நாய்க்கு உணவு பரிகாரம் - சூட்சுமம் 

=================================


புனர்பூசம் நாயின் வடிவம் என்பதால், உத்திரட்டாதி, பூசம் மற்றும் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், நாய்க்கு தினமும் உணவிட பல சிக்கல்களுக்கு வழிகாட்டுதல்கள் இயற்கையாக கிடைப்பதை அறியலாம்.


சதயம், திருவாதிரை மற்றும் ஸ்வாதி நட்சத்திரத்திற்கு புனர்பூசம் சம்பத்து தாரை ஆகும். நட்சத்திரத்தில் பிறந்தவர் நாய்க்கு உணவிட சர்வ சம்பத்துகள் (வளங்கள்) பெறுவதை காணலாம்.


பரணி, பூரம் மற்றும் பூராடம் நட்சத்திரத்திற்கு புனர்பூசம் சாதக தாரை ஆகும். நட்சத்திரத்தில் பிறந்தவர் நாய்க்கு உணவிட தொழில் மற்றும் கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபட சாதக சூழல் தரும்.


ரோஹிணி, அஸ்தம் மற்றும் திருவோணம் நட்சத்திரத்திற்கு புனர்பூசம் சேம தாரை ஆகும். எனவே இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நாய்க்கு உணவிட, காரிய சித்தி கிட்டும்.

Comments