,

அதனால் பெருமளவில் பாதிக்கப்படும் ஒரு பெண்ணுக்கும் அதனை எதிர்க்கும் துணிச்சல் உண்டு.

இங்கே இரண்டு தரப்பும் மூன்றாவது நபர் தலையீடு இன்றி, ஏதேனும் ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து பேசினால், விவாகரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

உயிரும் மெய்யும் இணைந்து , உயிர்மெய் தான் பிறக்க வேண்டும்.

அவையிரண்டும் தனித்து நிற்க விருப்பம் கொண்டால், பொருள் தராது.

இது தமிழுக்கு மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கைக்கும் பொருந்தும்.

அதனால், விவாகரத்து என்பதை முடிந்த வரையில் தவிர்ப்பது நல்லது.

நன்றி வணக்கம் 🙏🏻

வாழ்க வளர்க 🤲

வாழ்க வையகம் 🙌

Comments