லக்னத்தில் இருந்து,,
2 வது வீடு எல்.கே.ஜி.
4 வது வீடு ஐந்தாம் வகுப்பு வரை
5 வது வீடு பட்டப்படிப்பு வரை
9 வது வீடு முதுகலைப் படிப்பு வரை
என்கிற ரீதியில் வரையறுக்கப்பட்டுள்ளது.
இதில்,,,
தேர்வில்.,,ஒருவர்
பெறும் மதிப்பெண்களுக்கு எந்த பாவகத்தை பார்க்க வேண்டும்.?
பொதுவாக..
லக்னத்தலிருந்து..
2 ஆம் வீடு
4 ஆம் வீடு
5 ஆம் வீடு
அதுபோக..
புதன், வியாழன் ஆகிய
கிரகங்களின் வலிமை மூலமாக....
ஒருவருடைய
கல்வி சம்பந்தப்பட்ட
பலம் பலவீனம்
அறியலாம்..
ஆனால்..
மதிப்பெண் என வரும் பொழுது.!
மதிப்பெண்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு இருக்குமா.?
அல்லது
எதிர்பார்த்ததை விட
அதிகமாக இருக்குமா.?
என்பதை..
குறிப்பிட்ட
அந்த நேரத்தில் ஜாதகருக்கு நடக்கும் தசா புக்தியே...!!!
முடிவு செய்யும்.
ஏனெனில்..
மதிப்பெண் என்பது...
ஒருவர்...
10. ரூபாய்
100. ரூபாய்
1000. ரூபாய்
10000.ரூபாய்
என்கிற ரீதியில்..
பணம் சம்பாதிப்பதை போல தான்.
மதிப்பெண்ணும்.!!
50%
60%
70%
85%
95%
99%
இது போன்று மாணவர் மதிப்பெண்களை சம்பாதிக்கிறார்.
ஜாதகத்தில் 10 ஆம் வீடு என்பது
கர்ம ஸ்தானம் அதாவது
செயல் ஸ்தானம் ஆகும்.
அதாவது,,
தொழில் செய்தல்
வியாபாரம் செய்தல்
வேலை செய்தல்
போன்று...
பரிட்சை எழுதுவதும் அடங்கும்.
11 ஆம் வீடு செய்த
கர்மங்களினால் கிடைக்கக்கூடிய
லாப வீடு.
அதாவது,,, பணத்தை போல
மதிப்பெண்ணையும் குறிக்கும்.
9 ஆம் வீடு
அதிர்ஷ்டத்தை குறிக்கும் வீடு.
பொதுவாக,,
ஒரு செயலை செய்து விட்டால் மட்டும்
அதற்க்குறிய அங்கீகாரமோ வெகுமதியோ லாபமோ கிடைத்து விடும் என்று உறுதியாக சொல்வதற்கில்லை.
அதற்கு சிறிது அதிர்ஷ்டமும் வேண்டும்.
அதிர்ஷ்டம் என்பது..
கடவுளின்..!!!
கடைக்கண் பார்வை போன்றது.
Comments
Post a Comment