ரோகிணியின் வடிவம் தேர். இது பயணிக்க உதவும் வாகனம். இந்த நட்சத்திரத்தை சுபத்தாரையாக கொண்ட கீழ்க்கண்ட நட்சத்திர நபர்கள்
1. கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
2. ரோகிணி, திருவோணம், அஸ்தம்
3. மிருகசீரிடம், அவிட்டம், சித்திரை
4. அஸ்வினி, மகம், மூலம்
5. உத்திரட்டாதி, பூசம், அனுசம்
தனது சொந்த வாகனத்தில் அல்லது சொந்த வாகனம் இல்லாதவர்கள் தனியாக எதேனும் பொது வாகனத்தில் பயணம் செய்வதை வழக்கமாகி கொள்ளுங்கள். இது உங்களுக்கு இயற்கையாக ரோகிணி வடிவ உபயோகத்தை கொடுத்து, வாழ்வில் முன்னேற்றம் தரும்.
உதாரணமாக, திருவோணத்தில் பிறந்த நடிகர் ரஜினிகாந்த் அவர்கள், அடிக்கடி தனிமையில் பயணம் செய்பவர், மேலும் வாகன பயணத்தை பெரிதும் விரும்பியவர். காலசக்கரம் அவருக்கு இயல்பிலேயே வாகனத்தில் பயணிக்கும் கண்டக்டர் வேலை கொடுத்தது. அதுபோல வாகனம் ஓட்டுவது போல அவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றிருப்பதை பார்த்திருப்பீர்கள்.
Comments
Post a Comment