தென்கிழக்கில் இருக்கும் சமையலறை சுக்கிரனை குறிக்கும். அந்த சமையலறையை எந்த ஒரு பெண் சுத்தமாகவும் நறுமணமாகவும் வைத்துக் கொள்கிறார்களோ அந்த வீட்டில் செல்வமும் பொருளாதாரம் உயரும் நல்ல பணப்புழக்கம் ஏற்படும்.
அதுபோல தென்கிழக்கு பகுதியில் நாணயங்களை சேமித்து வைக்கும் பழக்கத்தை ஒரு பெண் ஏற்படுத்திக் கொண்டால், அந்த பழக்கம், வீட்டில் நல்ல பொருளாதாரம் முன்னேற்றத்தை உருவாக்கும். சேமிப்பு என்பது சனியையும், நாணயங்கள் என்பது சுக்கிரனையும் குறிக்கும். இந்த இரு கிரக சேர்க்கை நாம் இயல்பாக ஏற்படுத்திக் கொள்ளும்போது, நமது வீட்டில் வசிக்கும் யாரேனும் ஒருவருக்காவது சுக்கிரன் சனி இணைவு (சுக்கிரனுக்கு திரிகோண ஸ்தானத்தில் சனி இருந்தாலும்) இருக்கும் பட்சத்தில், இந்த சமையலறையில் நாணயங்களை சேமிக்கும் பழக்கம், நல்ல செல்வ வளத்தை தந்தருளும்.
Comments
Post a Comment