எத்தனை நாழிகை?எத்தனை நிமிடங்கள்?ஈசியாக கணக்கிடலாம்..! கிளிக் செய்யுங்கள்!.

நாம் எத்தனை மணி நேரம்?

 எத்தனை நிமிடம்? என்று சொல்வோம். ஆனால்

 நம் முன்னோர்கள் நாழிகை என்று சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாழிகை என்றால் என்ன? 

நாழிகை எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டு வருகிறது? என்பதை தெரிந்து கொள்வோம்..வாருங்கள் 


நாழிகை என்பது பண்டைய கால நேர அளவாகும். இப்போது உள்ள 1 மணி நேரக்கணக்கு போல, பழங்காலத்தில் மக்கள் நாழிகை கணக்கை பயன்படுத்தி வந்தனர். சூரியன் அல்லது பிற கிரகங்களின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நாழிகையை கணக்கிட்டு பயன்படுத்தி வந்தனர்.

எவ்வாறு என்று காண்போம்

நாழிகையை கணக்கிடுதல்..


1).1 நிமிடம் = 60 விநாடி


2).1 மணி நேரம் = 60 நிமிடங்கள்


3).1 நாழிகை = 24 நிமிடங்கள்


4).1 நாள் = 24 மணி 


5).1 நாள் = 60 நாழிகை


6).1 மணி = 2 1/2 நாழிகை


7).2 நாழிகை = 1 முகூர்த்தம்


8).2 முகூர்த்தம் = 1 சாமம்


9).60 நாழிகை = 1 நாள்


10).7 நாள் = 1 வாரம்


11).15 நாள் = 1 பக்ஷம் 


12).2 பக்ஷம் = 1 மாதம்


13).2 மாதம் = 1 ருது (பருவம்)


14).3 ருது = 1 அயனம்


15).2 அயனம் = 1 வருடம்


தற்போது நவீன கடிகாரங்களால் அந்தப் பயன்பாடு குறைந்துவிட்டாலும், அதற்கான முக்கியத்துவம் இன்றளவும் உள்ளது.நாழிகையைப் பயன்படுத்தி பூஜை, ஹோமம், திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கான நல்ல நேரத்தை கணக்கிடுவர். கிரகங்கள், நட்சத்திரங்கள், சூரிய-சந்திர நிலைகளை வைத்துப் பல சடங்குகளுக்கான சரியான நேரத்தை நாழிகையின் அடிப்படையில் தீர்மானித்து பயன்படுத்தி வருகின்றனர்.


நன்றி வணக்கம் 

வாழ்க வளர்க 

வாழ்க வளமுடன் 







Comments