விளையாட்டுத்துறையில் சாதிப்பதற்கு எந்த கிரகம் நல்ல நிலையில் இருக்க வேண்டும்? பாவக ரீதியாக எந்தெந்த பாவகங்கள் நல்ல நிலையில் இருப்பது அவசியம்?
*விளையாட்டுத்துறையில் சாதிப்பதற்கு எந்த கிரகம் நல்ல நிலையில் இருக்க வேண்டும்? பாவக ரீதியாக எந்தெந்த பாவகங்கள் நல்ல நிலையில் இருப்பது அவசியம்?*
உடல் பலத்தை (Physical Strength) அடிப்படையாகக் கொண்ட விளையாட்டுகளில்
(உதாரணங்கள்: Kabaddi, Wrestling, Weightlifting, ks, Athletics (Throw events), Rugby, Football (Defense), Javelin, Shot put)
சிறந்து விளங்குவதற்கு செவ்வாய் சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
ஏனெனில் செவ்வாய் ஒருவருடைய ஜாதகத்தில் அவருடைய உடல் தகுதி, தேக வலிமை, எதிர்கொள்ளும் திறன், எந்த ஒரு தாக்குதலையும் சமாளிக்கக்கூடிய திறன் போன்றவற்றிற்கு காரகம் வகிக்கிறது.
பொதுவாகவே செவ்வாய் ஒருவருடைய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கும் போது இயல்பாகவே தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உடையவராக, அதற்கான உடற்பயிற்சிகள் போன்றவற்றை முறையாக கடைப்பிடிப்பவராக இருப்பார்.
மேற்கண்ட செவ்வாய் ஒருவருடைய சுய ஜாதகத்தில் சுப கிரகங்களின் தொடர்பில் நல்ல நிலையில் இருக்கும் பொழுது அவர் விளையாட்டுத்துறையின் சாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.. செவ்வாயின் வீடுகளான மேஷம் மற்றும் விருச்சிகத்துடன் சுப கிரகங்கள் தொடர்பு கொள்வதும் சிறப்பு..
பாவக ரீதியாக பார்க்கும் பொழுது மூன்றாம் பாவகம், மூன்றாம் வீட்டு அதிபதி நல்ல நிலையில் இருக்கும்பொழுது இயல்பாகவே ஒருவருக்கு விளையாட்டு சார்ந்த விஷயங்களில் அதிக ஈடுபாடுகள் இருக்கும்.ks
ஆறாம் பாவகம் பொதுவாக போட்டியினை சுட்டிக் காட்டக்கூடிய பாவகம் ஆகும். விளையாட்டில் மற்றவுடன் போட்டி போட்டு வெல்வது தான், விளையாட்டின் பிரதான நோக்கமே ஆகும். அவ்வகையில் ஆறாம் பாவகம் மற்றும் ஆறாம் அதிபதி நல்ல நிலையில் இருந்து கூடுதலாக லக்னாதிபதியும் வலுக் குறையாத பட்சத்தில் அவர்களுக்கு இயல்பாகவே எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெல்லக்கூடிய திறன்கள் இருக்கும். அவ்வகையில் இவர்களும் விளையாட்டு துறையில் சாதிப்பதற்கான
வாய்ப்பு உண்டு.
லக்னாதிபதி ஆறாம் பாவகத்துடன் தொடர்பு கொண்டு மேற்கொண்டு சுப கிரகங்களின் தொடர்பில் இருக்கும் பொழுது ஒருவருக்கு விளையாட்டு துறையில் ஆர்வம் இருக்கும். ஆறாம் அதிபதி கேந்திரங்களில் வலுப்பெறும் பொழுதும் விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஜாதகர் ஆர்வம் உடையவராக இருப்பார்...
புத்திசாலித்தனத்தை (Intellectual skills) அடிப்படையாகக் கொண்ட விளையாட்டுகளில் (உதாரணங்கள்: Chess, Archery, Carrom, Esports, Table tennis (reflex), Snooker, Billiards, Fencing, Gymnastics) ஒருவர் சிறந்து விளங்குவதற்கு மதிநுட்பத்திற்கு காரணமான புதன் நல்ல நிலையில் இருப்பது அவசியம். புதனுடைய வீடுகளுடன் சுப கிரகங்கள் தொடர்பில் இருப்பதும் நல்ல அமைப்பாகும்.
புதன் நல்ல நிலையில் இருக்கும் பொழுது ஒருவருக்கு இயல்பாகவே மற்றவர்களுடைய கூடுதல் நுண்ணறிவு எதையும் கணிக்க கூடிய திறன், சமயோசித புத்தி,குறுகிய நேரத்தில் சரியான முடிவு எடுப்பது போன்ற திறன்கள் இருக்கும்...ks
பாவக ரீதியாக பார்க்கும் பொழுது உடல் பலம் தேவையற்ற விளையாட்டுகளை பொருத்தவரை ஐந்தாம் பாவகம் நல நிலையில் இருப்பது அவசியம் எனில் ஐந்தாம் பாவகம் ஒருவருடைய புத்திசாலித்தனம், நினைவாற்றல், creativity போன்ற விஷயங்களை உள்ளடக்கியது உடல் பலம் தேவையற்ற விளையாட்டுகளுக்கு மேற்கண்ட திறன்கள் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் ஐந்தாம் பாவகம் மற்றும் ஐந்தாம் அதிபதி நல்ல நிலையில் இருக்கும்பொழுது மேற்கண்ட விளையாட்டுக்களில் ஒருவர் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு.
கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்கு வெறும் உடல் பலம் மட்டும் போதாது. எதிரணியை வீழ்த்துவதற்கான (Strategy) திட்டமிடுதல் போன்றவற்றிற்கு புத்திசாலித்தனமும் தேவைப்படும். இது போன்ற நிலைகளில் ஒருவருக்கு புதன் மற்றும் செவ்வாய் வலுக் குறைவின்றி இருப்பது அவசியமாகும்.
விளையாட்டுத்துறை பயிற்சியாளர்களாக பணிபுரிபவர்களை பொருத்தவரை கூடுதலாக மற்றவர்களுக்கு ஒரு விஷயத்தை தெளிவாக சொல்லித் தருவதற்கு காரக கிரகமான குருவும் நல்ல நிலையில் இருப்பது அவசியம்...
Comments
Post a Comment