லக்னாஷ்டமம்

 லக்னாஷ்டமம்

=============


சந்திராஷ்டமம் போல லக்னாஷ்டமம் என்ற ஒன்று இருக்கிறது. உங்கள் லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் கோச்சார சந்திரன் வரும் காலம் லக்னாஷ்டமம் ஆகும். உங்கள் லக்னம் வலுவிழந்திருப்பின் லக்னாஷ்டம நாளில் உங்களுக்கு பலவிதமான மன கசப்புகள், மனசோர்வு, வாக்குவாதம், பணியில் இடையூறுகள், சண்டை மற்றும் விபத்துகள் உண்டாகும். உங்கள் லக்னம் பலமானதா இல்லையா என இந்த லக்னாஷ்டம காலத்தில் அறியலாம்.




இந்த லக்னாஷ்டமம் குறைந்தபட்சமாக ஒருநாள் முழுவதும் இருக்கும். இந்த நாள் அன்று நீண்ட பயணம், முக்கிய முடிவெடுத்தல், முக்கிய நபர்களை சந்தித்தல் போன்ற முக்கியமான காரியங்களை மேற்கொள்ளாமல் இருத்தல் நலம். 


உங்கள் நட்சத்திரத்தின் சாதக தாரை தெய்வ வழிபாடு இதற்கான பரிகாரமாகும்.

Comments