தனம் கிடைக்கும் யோக ஜாதகம்:

 💥பிறரின் தனம் கிடைக்கும் யோக ஜாதகம்:


💥யோகம்:


    அனைத்துவிதமான  சந்தோஷத்தையும் அனுபவிப்பதை யோகம் என்று அழைக்கிறோம். அந்த யோகத்தை அனுபவிக்க பணம் தேவை.


       💥  பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை.💥


        பிறருடைய பணம் சிலருக்கு எளிதில் கிடைத்து அதன் மூலம் வசதி வாய்ப்பை பெறும் ஜாதக அமைப்பை இப்பதிவில் காண்போம்.




👉பிறருடைய பணம்/பொருள்:


    பிறருடைய பணமும் பொருளும் ஒருவருக்கு கீழ்கண்ட ஏதோ ஒரு வகையில் கிடைக்கும்.


 👉லாட்டரி சீட்டு:


     பரிசுசீட்டு வாங்கி அதில் பணம் கிடைக்காத லட்சகணக்கான நபரின் பணம் முதல் பரிசு கிடைத்தவருக்கு வருவது


👉குதிரை ரேஸ், சூதாட்டம்(சீட்டு...):


     இத்தகைய விளையாட்டுகளின் மூலமும் பிறரின் பணம் வெற்றி பெற்ற நபருக்கு கிடைக்கும்.


👉பரம்பரை சொத்து:


    மூதாதையரின் சொத்து அல்லது தந்தையின் சொத்து அல்லது அறிந்தவரின் சொத்துக்கள் கிடைத்தல்.


👉புதையல்:


    முகம் தெரியாத நபர் சேமித்து பாதுகாத்து வைத்து இருந்த புதையல் அதிர்ஷ்ட வசமாக கிடைப்பது.


     இது போல பிறரின் தனம் எளிதில் கிடைத்து சிலர் சுகமாக வாழ்வார்கள்


    அந்த நபர்களின் ஜாதக அமைப்பு எப்படி இருக்கும் என்பதை காண்போம்.



👉ஜாதக விதி:


   ஒருவரின் பிறந்த கால ஜாதகத்தில் லக்னத்துக்கு இரண்டாமிடத்தில் சுபகிரகங்களான குரு சுக்கிரன், வளர்பிறை சந்திரன் போன்ற சுபகிரகங்கள் அமர்ந்து அதனுடன் இரண்டாமிட அதிபதியும் இணைந்து பலம் பெற்று இருந்தால் பிறருடைய தனம் எளிதில் கிடைக்கும்.

நன்றி நன்றி நன்றி 


Comments