கடிகார பிரசன்ன ஜோதிடம்...

 


 கடிகார பிரசன்ன ஜோதிடம்...


 பிரசன்ன ஜோதிடத்தில் நிறைய முறைகள் உள்ளன. சோழி பிரசன்னம், வெத்தலை பிரசன்னம், ஜாமக்கோள் பிரசன்னம், கடிகார பிரசன்னம் என்று பல  பிரசன்ன ஜோதிட முறைகள் உள்ளன.


 இதில் கடிகார பிரசன்னம் முறையைப் பற்றி இதில் காண்போம்.


 இந்த பிரசன்ன முறையில்  ஜோதிடம் பெரிதாக தெரிந்திருக்க வேண்டியதில்லை. கேட்கும் கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்று மட்டுமே இந்த பிரசன்ன முறையால் சொல்ல முடியும்.


 ஜாதகர் ஒரு கேள்வியைக் கேட்கும் போது நம்முடைய மொபைலில் உள்ள நேரத்தை கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். குறிப்பாக சின்ன முள் எங்கே நிற்கிறது பெரிய முள் எங்கே நிற்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

 

 12 லிருந்து 1வரை உள்ள பகுதி மேஷ மண்டலத்தைக் குறிக்கும்.


1 லிருந்து 2வரை உள்ள பகுதி ரிஷப மண்டலத்தைக் குறிக்கும்.


2 லிருந்து 3 வரை உள்ள பகுதி மிதுனம் மண்டலத்தைக் குறிக்கும்.


3 லிருந்து 4 வரை உள்ள பகுதி கடக மண்டலத்தைக் குறிக்கும்.


4 லிருந்து 5 வரை உள்ள பகுதி சிம்மம் மண்டலத்தைக் குறிக்கும்.


5 லிருந்து 6 வரை உள்ள பகுதி கன்னி மண்டலத்தைக் குறிக்கும்.


6 லிருந்து 7 வரை உள்ள பகுதி துலா ராசி மண்டலத்தைக் குறிக்கும்.


7 லிருந்து 8 வரை உள்ள பகுதி விருச்சிகம் ராசி மண்டலத்தைக் குறிக்கும்.


8 லிருந்து 9 வரை உள்ள பகுதி தனுசு மண்டலத்தைக் குறிக்கும்.


9 லிருந்து 10 வரை உள்ள பகுதி மகர ராசி மண்டலத்தைக் குறிக்கும்.


10 லிருந்து 11 வரை உள்ள பகுதி கும்ப ராசி மண்டலத்தைக் குறிக்கும்.


11 லிருந்து 12 வரை உள்ள பகுதி மீனம் ராசி மண்டலத்தைக் குறிக்கும்.


ஒருவர் கேட்கும் கேள்விக்கு பதில் ஆம் அல்லது இல்லை என்று சொல்வதற்கு கடிகாரத்தின் பெரிய முளை எங்கே நிற்கிறது சின்ன முள் எங்கே நிற்கிறது என்பதை மட்டும் பார்த்தால் போதும். காரியம் நடக்குமா நடக்காதா என்று சொல்லி விடலாம். 


 சின்ன முள்ளும் பெரிய முள்ளும் ஒரே ராசியில் நின்றால் நிச்சயம் அந்த காரியம் நடக்கும்.  சின்ன முள் நிற்கும் ராசியிலேயே பெரிய முள் இருக்கிறது.  பெரிய முள் நிற்கும் ராசியிலேயே சின்ன முள் நிற் lகிறது. (1,1 ), (1, 1)


 சின்ன முள் நிற்கும் ராசியில் இருந்து 5 ஆம் ராசியில்  பெரிய முள் காரியம் நடக்கும். (1, 5) இதில் பெரிய முள்ளுக்கு சின்ன முள் 9 இல் இருக்கும் ( 5,9)


 சின்ன முள்  நிற்கும் ராசியில் இருந்து 3 ஆம் ராசியில் பெரிய முள் நின்றாலும் விரும்பும் காரியம் நடக்கும். (1,3) 

 பெரிய முள்ளிலிருந்து சின்ன முள் 11 வீட்டில் இருக்கும் (3,11)


 சின்ன முள் நின்ற ராசியிலிருந்து பெரிய முள் 7 ஆம் ராசியில் நின்றால், காரியம் உடனே நடக்காது சில சில தடங்கல்களுக்குப் பின் காரியம் கடைசியாக நிறைவேறும் என்று சொல்ல வேண்டும். 

(1, 7) (7, 1)


 சின்னமுள் நிற்கும் ராசியிலிருந்து 4 ஆம் ராசியில் பெரிய முள் என்றால் காரியம் நடக்காது. (1, 4), (4, 10)


 சின்ன முள்  இருக்கும் ராசியிலிருந்து 6 ஆம் வீட்டில் பெரிய முள் நின்றாலும் நினைத்த காரியம் நடக்காது. 

(1, 6), (6, 8)

 

 சின்ன முள் நின்ற ராசியிலிருந்து 12 ஆம் ராசியில் பெரிய முள் நின்றாலும் நினைத்த காரியம் நடக்காது.

(1, 12), (12, 2)


 இந்த கேள்விக்காக பிரசன்ன முறையை நாம் ஜாதகர் கேட்கும் ஏதாவது ஒரு கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிக்க பயன்படுத்தலாம்.


 உதாரணமாக ஒருவர் தான் தேர்வில் தேர்வு பெறுவேனா என்று கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது நேரம் 5 மணி 4 நிமிடம். சின்ன முள் ஐந்துக்கும் ஆறுக்கும்  இடையில் அதாவது கன்னி ராசியில் நிற்கிறது. பெரிய முள் மேஷத்தில் நிற்கிறது. அதாவது சின்ன முள் நிற்கும் ராசியில் இருந்து எட்டாம் ராசியில் பெரிய முள் நிற்கிறது. (6, 8), (8, 6).

 எனவே ஜாதகர் தேர்வில் தேர்வாக மாட்டார் என்று சொல்ல வேண்டும்.

 

 இந்த ஜோதிட முறை மிகவும் எளிதாக உள்ளதால், மிகவும் வேகமாக பிரபலம் அடைந்து வருகிறது என்று சொல்லலாம்.



Comments