நில அளவைகள் அறிவோம். பழந்தமிழரின் அளவை முறைகள்...!

 நில அளவைகள் அறிவோம்.

பழந்தமிழரின் அளவை முறைகள்...!


நில அளவை 

100 ச.மீ                              - 1 ஏர்ஸ்

100 ஏர்ஸ்                          - 1 ஹெக்டேர் 

1 ச.மீ                                  - 10 .764 ச அடி

2400 ச.அடி                       - 1 மனை 

24 மனை                         - 1 காணி

1 காணி                            - 1 .32 ஏக்கர் 

144 ச.அங்குலம்            - 1 சதுர அடி 

435 . 6 சதுர அடி          - 1 சென்ட்

1000 ச லிங்க்ஸ்         -  1 சென்ட்

100 சென்ட்                     - 1  ஏக்கர் 

1லட்சம்ச.லிங்க்ஸ்   - 1  ஏக்கர் 

2 .47   ஏக்கர்                    - 1 ஹெக்டேர்

1 ஹெக்டேர்               = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் ) 

1 ஏக்கர்                             = 4840 குழி (Square Yard) 

100 சென்ட்                     = 4840 சதுர குழிகள் 

1 சென்ட்                          = 48.4 சதுர குழிகள்

1 ஏக்கர்                             = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter ) 

1 ஏக்கர்                             = 43560 சதுர அடி 

1 குழி (Square Yard)           = 0.8361 சதுர மீட்டர் (Square Meter)

1 ச.மீ(Square Meter)            = 1.190 குழி

1 குழி                                  = 9 சதுர அடி 

1 ச.மீ(Square Meter)           = 10.76 சதுர அடி 

1 குந்தா (Guntha)             = 121 குழி = 101.17 சதுர மீட்டர்

1 குந்தா (Guntha)             = 33 அடி * 33 அடி = 1089 சதுர அடி

100 குழி                             = ஒரு மா

20 மா                                  = ஒரு வேலி

3.5 மா                                 = ஒரு ஏக்கர்

6.17 ஏக்கர்                       = ஒரு வேலி

16 சாண்                    = 1 கோல் 

18 கோல்                   = 1 குழி

100 குழி                     = 1 மா

240 குழி                     = 1 பாடகம்

20 மா                         = 1 வேலி

முகத்தல் அளவைகள்


ஒரு ஆழாக்கு         = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.

ஒரு உழக்கு          = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.

ஒரு கலம்           = அறுபத்து நாலரை லீட்டர்.

ஒரு தூணி           = இருபத்தி ஒன்றரை லீட்டர்.

ஒரு நெய்க் கரண்டி    = தேக்கரண்டி அளவு.

ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.

ஒரு பாலாடை        = முப்பது மில்லி லீட்டர்.

ஒரு குப்பி            = எழுநூறுமில்லி லீட்டர்.

ஒரு அவுன்ஸ்        = முப்பத்தியொரு கிராம்.


முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.

ஐந்து சோடு          = ஒரு அழாக்கு.

இரண்டு ஆழாக்கு    = ஒரு உழக்கு.

இரண்டு உழக்கு      = ஒரு உரி.

இரண்டு உரி         = ஒரு நாழி.

எட்டு நாழி           = ஒரு குறுணி.

இரண்டு குறுணி     = ஒரு பதக்கு.

இரண்டு பதக்கு      = ஒரு தூணி.

மூன்று தூணி        = ஒரு கலம்.


நிறுத்தல் அளவைகள்


மூன்றே முக்கால் குன்றி மணி எடை   = ஒரு பணவெடை.

முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை   = ஒரு விராகன் எடை.

பத்து விராகன் எடை                  = ஒரு பலம்.

இரண்டு குன்றி மணி எடை           = ஒரு உளுந்து எடை.

ஒரு ரூபாய் எடை     = ஒரு தோலா.

மூன்று தோலா        = ஒரு பலம்.

எட்டு பலம்            = ஒரு சேர்.

நாற்பது பலம்         = ஒரு வீசை.

ஐம்பது பலம்          = ஒரு தூக்கு.

இரண்டு தூக்கு        = ஒரு துலாம்.


ஒரு குன்றி எடை   = நூற்றி முப்பது மில்லி கிராம்.

ஒரு பணவெடை    = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.

ஒருதோலா         = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)

ஒரு பலம்             = முப்பத்தி ஐந்து கிராம்.

ஒரு வீசை            = ஆயிரத்தி நானூறு கிராம்.

ஒரு விராகன்         = நான்கு கிராம்.


கால அளவுகள்


இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை.

இரெண்டரை நாழிகை       = ஒரு மணி.

மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.

அறுபது நாழிகை           = ஒரு நாள்.

ஏழரை நாழிகை            = ஒரு சாமம்.

ஒரு சாமம்                = மூன்று மணி.

எட்டு சாமம்               = ஒரு நாள்.

நான்கு சாமம்              = ஒரு பொழுது.

ரெண்டு பொழுது           = ஒரு நாள்.

பதினைந்து நாள்           = ஒரு பக்கம்.

ரெண்டு பக்கம்             = ஒரு மாதம்.

ஆறு மாதம்                = ஒரு அயனம்.

ரெண்டு அயனம்            = ஒரு ஆண்டு.

அறுபது ஆண்டு            = ஒரு வட்டம்.

Comments