உடுக்கை தாரை வடிவ ரகசியம்

 உடுக்கை தாரை வடிவ ரகசியம் 

=============================


உடுக்கை அவிட்ட நட்சத்திர வடிவம் ஆகும். அவிட்ட நட்சத்திரம் சமஸ்கிருதத்தில் தனிஷ்டா என்று அழைக்கப்படுகிறது. இது வானத்தில் உடுக்கையை போன்றும் பானையை போன்றும் மற்றும் பறை மேளம் போன்றும் காட்சியளிக்கிறது.


இந்த உடுக்கை வடிவம் சிவபெருமானின் சூலாயுதத்தில் காணலாம் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆகும். திருவாதிரை நட்சத்திரத்தின் பரம மித்திர தாரை மிருகசீரிடம், சித்திரை மற்றும் அவிட்டம் ஆகும். ஆகவே சிவபெருமான் தனது சூலாயுதத்துடன் இந்த உடுக்கையை இணைத்து காட்சியளிக்கிறார். 


ஒருவர் தனது ஜென்ம தாரை வடிவத்துடன் பரம மித்ர தாரை வடிவத்தையோ அல்லது ஜென்ம தாரை வடிவத்துடன் சம்பத்து தாரை வடிவத்தையோ இணைத்து பயன்படுத்த வேண்டும் என்பதை சிவபெருமானின் கையில் இருக்கும் சூலாயுதத்தை கண்டு அறியலாம்.


சிவபெருமானின் சூலாயுதம் திருவாதிரை ஆகும். இந்த சூலாயுதம் உடன் உடுக்கை இணைக்கப்பட்டிருக்கிறது. இது திருவாதிரை மற்றும் அவிட்ட நட்சத்திர வடிவங்களின் இணைவு ஆகும்.


திருவாதிரை சதயம் சுவாதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்த நபர்கள் இந்த சூலாயுதம் மற்றும் உடுக்கை இணைந்த வடிவத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.


திருவோணம் ரோகிணி மற்றும் அஸ்தம் ஆகிய நட்சத்திர நபர்கள் உடுக்கை வடிவத்தை பயன்படுத்திக் கொண்டு பலன் பெறலாம்.


Comments