மாற்று மதத்தினர் மற்ற ஜாதியினரை திருமணம் செய்பவர்கள் யார்?


ஒருவரின் திருமணம், திருமண வாழ்க்கையைச் சுட்டிக்காட்டும் ஏழாம் அதிபதி , 7ஆம் வீடு, பொதுவான களத்திரகாரகன் சுக்கிரன் இத்தகைய அமைப்புகளுடன் தொடர்பு கொண்டுள்ள கிரக நிலையை பொறுத்து இதை அறிந்திட இயலும். 


இவற்றுடன் குல தர்மத்தை சுட்டிக்காட்டும் பாக்கியாதிபதி நிலையையும் கவனத்தில் கொண்டாக வேண்டும்.ஏனெனில்  பாக்கியாதிபதி பலவீனப்பட்டு இருக்கும்போது மட்டுமே

ஒருவருக்கு குலதர்ம வழக்குகளுக்கு எதிராக மனம்  செல்லக்கூடும்.

சுய ஜாதகத்தில் பாக்கியாதிபதி நீசம், அஸ்தங்கம், வக்ரம் போன்ற நிலைகளிலிருந்து ராகு கேது தொடர்பு பெற்று ,அட்டமாதிபதியுடன் இணைந்து 6,8, 12ல் மறைந்து இருக்கும் பொழுது அவரிடத்தில் குல தர்மங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இருக்கும். இந்த அமைப்புடன் ஏழாமிடம், ஏழாம் அதிபதி நிலையையும் அத்துடன் பொதுவான களத்திரகாரகன் சுக்கிரன் நிலையும் கவனத்தில் கொண்டாக வேண்டும்.


நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது அந்நிய மதங்களின் காரகத்துவ பொறுப்பினை ஏற்கின்றனர். கேது கிறிஸ்துவ மதத்தையும், இராகு இஸ்லாம் மதத்தையும் குறிப்பவர் ஆவார்.

அத்துடன் ஜாதி மாற்றத்தினை இயற்கை பாபர்களான  சனி மற்றும்  செவ்வாய் குறிப்பார்கள்.


சுய ஜாதகத்தில் இலக்ன ராசிக்கு ஏழாமிடம், ஏழாம் அதிபதி, பொதுவான களத்திரகாரகன் சுக்கிரனுடன்,  சனி செவ்வாய் தொடர்பு ஏற்படும்போது தங்களது ஜாதியினருக்கு மாற்றாக, மாற்று ஜாதியைச் சேர்ந்த துணையைத்  தேர்ந்தெடுக்க வாய்ப்பு உண்டு.


நடைமுறையில் இருக்கக்கூடிய தசா நாதனுக்கு சனி, செவ்வாய் தொடர்பு இருக்கிறதா என்பதை கவனித்தே இதை நிர்ணயம் செய்ய வேண்டும்.


ஏழாம் அதிபதி, ஏழாம் பாவகம், பொதுவான களத்திரகாரகன் சுக்கிரன் இவற்றுடன் வலுப்பெற்ற ராகு கேது தொடர்பு இருக்கும் போது தங்களது மதத்தினருக்கு மாற்றாக மாற்றுமத வழிகளில் துணையைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு உண்டு.


நடைமுறையிலுள்ள தசா நாதனுக்கு ராகு கேதுக்களின் தொடர்பு இருக்கின்றதா என்பதையும் ஆராய்ந்தே இதைநிர்ணயம் செய்ய வேண்டும்.


அந்த வகையில் ஒருவர் தங்களுடைய மதம் மற்றும்  ஜாதியினில் இன்றி, மாற்று மதம், மாற்று ஜாதியில் திருமணம் செய்வாரா என்பதை அறிவதற்கு அவருடைய ஜாதகத்தில் பாக்கியாதிபதி நிலை

ஏழாம் வீடு, ஏழாம் அதிபதி,  பொதுவான களத்திரகாரகன் சுக்கிரனுடன் தொடர்பு கொண்டுள்ள கிரகங்கள் இவற்றுடன் அடுத்து வரக்கூடிய தசா புத்திகள் இவற்றை   ஆராய்ந்தே முடிவு செய்ய இயலும்


நன்றி 


Comments