சுபத்துவம் பாவத்துவம் என்றால் என்ன.?
குறிப்பிட்ட பாவகத்தையும்
அந்த பாவக அதிபதியையும்
ஒருசேர இரண்டையும்......
சுப கிரகங்களான
குரு ,சுக்கிரன் ,பௌர்ணமி சந்திரன்,
சுப பலத்தோடு இருக்கக்கூடிய
5,9 க்குடைய போன்ற கிரகங்கள் பார்த்தால்
அது சுபத்துவம்.
பாவத்தும் என்றால்..?
குறிப்பிட்ட பாவகத்தையும்
அந்த பாவக அதிபதியையும்
ஒரு சேர இரண்டையும்......
பாவ கிரகங்களான
சனி, செவ்வாய், அமாவாசை சந்திரன்
மற்றும் 6,8 க்குடைய
போன்ற கிரகங்கள் பார்த்தால்
அது பாவத்துவம்.
இது போன்று
எவ்வளவுக்கு எவ்வளவு....
ஒரு பாவகமும் பாவகத்திற்குரிய கிரகமும் ....
அசுப பலத்தோடு உள்ளதோ.?
அல்லது
சுப பலத்தோடு உள்ளதோ.?
அதற்குத் தகுந்தார் போல் அந்த குறிப்பிட்ட கிரகத்தின் காரகத்துவ பலன்களும்....
ஆதிபத்திய பலன்களும்....
அமையும்.
குறிப்பாக...
இதற்குரிய பலாபலன்களை
அதனுடைய தசா புக்தி காலங்களில் முழுமையாக அனுபவிக்க நேரிடும்..
Comments
Post a Comment