ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 6 ஆம் பாவத்தில் "சூரியன்,புதன், சுக்கிரன்,சந்திரன்" இந்த நான்கு கிரங்களில் ஏதேனும் ஒரு கிரகம் இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் எந்த மாதிரி பிரச்சனைகள்,பலன்கள்...

 ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 

6 ஆம் பாவத்தில் "சூரியன்,புதன்,

சுக்கிரன்,சந்திரன்" இந்த நான்கு கிரங்களில் ஏதேனும் ஒரு கிரகம் இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் எந்த மாதிரி பிரச்சனைகள்,பலன்கள் ஏமாற்றங்கள்,கஷ்டங்கள் இருக்கும் என்பதை இந்த பதிவில் நாம் மிகத் தெளிவாக பார்க்கலாம்.


1.♋(6ம் பாவத்தில் "சூரிய பகவான்")


♦யாருடைய ஜாதகத்தில் எல்லாம் லக்னத்தில் இருந்து 6ம் பாவத்தில் சூரிய பகவான் இருக்கின்றதா அவர்களுக்கு தந்தை மூலமாகவும் தந்தை வழி உறவினர்கள் மூலமாகவும் தேவையில்லாத 

கடன் பிரச்சனைகள் ஏமாற்றங்கள் சண்டைகள் பிரிவினை வம்பு வழக்கு இதுபோன்ற எல்லாவிதமான பிரச்சனைகள் இவர்களுக்கு வாழ்க்கையில் கண்டிப்பாக ஏற்படும்.


♦தந்தையை நம்பியும் தந்தை வழி உறவினர்களை நம்பியும் இவர்கள் பணத்தை கடன் கொடுத்தார்கள் என்றால் அந்தப் பணம் இவர்களுக்கு திரும்ப வராது. பிறகு அதனால் தேவையில்லாத பிரச்சனைகள் ஏமாற்றங்கள் இழப்புக்கள் இவர்களை கண்டிப்பாக ஏற்படும்.


♦அதேபோன்று தந்தையை நம்பியும் தந்தை வழி உறவுகளை நம்பியும் இவர்கள் யாரிடத்திலாவது பணத்தை கடன் வாங்கினார்கள் என்றால் பிறகு அந்த கடன் பணத்தை அடைக்க முடியாமல் தேவையில்லாத பிரச்சினைகளில் ஏமாற்றங்களில் கண்டிப்பாக இவர்கள் மாட்டிக்கொள்வார்கள்.


♦தந்தை மூலமாகவும் தந்தை வழி உறவினர்கள் சொந்தங்கள் மூலமாகவே வாழ்க்கையில இவர்களுக்கு போட்டிகள் பொறாமையில் எதிரிகள் சத்துக்கள் என்பது உருவாகுவார்கள்.


♦மேலும் தந்தையை உடைய கடன் பிரச்சனைகளை இவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள் என்றால் இவர்களால் அந்த கடனை அடைக்க முடியாமல் தேவையில்லாத பிரச்சினைகளில் ஏமாற்றங்களில் கஷ்டங்களில் கண்டிப்பாக இவர்கள் சிக்கிக் கொள்வார்கள்.


♦மேலும் மருத்துவம் சார்ந்த விஷயங்களில் இவர்களுக்கு "கடன் பிரச்சனைகள்,பணக்கஷ்டங்கள், பண இழப்புகள், பண செலவுகள்" என்பது இவர்களுக்கு வாழ்க்கையில் அதிகமாக ஏற்படும்.


♦கடன் வாங்கி சீட்டு எடுத்து loan எடுத்து இவர்கள் மருத்துவம் சார்ந்த செலவுகள் செய்து பிறகு அந்த கடனை loan ஐ அடைக்க முடியாமல் வாழ்க்கையில் தேவையில்லாத பிரச்சினைகளில் ஏமாற்றங்களை கஷ்டங்கள் இவர்கள் சிக்கி விடுவார்கள்.மருத்துவம் சார்ந்த விஷயங்களில் மூலமாகவே இவர்களுக்கு வாழ்க்கையில் கடன் பிரச்சனைகள் வம்பு வழக்கு அடிதடி சண்டை என்பது இவர்களுக்கு வாழ்க்கையில் ஏற்படும்.


🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷


2.♋(6ம் பாவத்தில் "சுக்கிரன் பகவான்")


♦யாருடைய ஜாதகத்தில் எல்லாம் லக்னத்தில் இருந்து 6ம் பாவத்தில் சுக்கிர பகவான் இருக்கின்றதா அவர்களுக்கு "திருமண வாழ்க்கை,காதல் தாம்பத்திய வாழ்க்கை" மூலமாக வாழ்க்கையில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏமாற்றங்கள் பிரிவினைகள் கஷ்டங்கள் என்பது இவர்களுக்கு வாழ்க்கையில் கண்டிப்பாக இருக்கும்.


♦இவர்களுக்கு மனைவி மூலமாகவும் மனைவியுடைய சொந்தங்கள் உறவுகள் மூலமாகவும் வாழ்க்கையில் தேவையில்லாத கடன் பிரச்சனைகள் ஏமாற்றங்கள் சண்டைகள் வம்பு வழக்கு அடிதடி சண்டைகள் போன்ற பிரச்சனைகள் இவர்களுக்கு வாழ்க்கையில் ஏற்படும்.


♦இவர்கள் மனைவியை நம்பியும் மனைவியுடைய சொந்தங்கள் உறவினர்களை நம்பியும் வாழ்க்கையில் பணத்தை கடன் கொடுத்தார்கள் என்றால் அந்தப் பணம் இவர்களுக்கு திரும்ப வராது.

பிறகு அதன் மூலமாக வாழ்க்கையில் இவர்களுக்கு தேவையில்லாத பிரச்சனைகள் ஏமாற்றங்கள் சண்டைகள் என்பது இவர்களுக்கு ஏற்படும்.


♦அதேபோன்று மனைவியை நம்பி மனைவியுடைய சொந்தங்கள் உறவுகளை நம்பி இவர்கள் யாரிடத்திலாவது பணத்தை கடன் வாங்கினார் என்றால் பிறகு அந்த கடனை அடைக்க முடியாமல் தேவையில்லாத பிரச்சினைகளில் ஏமாற்றங்களில் இழப்புகளில் கண்டிப்பாக இவர்கள் சிக்கிக் கொள்வார்கள்.


♦அதேபோன்று ஒரு வேலை இவர்கள் காதல் செய்கின்றார்கள் என்றால் காதலி மூலமாகவே அல்லது காதலன் மூலமாகவே இவர்களுக்கு வாழ்க்கையில் தேவையில்லாத கடன் பிரச்சனைகள் ஏமாற்றங்கள் வம்பு வழக்கு அடிதடி சண்டைகள் போட்டிகள் பொறாமைகள் இது போன்ற எல்லாவிதமான பிரச்சனைகளும் இவர்களுக்கு வாழ்க்கையில் கண்டிப்பாக ஏற்படும்.


♦மேலும் மனைவி மூலமாகவும் மனைவி உடைய சொந்தங்கள் உறவுகள் மூலமாகவும் வாழ்க்கையில் இவர்களுக்கு போட்டிகள் பொறாமைகள் எதிரிகள் சத்துக்கள் என்பது உருவாகுவார்கள்.


🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷


3.♋(6ம் பாவத்தில் "சந்திர பகவான்")


♦யாருடைய ஜாதகத்தில் எல்லாம் லக்னத்தில் இருந்து 6ம் பாவத்தில் சந்திர பகவான் இருக்கின்றதா அவர்களுக்கு அவர்களுக்கு தாய் மூலமாகவும் தாய் வழி உறவினர்கள் மூலமாகவும் தேவையில்லாத கடன் பிரச்சனைகள் ஏமாற்றங்கள் சண்டைகள் பிரிவினை வம்பு வழக்கு இதுபோன்ற எல்லாவிதமான பிரச்சனைகள் இவர்களுக்கு வாழ்க்கையில் கண்டிப்பாக ஏற்படும்.


♦அம்மாவை நம்பியும் அம்மாவை வழி உறவினர்களை நம்பியும் இவர்கள் பணத்தை கடன் கொடுத்தார்கள் என்றால் அந்தப் பணம் இவர்களுக்கு திரும்ப வராது. பிறகு அதனால் தேவையில்லாத பிரச்சனைகள் ஏமாற்றங்கள் இழப்புக்கள் இவர்களை கண்டிப்பாக ஏற்படும்.


♦அதேபோன்று அம்மாவை நம்பியும் அம்மாவை வழி உறவுகளை நம்பியும் இவர்கள் யாரிடத்திலாவது பணத்தை கடன் வாங்கினார்கள் என்றால் பிறகு அந்த கடன் பணத்தை அடைக்க முடியாமல் தேவையில்லாத பிரச்சினைகளில் ஏமாற்றங்களில் கண்டிப்பாக இவர்கள் மாட்டிக்கொள்வார்கள்.


♦அம்மாவை மூலமாகவும் அம்மாவை வழி உறவினர்கள் சொந்தங்கள் மூலமாகவே வாழ்க்கையில இவர்களுக்கு போட்டிகள் பொறாமையில் எதிரிகள் சத்துக்கள் என்பது உருவாகுவார்கள்.


♦மேலும் அம்மாவை உடைய கடன் பிரச்சனைகளை இவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள் என்றால் இவர்களால் அந்த கடனை அடைக்க முடியாமல் தேவையில்லாத பிரச்சினைகளில் ஏமாற்றங்களில் கஷ்டங்களில் கண்டிப்பாக இவர்கள் சிக்கிக் கொள்வார்கள்.


🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷


4.♋(6ம் பாவத்தில் "புதன் பகவான்")


♦யாருடைய ஜாதகத்தில் எல்லாம் லக்னத்தில் இருந்து புதன் பகவான் இருக்கின்றதோ அவர்களுக்கு 

"கடன் பிரச்சனைகள் ,சீட்டு,ஏலம், நகை அடமானங்கள்,படிப்பு,loan,Credit card,Share market,Stock market,Trading, Glambling இது போன்ற விஷயங்கள் மூலமாக வாழ்க்கையில் தேவையில்லாத கடன் பிரச்சினைகள் ஏமாற்றங்கள் சண்டைகள் வம்பு வழக்கு கோட்டு கேசு அடிதடி சண்டைகள் இதுபோன்ற பிரச்சனைகள் இவர்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக ஏற்படும்.


♦இவர்கள் யாரிடத்திலாவது பணத்தைக் கடன் கொடுத்தார்கள் என்றால் அந்த பணம் இவர்களுக்கு திரும்ப வராது.அதேபோன்று இவர்கள் பணத்தை கடன் வாங்கினார்கள் என்றால் இவர்களால் வாங்கிய கடனை அடைக்க முடியாது மிகவும் கஷ்டப்பட்டு விடுவார்கள்.


♦நகைகளை இவர்கள் அடமானம் வைத்தார்கள் என்றால் அடமானம் வைத்த நகைகளை மீட்பதற்கு இவர்கள் மிகவும் சிரமப்பட்டு விடுவார்கள்.அதேபோன்று இவர்கள் ஏதாவது loan எடுத்தார்கள் என்றால் எடுத்த loanஐ இவர்களால் அவ்வளவு எளிதாக அடைக்க முடியாது.


♦மேலும் credit cardஐ இவர்கள் வாங்கினார்கள் என்றால் மிகப்பெரிய பிரச்சினைகளில் சிக்கல்களில் கண்டிப்பாக இவர்கள் மாட்டிக்கொள்வார்கள்.


♦அதேபோன்று "Share market,Stock market,Trading, Glambling இது போன்றவற்றில் இவர்கள் பணத்தை முதலீடு போட்டார்கள் என்றால் நஷ்டங்கள் ஏமாற்றங்கள் தான் இவர்களுக்கு ஏற்படும். பிறகு இதனால் தேவையில்லாத பிரச்சினைகள் கஷ்டங்கள் இவர்களுக்கு வாழ்க்கையில் கண்டிப்பாக ஏற்படும்.


♦படிப்பு சார்ந்த விஷயங்களுக்காக அதாவது உயர்கல்வி படிப்பதற்காக இவர்கள் கடன் சீட்டு loan வாங்கி பணத்தை செலவு செய்தார்கள் என்றால் பிறகு அதன் மூலமாக தேவையில்லாத கடன் பிரச்சனைகள் ஏமாற்றங்கள் சண்டைகள் இவர்களுக்கு வாழ்க்கையில் ஏற்படும்.


♦போலி பத்திரங்கள் ஆவணங்கள் பட்டா சிட்டா இவற்றை இவர்கள் பயன்படுத்தினார்கள் என்றால் கண்டிப்பாக மாட்டிக் கொள்வார்கள்.

அதாவது fake certificate fake documents

use செய்தார்கள் என்றால் மிகப்பெரிய பிரச்சினைகளுக்கு ஏமாற்றங்களுக்கு கண்டிப்பாக இவர்கள் வாழ்க்கையில் ஆளாகுவார்கள்.


🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷


🌹மேற்கொண்டு யாருடைய ஜாதகத்தில் எல்லாம் லக்னத்தில் இருந்து 6 ஆம் பாவத்தில் "சுக்கிரன்,சந்திரன்,புதன்,சூரியன்" இந்த நான்கு கிரகங்களில் ஏதேனும் ஒரு கிரகம் இருக்கின்றதோ அவர்கள் இந்த பதிவில் நான் சொல்லியிருப்பதை உங்களுடைய நடைமுறை வாழ்க்கையில் பொருத்திப் பாருங்கள் எல்லாம் மிகச் சரியாக இருக்கும்.


🌹இந்த சூட்சமத்தை உங்களுடைய ஜாதகத்தில் பொருத்திப் பாருங்கள் எல்லாம் மிகச் சரியாக இருக்கும்.


🌹மேலும் இந்த சூட்சமத்தை லக்னத்தில் இருந்து 6 ஆம் பாவத்தோடு தான் பொருத்திப் பார்க்க வேண்டும் ராசியிலிருந்து 6 ஆம் பாவத்தோடு பொருத்திப் பார்க்கக் கூடாது லக்னத்தில் இருந்து தான் பார்க்க வேண்டும்.



Comments